புகைப்பழக்கத்தால் ஏற்படுகிற தாக்கத்திலிருந்து தப்பிக்க இத சாப்பிடுங்க!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அல்லது நமக்கு எளிதாக கிடைப்பவை ஆகியவற்றின் மீது நமக்கு பெரிதாக எந்த அபிப்ராயமும் இருக்காது. மிகச் சாதரணமாக அதனை கடந்து போய் விடுவோம். இது பொருட்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் இது பொருந்தும்.

வீட்டிலிருக்கும் வரை அல்லது உடனிருக்கும் வரை நம்மை சுற்றியிருக்கும் உறவுகள் மற்றும் நண்பர்களை அவ்வளவு அசால்ட்டாக கடந்திருப்போம் அவர்களை பிரிந்து வந்த பிறகு தான் உடனிருந்த நாட்களை எல்லாம் எப்படி தட்டிகழித்திருக்கிறோம் என்பதே தெரியவரும். சரி இப்போது நீங்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய மிக முக்கியமான பொருள் தினமும் அதனை சாப்பிடுகிறீர்கள் சந்தையிலும் அதன் விலை ஒவ்வொரு நாளும் ஏறுவது இறங்குவது என்றிருப்பவற்றில் ஒன்று தக்காளி.

தினம் பயன்படுத்துவது தானே என்று அதனை எளிதாக கையாள்கிறோம். ஆனால் அந்த தக்காளியால் நமக்க்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது தெரியுமா? இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள் தக்காளியால் ஏற்படுகிற நன்மைகளை தெரிந்து கொண்டால் தக்காளி நம் வீடுகளில் நம் ஆரோக்கியத்தில் எத்தகைய முதன்மையான பங்கினை வகிக்கிறது என்பது தெரியவரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புற்றுநோய் :

புற்றுநோய் :

தக்காளில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடன் மற்றும் விட்டமின் சி இருக்கிறது இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். அதோடு தக்காளியில் அதிகப்படியாக இருக்கும் லைகோபென்னும் இதற்கு பெரிதும் உதவிடும்.

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தக்காளி குறைத்திடும்.

புகை :

புகை :

புகைப்பழக்கம் நம் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்ககூடியவை, இது புகைப்பிடிப்பவரை மட்டுமல்லாது அவரைச் சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கும். இந்த புகைப்பழக்கத்தால் ஏற்படுகிற பாதிப்புகளை அதன் தன்மையை குறைக்கும் ஆற்றல் தக்காளிக்கு இருக்கிறது.

புகை பிடிப்பதால் நைட்ரோசமைன் என்ற பொருள் உடலில் கூடுகிறது இது உங்கள் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கக்கூடியவை. தக்காளியில் இருக்கக்கூடிய க்ளோரோஜெனிக் அமிலம் மற்றும் கோமரிக் அமிலம் ஆகியவற்றினால் நைட்ரோசமைன் உற்பத்தியாவதை குறைக்க முடியும்.

இதயம் :

இதயம் :

தக்காளியில் கோலின், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின் சி ஆகியவை இருக்கிறது. ஆரோக்கியமான இதயத்திற்கு பெரிதும் உதவிடும். பொட்டாசியம் அதிகமிருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதால் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஒரு நாளைக்கு குறைந்தது நான்காயிரம் மில்லி கிராம் பொட்டாசியம் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதோடு தக்காளி ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தவும், ரத்த உறைவை தடுக்கவும் உதவிடுகிறது

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

தக்காளியில் அதிகப்படியாக ஃபைபர் இருக்கிறது இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஃபைபர் அதிகமிருக்கும் உணவு பொருட்களில் தக்காளி முதன்மையான இடத்தை பிடித்திருக்கிறது. இது உங்கள் இன்ஸுலின் அளவை கட்டுப்படுத்தவும் ரத்தச் சர்க்கரை அளவை பராமரிக்கவும் உதவுகிறது.

ஒரு கப் தக்காளியில் இரண்டு கிராம் ஃபைபர் இருக்கிறது.

சருமம் :

சருமம் :

கொலாஜனுக்கு விட்டமின் சி அவசியம் அப்போது சருமம் இளமையாகவும் அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதைத் தவிர விட்டமின் ஏ சருமத்தில் சுருக்கங்களை போக்க உதவிடுகிறது. இவை இரண்டுமே தக்காளியில் இருக்கிறது. இதோடு தக்காளியில் இருக்கக்கூடிய பீட்டா கரோட்டின் சூரிய ஒளியால் ஏற்படுகிற பாதிப்புகளை சரி செய்திடும்.

மன அழுத்தம் :

மன அழுத்தம் :

தக்காளியில் ஃபோலிக் அமிலம் இருக்கிறது இவற்றை சாப்பிடுவதால் ஹோமோசிஸ்டீன் உடலில் அதிகரிக்கும். இவை நம் மூளையை பாதுகாக்கவும், ரத்த உறைவையும் தடுக்கிறது. இவற்றை தவிர மன அழுத்தம் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதைத் தவிர தக்காளியில் இருக்கக்கூடிய விட்டமின் பி6 மனதை உற்சாகத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

 பார்வை :

பார்வை :

தக்காளில் கரோடின் மற்றும் விட்டமின் ஏ இருக்கிறது. விட்டமின் ஏ நம் கண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். வயதானவர்களுக்கு கண்களில் மாக்குலர் டீ ஜென்ரேசன் என்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இது ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமென்றால் தாக்காளியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தக்காளியில் லைகோபென், பீட்டா கரோட்டின் மற்றும் லூட்டின் ஆகியவை இருக்கும். இவை வயதனாவர்களுக்கு ஏற்படக்கூடிய கண் பாதிப்புகளை ஏற்படாமல் தடுக்கிறது.

செரிமானம் :

செரிமானம் :

இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் செரிமானக்கோளாறு பரவலாக எல்லாருக்கும் இருக்கிறது. அதனை சீராக்க தக்காளி உதவுகிறது. அதோடு உடலில் அதிகப்படியாக நச்சு சேர்ந்திருந்தாலும் அதனை தடுக்கவும் தக்காளி உதவிடுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் இது தீர்த்திடும்.

இதைத் தவிர பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவிடுகிறது.

 நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் வந்த பிறகு அதனை குறைக்க, அதன் தாக்கங்களிலிருந்து மீள மருத்துவத்தை தேடிச் செல்வதை விட நோய் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதே மிகவும் நல்லதாகும்.அதற்கு நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். தக்காளியில் இருக்கும் சத்துக்களால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால் நாம் பல்வேறு நோய் உபாதைகளிலிருந்து தப்பிக்கலாம்.

ஆஸ்துமா :

ஆஸ்துமா :

தக்காளியில் இருக்கக்கூடிய விட்டமின் ஏ மற்றும் லைகோபென் ஆகியவை ஆஸ்துமாவின் தாக்கத்தை குறைக்க உதவிடுகிறது. ஆஸ்துமாவில் பாதிக்கப்பட்டவர்கள் உங்களது அன்றாட உணவில் தக்காளியை தொடர்ந்து சேர்த்துக் கொள்ளுங்கள். இருமல்,மூச்சுத்திணறல் போன்ற எந்த பாதிப்பாக இருந்தாலும் தக்காளி சாப்பிடுவதால் அவை கட்டுப்படுத்தப்படும்.

ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல மூச்சு சீராக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாரும் தக்காளியை எடுத்துக் கொள்ளலாம்.

எலும்புகள் :

எலும்புகள் :

தக்காளியில் இருக்கக்கூடிய விட்டமின் கே நம் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. விட்டமின் கே நம் உடலில் குறைவதனால் தான் கை மற்றும் மூட்டுப் பகுதிகளில் எலும்புத் தேய்மானம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இதைத் தவிர மெனோபாஸ் காலத்திற்கு பிறகு பெண்களின் எலும்புகள் வலுவிழக்கும். அதனை தடுக்கவும் இளவயதிலிருந்தே நீங்கள் தக்காளியை சாப்பிடுவது நல்லது.

மூளை செல்கள் :

மூளை செல்கள் :

விட்டமின் கே எலும்புகளுக்கு மட்டுமல்ல மூளை செல்களின் வளர்ச்சிக்கும் இது உதவிடுகிறது. மூளை செல்களின் துரிதமான செயல்பாடுகளுக்கு விட்டமின் கே அவசியம். பார்கின்சன் மற்றும் அல்சைமர் வராமல் தவிர்க்க தக்காளி உதவிடும்.

கொலஸ்ட்ரால் :

கொலஸ்ட்ரால் :

தக்காளியை தொடர்ந்து நீங்கள் எடுத்துக் கொள்வதினால் உடலில் சேருகிற கெட்டகொழுப்பை அழிகக்வும் தக்காளி உதவிடுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

தைராய்டு :

தைராய்டு :

உடலின் செயல்பாடுகளுக்கு தைராய்டு சுரப்பி மிகவும் அவசியம். இதற்கு மக்னீசியம் தேவைப்படுகிறது அப்போது தைராக்சின் உற்பத்தியாகும் இந்த ஹார்மோன் தான் உடலில் நிகழக்கூடிய பிற விஷயங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது.

தக்காளியில் மக்னீச்யம் நிறையவே இருக்கிறது நீங்கள் தொடர்ந்து எடுத்துவர தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்யும்.

மாதவிடாய் :

மாதவிடாய் :

பிஎம்எஸ் எனப்படக்கூடிய ப்ரீ மென்ச்சுரல் சிண்ட்ரோம் பெண்களுக்கு தங்களது மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஏற்படும். வயிற்றுவலியைத் தாண்டி, சோர்வு,எரிச்சல், தலைவலி ஆகியவற்றை கட்டுப்பத்த தக்காளி பெரிதும் உதவிடும்.

சரியாக மாதவிடாய் ஏற்படும் நாளில் தாக்காளியை அதிகம் சேர்த்துக் கொள்வதை விட இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே தக்காளியை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Benefits of Tomato

Surprising Benefits of Tomato
Story first published: Wednesday, April 11, 2018, 13:00 [IST]