இது கணைய புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்!

Subscribe to Boldsky

இன்றைக்கு வயது வித்யாசமின்றி மக்கள் பல நோய்களால் பாதிக்கப்படுவது இன்று சகஜமாகிவிட்டது. வயிற்றின் அடிப்பகுதியில் அமைந்திருக்கக்கூடிய கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டு அதனால் மரணம் ஏற்படவும் அதிகம்வாய்ப்புண்டு. அமெரிக்காவில் ஏராளமானோர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த கணைய புற்றுநோய் முதலில் கணையத்தில் உள்ள திசுக்களை பாதிக்கும். மெல்ல பின்னர் செல்களை பாதிக்கச் செய்து ஒட்டுமொத்த இயக்கத்தையே பாதித்து விடும். கணையம் நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகக்கூடிய என்சைம்களை கொடுப்பதற்கும் இன்ஸுலின் உற்பத்திக்கும் மிகவும் அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் :

காரணம் :

கணையத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கு இது தான் முதன்மையான காரணம் என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. மாறாக அதீத உடல் எடை, சர்க்கரை நோய், மரபணு குறைபாடுகள், புகைப்பழக்கம், ஆகியவை ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனை ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பது சிரமம் என்பதால் கணையத்தில் புற்று நோய் பாதிப்பு உண்டானால் மரணிக்கும் நிலை ஏற்படுகிறது.

கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டால் அவை எளிதாக பிற உறுப்புகளுக்கும் வேகமாக பரவி விடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இங்கே கணையப் புற்றுநோய் அல்லது கணையத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உங்களுக்கு வெளிப்படக்கூடிய சில அறிகுறிகளை பட்டியலிட்டிருக்கிறோம். இந்த அறிகுறிகள் எல்லாம் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றிடுங்கள்.

கீழ்முதுகு வலி :

கீழ்முதுகு வலி :

கீழ் வயிறு அல்லது அல்லது கீழ் முதுகு வலி அடிக்கடி ஏற்பட்டால் அவை தான் கணையப்புற்றுநோய்க்கான முதல் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் முதலில் வயிறு வலிக்கும் பின்னர் நாட்கள் செல்ல செல்ல முதுகுவலி ஆரம்பமாகும். பெரும்பாலும் வயிற்று வலி என்றால் அஜீரணக்கோளாறு என்று நினைத்து கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.

அஜீரணக் கோளாறினால் ஏற்படுகிற வயிற்று வலிக்கும் பிற வயிற்று வலிக்கு வித்யாசம் கண்டு உணருங்கள்.

மஞ்சள் காமாலை :

மஞ்சள் காமாலை :

கணையத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உங்களுக்கு மஞ்சள் காமாலை ஏற்படும். கணையத்தில் ஏதேனும் கட்டி ஏற்பட்டால் கல்லீரலுக்கு மஞ்சள் மற்றும் பிரவுன் நிறம் கலந்த ஒரு திரவத்தை சுரக்க ஆரம்பிக்கும். இந்த திரவம் சுரப்பதினால் ரத்தத்தில் பிலிருபின் அதிகரிக்கும். இவை தான் மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.

மஞ்சள் காமாலை ஏற்பட்டு அதிக நாட்கள் இருக்கிறது குறையவேயில்லை என்றால் கணையத்தில் புற்றுநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

எடை குறைவு :

எடை குறைவு :

காரணமேயில்லாமல் திடீரென்று அளவுக்கு அதிகமாக எடை குறைவதும் ஆபத்தானது. கணையத்திலிருந்து பிற உறுப்புகளுக்கு கட்டி பரவியிருக்குமானால் இப்படி திடீர் எடை குறைவு ஏற்படுவதுண்டு.

இந்நேரத்தில் உங்களது செரிமானமும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதால் எனர்ஜியும் குறைந்துவிடும். உணவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய ஆற்றல் உடலுக்கு வந்து சேராது.

செரிமானக் கோளாறுகள் :

செரிமானக் கோளாறுகள் :

கணையத்தில் கட்டி வளர்ந்து விட்டதென்றால் அது வயிற்றிலிருக்கக்கூடிய பிற உறுப்புகளையும் தொந்தரவு செய்ய ஆரம்பிக்கும். இதனால் பிற உடலியல் செயல்பாடுகளும் குறைய ஆரம்பிக்கும். வயிற்றில் அதிகமாக அமிலம் சுரப்பது நெஞ்செரிச்சல் ஏற்படுவது. வழக்கமாக சாப்பிடும் உணவே நம்மால் சாப்பிட முடியாமல் போவது ஆகியவை ஏற்படும்.

இது தொடர்ந்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் கூட ஏற்படலாம்.

சிறுநீர் :

சிறுநீர் :

சிறுநீரின் நிறம் மாறியிருக்கும். இளம் மஞ்சள், பிரவுன் அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருக்கும். சிலருக்கு சில நேரங்களில் சிறுநீரில் ரத்தம் கூட சேர்ந்து வரும். உணவில் எந்த மாற்றம் செய்யாமல் இப்படி சிறுநீர் நிறத்தில் மாற்றம் தெரிந்தால் கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம். பெரும்பாலும் சிறுநீர் இப்படி நிறமாறி வந்தால் சிறுநீர் பாதை தொற்றாக இருக்கும் என்று நினைத்து விடுகிறோம் ஆனால் பிற அறிகுறிகளுடன் இதுவும் சேர்ந்துவிட்டால் ஜாக்கிரதை.

மலம் :

மலம் :

சிறுநீர் மட்டுமல்லாது மலத்தின் நிறமும் மாறியிருக்கும். கணையத்தில் கட்டியிருப்பதினால் உணவு சரியாக செரிமானம் ஆக முடியாது. இதனால் அதன் தாக்கம் உங்கள் மலத்திலும் தெரியும். வழக்கமாக இல்லாது நிறம் மாறியிருக்கும். மலம் வெளியேறும் போது வலியெடுக்கும்.

ஒமட்டல் :

ஒமட்டல் :

செரிமானத்திற்கு அவசியமான உறுப்பாக கணையம் இருக்கிறது. கணையத்தில் கட்டி ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த செரிமானத்தையும் பாதிக்கும். இதனால் உமட்டல், கேஸ் பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக உணவு எடுத்துக் கொண்டவுடன் வாந்தி மற்றும் ஒமட்டல் ஏற்பட்டால் கூடுதல் கவனமுடன் இருக்கவும்.

பசியின்மை :

பசியின்மை :

உணவு செரிமானம் ஆவதில்லை என்பதால் அதிகமாக பசிக்காது.எப்போதும் வயிறு நிறைந்து இருப்பதைப் போன்ற உணர்வே மேலோங்கும். கணையத்தில் கட்டியின் அளவு பெரிதாக பெரிதாக இதைவிட இன்னும் அதிகமான உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

சர்க்கரை :

சர்க்கரை :

உடலில் தீடிரென்று சர்க்கரை அளவு அதிகரிப்பது அல்லது குறைவது ஆகியவையும் கணையப் புற்றுநோய்க்கான ஆரம்ப கால அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கணையத்தில் ஏற்படுகிற கட்டி இன்ஸுலின் உற்பத்தி செய்யும் செல்களை எல்லாம் அழித்திடும் என்பதால் அது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது, எப்போதும் வயிறு ஃபுல்லாக இருப்பது,கை கால் விரல்களில் மரத்துப் போவதைப் போன்ற் உணர்வு, பார்வைக்கோளாறு ஆகியவை ஏற்பட்டால் கணையத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

சோர்வு :

சோர்வு :

வயிறு ஃபுல்லாக இருப்பது போல தோன்றுகிறதே தவிர உண்மையில் உங்களுடைய வயிறு நிறையவில்லை. உணவிலிருந்து கிடைக்கூடிய சத்துக்கள் எதுவும் கிடைக்காததாலும் ஏற்கனவே கிடைத்துக் கொண்டிருந்த குளுக்கோஸும் தடைப்பட்டதால் அதீத சோர்வாக உணர்வீர்கள்.

நாட்கணக்கில் இப்படி உணர்கிறீர்கள் மேலே சொன்ன அறிகுறிகளுடன் இந்த அதீத சோர்வும் உங்களுக்கு இருக்கிறது என்று சொன்னால் கண்டிப்பாக மருத்துவரை சந்திப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Symptoms of Pancreatic Cancer

    Symptoms of Pancreatic Cancer
    Story first published: Monday, June 18, 2018, 17:55 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more