Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு திறமையான அரசியல்வாதி, ஒரு சிறந்த அறிஞர், இராஜதந்திரி மற்றும் பொருளாதார நிபுணர். சந்திரகுப்த மௌரியரை மன்னராக்கியது அவரது இராஜதந்திரமும், வியூகமும்தான். சாணக்கியர் வியூகங்கள், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவு பெற்றவர். சாணக்கியர் தனது வாழ்க்கையில் பல புத்தகங்களை எழுதினார். அதில் அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் இன்றுவரை மிகவும் பிரபலமானவையாக இருக்கின்றனர். ஏனெனில் இதில் வாழ்க்கை தொடர்பான பல முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுபவராக இருக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் ஆசையாகும், ஆனால் அந்த ஆசை வெகுசிலருக்கே நிஜமாகிறது. பலரும் சமூகத்தில் தங்கள் மீதான மரியாதையை அதிகரிக்கவும், அனைவரும் தங்களை மதிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். ஆனால், அந்த மரியாதையைப் பெறுவது நம் கைகளிலேயே உள்ளது என்று சாணக்கியர் கூறுகிறார்.
சிலர் இயல்பாகவே சமூகத்தில் மரியாதையைப் பெறுகிறார்கள். ஆனால், அதை நாம் உழைப்பின் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. பணம் அல்லது அதிகாரம் இல்லாமலேயே, சில முக்கியப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் மரியாதையைப் பெற முடியும். அதற்கான வழிகளை சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். அவை என்னென்ன வழிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்
வாக்குறுதி கொடுப்பது என்பது மிகவும் எளிது, ஆனால் அதைக் காப்பாற்றுவதே அவர்கள் மீதான நம்பிக்கையை வளர்க்கிறது. பணிகளைச் சரியான நேரத்தில் முடிப்பது, ரகசியங்களைக் காப்பது மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஆகியவை நீங்கள் நம்பகமானவர் என்பதைக் காட்டுகின்றன. இது உங்களுக்கு சமூகத்தில் மரியாதையையும் பெற்றுத் தருகிறது.
குறைவாக பேசி அதிகம் கவனிக்க வேண்டும்
சாணக்கிய நீதி படி சிறந்த தகவல் தொடர்பு என்பது வெறும் பேசுவது மட்டுமல்ல, மற்றவர் சொல்வதைக் கூர்ந்து கவனிப்பதும் ஆகும். மற்றவர் பேசும்போது குறுக்கிடாமல் கேட்கக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களின் கருத்துகளை மதிக்கும்போது, அவர்களும் உங்கள் கருத்துகளை மதிப்பார்கள். இத்தகைய பரஸ்பர மரியாதை கண்ணியத்தை உருவாக்குகிறது.
அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டும்
அனைவரையும், அவர்களின் தகுதியின் அடிப்படையில் ஏற்றுதாழ்வுகள் இன்றி அன்புடன் நடத்துங்கள். நன்றி சொல்வது மற்றும் மற்றவர்களுக்கு உதவுவது போன்ற எளிய செயல்கள் சமூகத்தில் ஒருவருக்கு மரியாதையைப் பெற்றுத் தரும். மேலும், நெருக்கடியான சூழ்நிலைகளிலும் அமைதியாக இருக்க வேண்டும், அது முதிர்ச்சியையும் தலைமைப் பண்பையும் வெளிப்படுத்துகிறது.
புது விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்
வாழ்க்கையில் எப்போதும் தொடர்ந்து கற்றுக்கொண்டு தங்களை வளர்த்துக்கொள்பவர்களை சமூகத்தில் அனைவரும் மதிக்கிறார்கள். நேர்மையான மற்றும் கனிவான செயல்களின் மூலமே மரியாதையைப் பெற முடியும்; சுயக்கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால், அந்த மரியாதை இயல்பாகவே உங்களைத் தேடி வரும் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
