மல்டிவிட்டமின் மாத்திரை அதிகமாக சாப்பிடுவதால் தம்பத்தியம் பாதிக்கப்படுமா?

Posted By:
Subscribe to Boldsky

இன்றைக்கு குழந்தைகளுக்கு பெற்றோர் மத்தியில் மல்டிவிட்டமின் மாத்திரை கொடுப்பது அதிகரித்து வருகிறது . பெரும்பாலும் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் எல்லாம் உணவு மூலமாகவே கிடைத்திடும் அதையும் தாண்டி தேவைப்படுவோர் சத்து மாத்திரைகளாக எடுத்துக் கொள்கிறார்கள்.

உடலில் விட்டமின் குறைபாடு இருப்பவர்கள். குறிப்பாக செரிமானக் கோளாறு அடிக்கடி ஏற்பட்டால், கர்ப்பமாக இருப்பவர்கள், ரத்த சோகை ஆகியவை ஏற்பட்டால் அவர்களுக்கு மல்டிவிட்டமின் மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.

விட்டமின் உங்களுக்கு தேவை தான், ஆனால் அதுவே அளவுக்கு மிஞ்சினால் உங்கள் உயிரையே பறித்து விடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக விட்டமின் ஏ,டி,இ மற்றும் கே ஆகியவை எடுக்கும் போது மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே நீங்கள் சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Side Effects Of Multi Vitamins

இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது பால் மற்றும் காபி டியுடன் மாத்திரையை சாப்பிடக்கூடாது.அதே போல மல்டிவிட்டமின் மாத்திரை சாப்பிடும் போது கால்சியம் மாத்திரையையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் மல்டிவிட்டமின் செயலாற்றுவதை கால்சியம் தடுத்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேஸ் பிரச்சனை :

கேஸ் பிரச்சனை :

மல்டிவிட்டமின் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்தாலோ அல்லது நேரம் மாற்றி சாப்பிட்டாலோ உங்களுக்கு வயிற்றில் கேஸ் பிரச்சனை ஏற்படக்கூடும், சிலருக்கு வயிற்றுப் போக்கும் ஏற்படுவதுண்டு. சிலருக்கு தொடர்ந்து நீடிக்கும். பெரும்பாலும் இது போன்ற வலியெல்லாம் இரண்டு நாட்களில் தானாக சரியாகும்.

அந்தே நேரத்தில் நீங்கள் செரிமானத்திற்கு தாமதமாகும் உணவுகளை எடுத்துக் கொண்டால் விளைவுகள் இன்னும் தீவிரமாகலாம்.

தண்ணீர் :

தண்ணீர் :

இதனை தவிர்க்க வேண்டுமென்றால் மல்டிவிட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள் அதிகமான நீராகாரங்களை குடிக்க வேண்டும். உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிற தண்ணீர் அளவை விட அதிகமாக.

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகடைகளில் வாங்கி சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்துங்கள். உங்கள் உடலின் மாற்றங்களை வைத்து உங்களுக்கு எந்த சத்து அதிகம் தேவைப்படுகிறது என்பதை கணக்கிட்டு மருத்துவர் மருந்துகளை பரிந்துறைப்பார்.

சுவை :

சுவை :

மல்டிவிட்டமின் மாத்திரைகளை நிறைய எடுத்துக் கொள்பவர்களுக்கு சுவையறியும் தன்மை மறத்துப் போகும். இதில் அதிகப்படியான இரும்புச் சத்து மற்றும் மக்னீசியம் இருப்பதினால் தான் இந்தப் பிரச்சனை

அலர்ஜி :

அலர்ஜி :

உங்கள் உடலுக்கு தேவையான அளவையும் மீறி நீங்கள் மல்டிவிட்டமின் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் இந்தப் பிரச்சனை ஏற்படும். அதாவது உடலில் எங்கேனும் ஒரு பகுதியில் அலர்ஜி ஏற்படும். சருமத்தில் மட்டுமல்லால் மூச்சு விடுவதில் சிரமங்கள், வீக்கம் ஆகியவை கூட ஏற்படலாம்.

தண்ணீரில் கரையக்கூடியவை :

தண்ணீரில் கரையக்கூடியவை :

மல்டிவிட்டமினில் இருக்கக்கூடிய விட்டமின் சி மற்றும் பி விட்டமின் எளிதாக தண்ணீரில் கரையக்கூடியவை. நாம் அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது இவற்றிலிருந்து சில சத்துக்கள் எல்லாம் வெளியாகும்.

அதோடு நம் உடலில் இருக்க வேண்டிய அமிலத்தையும் இது இழுத்துக் கொண்டு ஓடிடும். இதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்திடும்.

யார் இதை சாப்பிடுகிறீர்கள்? :

யார் இதை சாப்பிடுகிறீர்கள்? :

அரிசி உணவுகள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடலில் தானாகவே விட்டமின் டி சேர்ந்திடும். நீங்கள் தனியாக விட்டமின் டி எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை

மல்டிவிட்டமின் மாத்திரைகளை வாங்கும் போது அதில் என்னென்ன விட்டமின்ஸ் இருக்கிறது, அதன் அளவுகோள்கள் என்ன ஆகியவற்றை தெரிந்து கொண்டு வாங்கவும்.

விட்டமின் ஏ :

விட்டமின் ஏ :

நீங்கள் வாங்கும் மல்டிவிட்டமின் மாத்திரை அல்லது சிரப்பினில் விட்டமின் ஏ அதிகமாக இருந்தால் இந்தப் பிரச்சனை எல்லாம் உங்களுக்கு ஏற்படும்.

இது உங்கள் உடலில் டாக்ஸிட்டியை அதிகப்படுத்தும் இதனால் தலைவலி, சோர்வு, குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்தும். மிகத் தீவிரமாக போகும் பட்சத்தில் கல்லீரல் மற்றும் கண் பார்வையில் பாதிப்புகள் உண்டாகும்.

விட்டமின் டி:

விட்டமின் டி:

இதே போல விட்டமின் டி அதிகரித்தால் உங்கள் ரத்தத்தில் கால்சியத்தின் அளவை அதிகரித்திடும். இதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது தொடர்ந்து அதிகரித்தால் கிட்னி பாதிப்பு உண்டாகும்.

விட்டமின் இ :

விட்டமின் இ :

விட்டமின் இ அதிகரித்தால் சருமத்தில் அலர்ஜி அல்லது சருமத்தில் நிறம் மாறுவது ஆகியவை உண்டாகும். மிக முக்கியமாக தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படலாம். அதே போல ரத்த உறைவையும் இது தாமதப்படுத்தும்.

மாதவிலக்கு நாட்களில் மற்றும் ரத்த உறைவு பிரச்சனை இருப்பவர்கள் விட்டமின் இ அதிகமிருக்கும் மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். விட்டமின் கேவுக்கும் இதே பிரச்சனை தான்.

இரும்பு :

இரும்பு :

பெரும்பாலான மல்டிவிட்டமின் மாத்திரைகளில் இரும்புச் சத்தும் இருக்கும். சிலர் சத்து மாத்திரை என்ற பெயரில் மல்டிவிட்டமின் மாத்திரையையும், இரும்புச் சத்து மாத்திரையையும் எடுத்துக் கொள்வார்கள். அப்படி எடுக்கக்கூடாது. ஏனென்றால் மல்டிவிட்டமின் மாத்திரையின் கணிசமான பங்கு இரும்புச் சத்தே இடம்பெற்பெற்றிருக்கும்.

இது தொடரும் பட்சத்தில் கல்லீரல் செயல்பாட்டில் சிக்கல் ஏற்படும். இந்தப் பிரச்சனை குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Side Effects Of Multi Vitamins

Side Effects Of Multi Vitamins
Story first published: Tuesday, April 3, 2018, 17:40 [IST]