Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
எல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... சபாஷ்... அப்போ உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...
எதுக்கெடுத்தாலும் நோ சொல்லும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அதை வைத்து நாம் எப்போதும் அவர்கள் எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாகவோ அல்லது அவர் எப்போதும் அப்படித்தான் என்று சொல்லிவிட்டு, அவர்கள் சொல்வதை பொ
மனிதனின் மனசு ஒரு குரங்கு மாதிரி என்பார்கள். ஆம், இல்லை என்ற இரு வார்த்தைக்குள்ளே எப்பொழுதும் குழம்பிக் கொண்டே இருக்கும். உதாரணமாக ஒரு விஷயத்திற்கு நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு சரி என்று சொல்லி விட்டாளே போதும் அதை உங்கள் மனநிலை சும்மாவே விடாது. ஏன் சரின்னு சொன்னோம், இல்லை என்று சொல்லி இருக்கலாமா என்று ஒரு நிலையில் இருக்கவே இருக்காது. உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நபர் ஒரு பார்ட்டிக்கு உங்களை அழைத்தால் என்ன செய்வீர்கள்?
அன்னைக்கு உங்களுக்கு அதிகமான வேலை வேற இருக்கிறது. அன்பான ஒருவர் கூப்பிடும் போது இல்லை என்று சொல்லவும் மனம் இருக்காது அல்லவா. கண்டிப்பாக இந்த புலம்பல் உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டையுமே பாதிப்படையச் செய்து விடும். எப்பொழுதும் நம்மால் செய்ய முடியாத ஒரு விஷயத்திற்கு நாம் சரி என்று சொல்வது நல்லது கிடையாது. இல்லை என்றும் சொல்லிப் பழக வேண்டும். அப்பொழுது தான் நம்முள் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

சரி எப்படி நமது உடல் மற்றும் மனம் மொழியை கண்டறிந்து செயல்படுவது, நம் மனதில் ஏற்படும் குழப்பமான நிலையை எப்படி கையாள்வது அதற்காக சில தீர்வுகளை இங்கே கூற உள்ளோம்.

இல்லை என்று சொல்வதன் பயன்
நீங்கள் ஒரு விஷயத்திற்கு உங்கள் மனதின் மொழியை புரிந்து கொண்டு இல்லை என்று சொல்லிப் பாருங்கள். கண்டிப்பாக அது உங்களுக்கு நன்மை அளிக்கும். இதி உங்கள் மன நலத்தை மட்டுமல்ல உடல் நலத்தையும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.

மன அழுத்தத்தை தடுத்தல்
நெருங்கிய நண்பர்களின் நிகழ்ச்சி அழைப்பு, அன்பானவர்களின் அழைப்பு, அன்பானவரின் வேண்டுகோள் போன்றவை உங்கள் உறவுகளை நீடிக்கலாம். ஆனால் இந்த அழைப்புக்கு சரி என்று சொல்லுதல் ஒரு முறை அல்லது இரு முறை வேண்டும் என்றால் உங்களுக்கு பாரமாக இல்லாமல் இருக்கலாம். அடிக்கடி நிகழ்ந்தால் கண்டிப்பாக உங்கள் மனதில் ஒரு பாரத்தை ஏற்படுத்தி விடும். இதுவே பின்னர் உங்கள் மனதில் மன அழுத்தத்தையும் ஏற்படுத்த ஆரம்பித்து விடும். எனவே நீங்கள் இல்லை என்னால் வர முடியாது போன்ற பதிலை கொடுக்கவும் தயங்காமல் கற்றுக் கொள்ள வேண்டும். இது உங்களுக்கு அநாவசியமான மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவும்.

சொந்த விஷயத்திற்கு அதிகம் நேரம் ஒதுக்குங்கள்
நீங்கள் நாள் முழுவதும் உங்கள் ஆபிஸ் வேலையே செய்து கொண்டு இருந்தால் சோர்வடைந்து விடுவீர்கள். எனவே அவ்வப்போது மனதிற்கு ரிலாக்ஸாக உங்களுக்கு பிடித்த இடங்களில் நேரத்தை செலவிடலாம், பிடித்த பொழுது போக்கு விளையாட்டுகள், பிடித்த புத்தகங்கள் படித்தல் என்று உங்களுக்காக சற்று நேரத்தை ஒதுக்குங்கள். இது உங்கள் மனதை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

சுய மரியாதை
நீங்கள் செய்யா முடியாத ஒரு விஷயத்திற்கு 'சரி' என்று சொல்லி செய்ய முடியாமல் போனால் இப்படியே நீங்கள் செய்து வந்தால் கண்டிப்பாக ஒரு நாள் உங்களை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடக் கூடும். இது உங்கள் சுய மரியாதையை பாதிக்கும். எனவே உங்களால் முடியாத விஷயத்திற்கு 'இல்லை' என்று சொல்லி விடுங்கள். இது உங்கள் வாக்கிலுள்ள உண்மையை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறும். "வாக்கு கொடுத்தால் அவர் காப்பாற்றுவார்" என்று உங்களை எல்லாரும் பாராட்டுவார்கள். உங்கள் சுய மரியாதையும் உயரும். இதுவும் உங்கள் உடல் மற்றும் மன நிலையை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை
உங்கள் பிஸியான வேலைக்கிடையில் உங்கள் மனதின் ஓசையை கேட்க உங்களுக்கு நேரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் மனதிற்கு கொஞ்சம் அமைதியான ஒய்வு அவசியம். எனவே தினமும் வேலைக்கு போகுவதற்கு முன் இயற்கையுடன் ஒரு 30 நிமிட நடைபயிற்சி, வேலை முடிந்து களைப்பு போக உப்பு நீரில் கால்களை கழுவுதல் போன்ற செயல்கள் உங்கள் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும்.

சீரணமின்மையை தடுத்தல்
உங்கள் மனதில் ஏற்படும் மன அழுத்தம் உங்கள் சீரண சக்தியையும் பாதிக்கும். இதனால் குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வயிற்று போக்கு போன்ற பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
எனவே உங்கள் மன அழுத்தத்தை துரத்தி விட்டாலே போதும் உங்கள் உடல் 100 வருஷம் இளமையாக இருக்கும். கடுமையான வயிற்று போக்கை சந்திக்கும் மக்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே உங்கள் மன அழுத்தத்தை முதலில் தவிருங்கள்.

உயர் இரத்த அழுத்தம்
நமக்கு ஏற்படும் மன அழுத்தமும் உயர் இரத்த அழுத்தமும் ஒன்றோடொன்று இணைந்த விஷயம் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே 'இல்லை அல்லது முடியாது' என்று ஒரு விஷயத்தில் சொல்ல முடியாமல் ஏற்படும் மன அழுத்தம் கண்டிப்பாக உங்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு பக்கவாதம், இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே "இல்லை" என்று சொல்லி பழகுங்கள். உயர் இரத்த அழுத்தம் இல்லாமல் நீடுழி வாழலாம். மேலும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க தினமும் 2 வாழைப்பழங்களை சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும்.

நாள்பட்ட தீராத தலைவலி
உங்கள் இரத்தத்தில் திடீரென சர்க்கரை அளவு அதிகரித்தால் அல்லது மன அழுத்தம் ஏற்பட்டால் உங்களுக்கு தலைவலி உண்டாகும். உங்கள் மன அழுத்தம் நமது நெற்றி மற்றும் கழுத்துப் பகுதியில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை உண்டாக்குகிறது.
எனவே நீங்கள் எப்பொழுதும் மன அழுத்தம் இல்லாத நபராக இருந்தால் உங்கள் தலைவலியும் பறந்தே போகும்.

தரமான தூக்கம்
நீங்கள் "இல்லை" என்று மனசார ஒரு விஷயத்திற்கு சொல்லி விடும் போது அது உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை தரும். நல்ல தூக்கம் நல்ல உடல் நலம் மற்றும் சரும அழகையும் காக்கும். இதனால் நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
அவ்வளவு எளிதல்ல.

பட்டென சொல்லுங்கள்
உங்கள் நண்பர் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தால் வர முடியாததை தெளிவாக சொல்லி விடுங்கள். அதற்காக வருந்துகிறேன் என்று சொல்லுங்கள். உங்களது பதிலை எளிமையாகவும், உறுதியானதாகவும் வைத்திருங்கள். நீண்ட சாக்கு போக்குகளை தவிருங்கள்.
அந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளுங்கள். உங்களுக்கு இன்னமும் முக்கியமாக கருதப்பட்டால் கண்டிப்பாக அதற்கு "சரி" சொல்லி விடுங்கள். நீங்கள் அப்படியும் "இல்லை" என்று சொன்னால் அது உங்கள் ஈகோவை காட்டும். உங்கள் மனதிலிருந்து ஆராய்ந்து "இல்லை" என்பதை கூறுங்கள். உங்கள் மனது உணரும் போது மட்டும் சொல்லுங்கள்.
எனவே இனி உங்கள் மனதின் மொழியை புரிந்து கொண்டு நடங்கள். சரியான இடத்தில் "இல்லை", "ஆம்" என்று சொல்லி வந்தாலே போதும் நம் பாதி மன அழுத்தம் காணாமல் போய் விடும். மனச எப்போதும் லேசா வைச்சுகோங்க. சந்தோஷமாக வாழலாம்.



Click it and Unblock the Notifications