மாத்திரை சாப்பிட்டதும் இந்த அறிகுறியெல்லாம் தெரியுதா?

Subscribe to Boldsky

தசைகளில் ஏற்படுகிற வலி மற்றும் பிடிப்பு ஆகிய பிரச்சனை சர்வ சாதரணமாக பலருக்கும் நிகழக்கூடியது. இதற்காக மாத்திரை எடுத்துக்கொள்ளும் நபரா நீங்கள் அப்படியானால் இது உங்களுக்குத் தான்.

தசை வலி ஏற்பட்டால் மாத்திரை சாப்பிடுவேன் சில மணி நேரத்தில் சரியாகிவிடும் என்று மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? அதை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படுகிற பின்விளைவுகளைப் பற்றி நீங்கள் அறிந்தால் இப்படியெல்லாம் பேச மாட்டீர்கள். இது உங்களுடைய மத்திய நரம்பு மண்டலத்தையே பாதிக்கக்கூடியது. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு போதை மருந்தைப் போல அந்த மருந்திற்கு உங்களை அடிமைப்படுத்திடும்.

இது பிரச்சனையினை தீர்ப்பதற்கு பதிலாக பிரச்சனையினை தள்ளிப்போடுகிறது.மிகத் தீவிர பிரச்சனையாக இது எதிர்காலத்தில் எழக்கூடும். இப்படி தசைவலிக்கான மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் தெரிந்தால் உடனேயே மருத்துவரிடம் ஆலோசனை பெற்றிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அயர்ச்சி :

அயர்ச்சி :

இது பலருக்கும் ஏற்பட்டிருக்கும் எப்போது அயர்ச்சியாக உணர்வது. குறிப்பாக இந்த மாத்திரை சாப்பிட்ட பிறகு இந்த உணர்வு மேலோங்கும்.இது பொதுவான பின் விளைவாகவே பார்க்கப்படுகிறது. இதனால் இந்த மாத்திரையை நீங்கள் அவசரமாக வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலையிலோ அல்லது வாகனம் ஓட்ட வேண்டி வந்தாலோ சாப்பிடாமல் தவிர்த்திடுங்கள்.

வறட்சி :

வறட்சி :

இந்த மாத்திரை சாப்பிட்டவுடன் உங்களது எச்சில் சுரப்பு கடுமையாக குறையும். இதனால் வாயில் வறட்சி ஏற்படும் தீவிரமான தண்ணீர் தாகம் ஏற்படும். அதிக தண்ணீர் தாகம் ஏற்படும். பொதுவாக நரம்பு பிரச்சனை ஏற்பட்டால் அதன் ஆரம்ப கால அறிகுறிகள் இப்படித்தான் இருக்கும்.

மனநிலை :

மனநிலை :

திடிர் பதட்டம், கோவம், காரணமின்றி அழுகை, எரிச்சல் போன்ற உணர்வுகள் மாறி மாறி ஏற்படும். குறிப்பாக மாத்திரை சாப்பிட்டவுடன் இந்த உணர்வுகள் ஏற்பட்டால் மாத்திரை எடுத்துக் கொள்வதை முதலில் நிறுத்துங்கள்.

இவை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்ற உணர்வினை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உஙக்ள் கவனத்தை திசை திருப்புவது, வேறு இடத்திற்கு செல்வது என உங்களை அந்த சம்பவத்திலிருந்து திசை திருப்ப முயற்சி செய்திடுங்கள்.

 குறைந்த ரத்த அழுத்தம் :

குறைந்த ரத்த அழுத்தம் :

ரத்தம் குறைவாக இருப்பவர்கள் தசை வலிக்கான மாத்திரையை எடுத்துக் கொண்டால் அது உடனடியாக நம் ரத்த அழுத்தத்தில் மாற்றத்தை உருவாக்கிடும். இதனால் லோ பிரசர் ஏற்பட்டு மயக்கம் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு உண்டு.

இதைத் தவிர இதயத்துடிப்பு சீராக இருக்காது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படலாம். சிறிது நேரத்தில் நீங்கள்தெளிந்து உட்கார்ந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றிடுங்கள்.

முடக்குவாதம் :

முடக்குவாதம் :

ஆண்டுக்கணக்கில் அதிகபட்சமாக எடுத்துக் கொள்கிறவர்களுக்கு முடக்குவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஐம்பது வயதுக்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திடும். அதோடு நாம் உணவின் மூலமாக எடுத்துக் கொள்ளக்கூடிய சத்துக்களை கிரகத்துக் கொள்ளக்கூடிய தன்மையும் குறைந்து போகும் என்பதால் மிக எளிதாக இது போன்ற பிரச்சனைகள் எல்லாம் தீவிரமடையும்.

இது முதலில் உங்கள் தசையை தளர்ச்சியடையச் செய்திடும்.

அமிலம் :

அமிலம் :

இந்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுவதால் நம் உடலில் அதிகப்படியான அமிலத்தன்மையை அதிகப்படுத்திடும். இதனால் வாந்தி, சோர்வு, ரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றங்கள் உட்பட பல பிரச்சனைகள் ஏற்படும். மிக முக்கியமாக உணவு செரிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

நீங்கள் அசிடிட்டிக்கான மாத்திரைகளை எடுப்பதால் மட்டும் இதனை சரி செய்து விட முடியாது.

அலர்ஜி :

அலர்ஜி :

சிலருக்கு இது அலர்ஜியை கூட ஏற்படுத்தும். இதன் அறிகுறியாக உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். வாயில் அல்லது நாக்கில் புண்கள் ஏற்படும், முகத்தில் வீக்கம் ஏற்படும். ஒவ்வொருவருக்கும் இந்த அலர்ஜி அறிகுறிகள் வேறுபடும் என்பதால் இந்த மருந்தை எடுத்துக் கொள்வதற்கு முன்னால் மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள்.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் :

இதுவும் நீங்கள் எளிதாக கடந்து செல்லக்கூடிய ஓர் அறிகுறி தான். மலச்சிக்கல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேல் தொடர்ந்தால் அல்லது மாத்திரை சாப்பிட்ட பிறகு இப்படி ஏற்பட்டால் மாத்திரையை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தலைவலி,உடல் சோர்வு ஆகியவற்றை கூட ஏற்படுத்தும்.

தூக்கம் :

தூக்கம் :

இந்த மாத்திரை தூக்கத்தை கெடுக்கும். குறிப்பாக தூக்கத்தின் போது மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். இதனால் வழக்கத்தை விட சத்தமாக குறட்டை விடுவீர்கள். அதோடு மூச்சுத் திணறல் ஏற்படுவதால் உங்களால் நிம்மதியாக தூங்க முடியாது. சில நேரங்கள் இந்த பிரச்சனையின் தீவிரம் அதிகமாக கூட தோன்றிடும்.

இஞ்சி :

இஞ்சி :

வலி வராமல் தவிர்க்க நீங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடிய உணவுப் பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நம் சமையலறையில் இடம்பெற்றிருக்கும் ஓர் பொருள் இஞ்சி. தினமும் காலையில் இஞ்சியை கொதிக்க வைத்த தண்ணீரை குடித்திடுங்கள். இது உணவு செரிமானத்திற்கு உதவுவதுடன், உடலில் சேர்ந்திருக்கும் அமிலத்தை குறைத்திடும். அதோடு உடலில் சேரும் அமிலத்தையும் குறைக்கும்.

மஞ்சள் :

மஞ்சள் :

மூட்டு வலிகள், வீக்கம் ஆகியவற்றிற்கு மஞ்சள் சிறந்த மருந்தாக விலங்கிடும். திசுக்களில் ஏற்படுகிற பாதிப்புகளை சரி செய்திடும் ஆற்றல் மஞ்சளிடம் இருக்கிறது. நரம்புகளுக்கு இது மிகவும் நல்லது. உணவில் மஞ்சள் பயன்படுத்தும் போதும் எப்போதும் சிறிதளவு மிளகுத்தூளை சேர்த்துக் கொள்ளுங்கள்

தயிர் :

தயிர் :

தயிரில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இவற்றை நாம் எடுத்துக் கொள்வதால் உணவு செரிமானத்திற்கு மிகவும் உதவிடும்.அதோடு உடலில் இருக்கக்கூடிய பிற வைரஸ்களை அழித்திடும். பாக்கெட் தயிர் வாங்குபவர்கள் அதில் ப்ரோபயோட்டிக்ஸ் இருக்கிறது என்பதை சரி பார்த்து வாங்கிடுங்கள்.

காபி :

காபி :

தலை வலிக்கு ஒரு கப் காபி குடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்க வைக்கிறதே..... அதனை குடித்தால் கூட தசை வலிக்கு சற்று நிவாரணம் கிடைத்திடும். அதற்காக காபியை தொடர்ந்து குடிககதீர்கள். ஒரு வேலை அதிகப்படியாக சேர்ந்திடும் கேஃபைனினால் பிரச்சனைகள் ஏற்படலாம்.

புதினா :

புதினா :

புதினா இலையை குடிக்கும் நீரில் போட்டு குடிப்பது அல்லது வெறும் புதினா இலைகளை வாயில் போட்டு மெல்வது ஆகியவற்றால் கூட வலியிலிருந்து நீங்கள் நிவாரணம் பெற்றிடலாம். அதிலிருக்கக்கூடிய மென்த்தால் நம் தசைக்கு புத்துணர்ச்சியை வழங்கிடும். இது மலச்சிக்கலை சரி செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Side Effects of Taking Muscle Relief Tablets

    Side Effects of Taking Muscle Relief Tablets
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more