Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Iyengar Style Appala Kuzhambu Recipe in Tamil: தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை. அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியென்றால் ஐயங்கார் ஸ்டைலில் ஒருமுறை அப்பளக் குழம்பை முயற்சி செய்து பாருங்கள்.

பொதுவாக ஐயங்கார் ஸ்டைல் குழம்பு வகைகள் என்றாலே அதற்கு தனித்துவமான சுவையும், வாசனையும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த அப்பளக் குழம்பும் அதற்கு விதிவிலக்கல்ல. சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த அப்பளக் குழம்பு புதுவிதமான சுவையைக் கொடுக்கும். இந்த ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு செய்வதற்கு எளிதானது, இதன் சுவையும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும்.
உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
- அப்பளம் - 3
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- வெந்தயம் - கால் ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- வர மிளகாய் - 1
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- வெல்லம் - 1/2 ஸ்பூன்
- அரிசி மாவு - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். அப்பளத்தைச் சிறிய துண்டுகளாக உடைத்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- பின்னர் அதே கடாயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், சீரகம் மற்றும் வர மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
- பின்னர் உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பை சேர்த்து தாளிக்கவும். பருப்பு பொன்னிறமாக மாறியதும் அடுப்பை குறைத்து வைக்கவும்.
- அதன்பின் மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு, பெருங்காயம் மற்றும் நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- இவற்றை ஒரு நிமிடம் வதக்கி, உடனடியாக 1 கப் புளிச்சாறு சேர்க்கவும்.
- பின்னர் வெல்லம் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை குழம்பைக் கொதிக்க விடவும்.
- குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும் போது அரிசி மாவை சிறிதளவு தண்ணீரில் கட்டிகள் இல்லாமல் கரைக்கவும்.
- கரைத்த அரிசி மாவை குழம்பில் சேர்த்து, அது கெட்டியாகி எண்ணெய் மேலே மிதக்கத் தொடங்கும் வரை கொதிக்க விடவும்.
- இந்த நிலையில் வறுத்த அப்பளத்தை குழம்பில் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.
- அப்பளம் குழம்பில் நன்கு ஊறியவுடன் அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் சுவையான ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications