Latest Updates
-
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும்
புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கமே வரலையா?... இத செய்ங்க... நிம்மதியா தூங்குவீங்க...
நல்ல தூக்கம் உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் நல்லது என்பார்கள்விடுமுறை நாட்களில் தான் நாம் நிறைய திட்டங்கள் போட்டு இருப்போம். உறவினர்களை சந்திப்பது, நண்பர்களுடன் வெளியே செல்லுதல், குடும்பத்துடன் இன்
நல்ல தூக்கம் உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் நல்லது என்பார்கள். ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கொஞ்சம் யோசித்து பாருங்கள் இந்த விடுமுறை நாட்களில் உங்களால் நிம்மதியாக தூங்க முடிகிறதா? கண்டிப்பாக இல்லை.

ஏனென்றால் இந்த விடுமுறை நாட்களில் தான் நாம் நிறைய திட்டங்கள் போட்டு இருப்போம். உறவினர்களை சந்திப்பது, நண்பர்களுடன் வெளியே செல்லுதல், குடும்பத்துடன் இன்ப சுற்றுலா என்று வரிசையாக அடுக்கி கொண்டே செல்வோம். இப்படி தினமும் மன அழுத்தத்துடன் இருந்தால் நம்மால் எப்படி நிம்மதியாக தூங்க இயலும். எனவே நாங்கள் கூறும் 6 டிப்ஸ்களை ப்லோ பண்ணாலே போதும் இனி தூக்கம் உங்கள் நண்பன்.

உங்களுக்கான நேரம்
மாலை நேரத்தை உங்களுக்காக செலவிட தயாராக இருங்கள். உங்கள் எண்ணங்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்து செயல்படுங்கள். இது உங்கள் இரவு நேரத்தை சரியாக கழிக்க உதவும். புத்தகம் படித்தல், இரவு நேர குளியல் போன்றவை உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்து நிம்மதியான உறக்கத்தை தரும்.

ஸ்விட்ச் ஆப்
இரவில் தூங்க செல்லுவதற்கு 60-90 நிமிடங்களுக்கு முன்பாகவே உங்கள் எலக்ட்ரானிக் பொருட்களை எல்லாம் ஸ்விட்ச் ஆப் செய்து விடுங்கள். ஏனெனில் மொபைல், டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து வரும் நீல நிற ஒளிக்கதிர்கள் மூளையை தூண்டி தூக்கத்தை தொந்தரவு செய்யும். அதே மாதிரி இந்த பொருட்களை உங்கள் படுக்கையறையில் வைப்பதை தவிருங்கள்.இல்லையென்றால் உங்களை உபயோகிக்க தூண்டும்.

காஃபைன் தவிருங்கள்
நீங்கள் தூங்குவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு காஃபைன் குடித்து இருந்தால் அதுவும் உங்கள் தூக்கத்தை கெடுத்து விடும். காலையில் காபி குடித்து விட்டு மதியம் மற்றும் மாலை வேளைகளில் தாமதமாக காபி பருகுவதை தவிருங்கள். அதே மாதிரி காஃபைன் கலந்த பானங்கள் போன்றவற்றை தவிர்த்து மூலிகை தேநீர், கெமோமில் டீ போன்றவற்றை பருகுங்கள். இவை சுவைக்காக மட்டுமல்லாமல் உங்களுக்கு நிம்மதியான உறக்கத்தை தரும்.

குறைவான இரவு உணவு
புரோட்டீன் அதிகமான உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. இவை செரிமான பிரச்சினையை உண்டாக்கி தூக்கத்தை கெடுக்கும். எனவே லேசான கார்போஹைட்ரேட் உணவுகளை எடுக்கும் போது இன்சுலின் சுரப்பு உண்டாகி இவை தூக்க ஹார்மோன் ஆன டிரிப்டோபனை மூளையில் தூண்டுகிறது.

நீர் ஆகாரம்
நிறைய தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதுவும் உங்கள் தூக்கத்தை கெடுத்து விடும். எனவே படுக்கைக்கு போவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் நீரை அருந்திக் கொள்ளுங்கள்.

சருமம்
இரவில் தூங்குவதற்கு முன்பு நைட் க்ரீம்களை உங்கள் முகம், தாடை மற்றும் கழுத்து பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள். இவை இரவில் உங்கள் சருமத்தை புதுப்பித்து சருமம் வயதாகுவதை தடுக்கும். சுருக்கங்கள், சரும கோடுகள், தொய்வு போன்றவை ஏற்படாமல் தடுக்கும். எனவே எழுந்திருக்கும் போது பொலிவான முகத்துடன் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications
