Latest Updates
-
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா?
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 25 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்..
Sun Transit In Rohini Nakshatra On 25 May 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

தற்போது சூரியன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் மே 25 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சூரியன் கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி, ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். இந்த சந்திரனின் நட்சத்திரத்திற்குள் சூரியன் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதில் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால், தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும், நிதி ஆதாயங்களும் கிடைக்கப் போகிறது. இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் நிதி ரீதியாக நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வேலையை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
ரிஷபம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் முடிவெடுக்கும் திறன் மேம்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதுவும் இந்த ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் இரட்டிப்பு லாபத்தைத் தரும். ஆரோக்கியம் மேம்படும். மிகுந்த ஆற்றலுடன் செயல்படுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிகவும் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தாலோ அல்லது அரசு ஒப்பந்தத்தைப் பெற நினைத்தாலோ, இக்காலத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களுடனான உறவு கிடைக்கும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட வலுவாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்களின் செயல்திறன் பாராட்டப்படும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். வருமானம் அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




