For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுக்கு புற்றுநோய் உள்ளதற்கான சில அறிகுறிகள்

பெண்களுக்கு மார்பக புற்றுநோய்தான் அதிகம் ஏற்படும் என்று நினைத்தால் அது தவறானது ஏனெனில் மார்பக புற்றுநோய் தவிர்த்து பல புற்றுநோய்கள் பெண்களை தக்க வாய்ப்புள்ளது. ஆரம்ப நிலையிலேயே இதனை கண்டறிந்து விட்டால

By Saranraj
|

உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கு காரணம் பெண்களுடைய குறைவான நோயெதிர்ப்பு சக்தியும், புற்றுநோய் பற்றிய போதிய விழிப்புணர்வும் இல்லாததும்தான்.

symptoms of various cancers women often ignore

பெண்களுக்கு மார்பக புற்றுநோய்தான் அதிகம் ஏற்படும் என்று நினைத்தால் அது தவறானது ஏனெனில் மார்பக புற்றுநோய் தவிர்த்து பல புற்றுநோய்கள் பெண்களை தக்க வாய்ப்புள்ளது. ஆரம்ப நிலையிலேயே இதனை கண்டறிந்து விட்டால் இவற்றை குணப்படுத்துவது எளிது. இந்த பதிவில் பெண்கள் அலட்சியமாக நினைக்க கூடாத புற்றுநோயின் சில அறிகுறிகள் என்னவென்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீக்கம்

வீக்கம்

அதிகம் சாப்பிட்ட பிறகோ, நீர் குடித்த பிறகோ அல்லது மாதவிடாயின் போதோ வயிற்று பகுதியில் வீக்கம் ஏற்படுவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இந்த வீக்கம் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் இந்த வீக்கம் கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். பசியின்மை, அடிவயிற்றில் வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவையும் இதன் அறிகுறியாக இருக்கலாம்.

பிறப்புறுப்பில் துர்நாற்றம்

பிறப்புறுப்பில் துர்நாற்றம்

பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுதல், அடர் நிற சிறுநீர், போன்றவை கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாகும்.இது மாதவிடாய் காலத்திலோ, அதற்கு பிறகோ ஏற்படலாம். சிலசமயம் இரத்தக்கசிவு கூட ஏற்படலாம்.

சோர்வு

சோர்வு

உடல் உழைப்பாலோ அல்லது ஓய்வின்மையாலோ ஏற்படும் சோர்வானது இரண்டு, மூன்று நாட்களில் குணமாகிவிடும். போதுமான ஓய்வு எடுத்தபின்னும் சோர்வு குணமடையவில்லை எனில் அது லூக்கோமியா அல்லது வயிறு புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஒருவேளை லூக்கோமியவாக இருப்பின் இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகரித்து பின்னர் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இது அனிமியா எனப்படும். சிவப்பு அணுக்கள் உற்பத்தியின் குறைவே சோர்வுக்கு காரணமாகும்.

எடை இழப்பு

எடை இழப்பு

உங்களின் முயற்சி எதுவும் இன்றி உடல் எடை தானாக குறைந்தால் அதற்காக மகிழ்ச்சி அடையாதீர்கள். ஏனெனில் இது நுரையீரல், கணையம் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய் காரணமாக கூட இருக்கலாம். இந்த புற்றுநோய் வந்தால் 4 முதல் 5 கிலோ வரை காரணமே இன்றி எடை இழப்பு ஏற்படும். புற்றுநோய் செல்கள் அதிகரிக்க உங்கள் ஆற்றலை எடுத்துக்கொள்வதால் உங்களுக்கு எடை இழப்பு ஏற்படலாம்.

மார்பகத்தில் மாற்றம்

மார்பகத்தில் மாற்றம்

மாதவிடாயின் போதோ, கர்ப்பகாலத்தின் போதோ உங்கள் மார்பகத்தில் நீங்கள் சில மாற்றங்களை உணரலாம். மார்பகத்தில் ஏற்படும் அனைத்து மாற்றங்களும் புற்றுநோய்க்கான அறிகுறி அல்ல ஆனால் அதற்காக அவற்றை அலட்சியமாக விடுவது நல்லதல்ல. ஏதேனும் கட்டிகள் இருந்தாலோ, அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, சிவப்பு நிறத்தில் தடிப்பு, அரிப்பு மற்றும் மார்பகத்திற்கு அடியில் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

காய்ச்சல்

காய்ச்சல்

காரணம் கூற இயலாத அடிக்கடி ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் லூக்கோமியா அல்லது லிம்போமா நோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த இரண்டுமே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் நீங்கள் எளிதில் பல நோய்களுக்கு ஆளாவீர்கள்.

தொடர்ச்சியான இருமல்

தொடர்ச்சியான இருமல்

இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல் இருப்பின் நீங்கள் மருத்துவரை அணுகவேண்டியது அவசியமாகும். தொடர்ச்சியான இருமல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். சிலசமயம் இது மூச்சுக்குழலில் ஏற்படும் பாதிப்புகளாலும் ஏற்படலாம்.

மலத்தில் இரத்தம்

மலத்தில் இரத்தம்

குடலில் ஏற்படும் புற்றுநோய் முதலில் தெரியாவிட்டாலும் வயிற்றுவலி, மலச்சிக்கல், சோர்வு, மலத்தில் இரத்தம் போன்றவற்றின் மூலம் இதனை கண்டறியலாம். இந்த குடல் புற்றுநோய் பெருங்குடல் அல்லது மலக்குடலில் ஏற்படும். இதனால் பெருங்குடலின் அகலம் அதிகரிக்கும்.

மூச்சு திணறல்

மூச்சு திணறல்

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது உணவுக்குழாயில் ஏற்படும் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனால் உணவுக்குழாயின் அளவு சுருக்கப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சில பெண்களுக்கு தொண்டையில் ஏதோ சிக்கியுள்ள உணர்வு எப்பொழுதும் இருக்கும். இந்த புற்றுநோய் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டால் நீர்ம உணவுகளை உண்பதே கடினமாகிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

symptoms of various cancers women often ignore

With the increased awareness of breast cancer, examining your breasts on a daily basis must have become a habit. However, there are several other forms of cancer that show common and subtle signs which may be often ignored.
Story first published: Monday, September 10, 2018, 18:31 [IST]
Desktop Bottom Promotion