Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நீங்கள் தினமும் சாப்பிடும் இந்த உணவுகளில் நச்சுத்தன்மை உள்ளது தெரியுமா?
நாம் சாப்பிடும் பல ஆரோக்கிய உணவுகள் முழுவதும் ஆரோக்கியமானது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அடிக்கடி சாப்பிடும் சில உணவுகளில் கண்ணனுக்கு தெரியாத சில விஷத்தன்மை உள்ள பொருட்கள் இருக்கிறது.
உணவுகள் ஆரோக்கிய உணவா அல்லது ஆரோக்கியமற்ற உணவா என்பது அதிலுள்ள சத்துக்களை பொறுத்தது. சில ஆரோக்கிய உணவுகள் அவற்றில் உள்ள சில நச்சுப்பொருட்களால் அவை சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட உணவுகள் பெரும்பாலும் நாம் தினமும் சாப்பிடும் பொருளாக இருப்பதுதான் அதிர்ச்சியான ஒன்று.

நாம் சாப்பிடும் பல ஆரோக்கிய உணவுகள் முழுவதும் ஆரோக்கியமானது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அப்படியில்லை. அடிக்கடி சாப்பிடும் சில உணவுகளில் கண்ணனுக்கு தெரியாத சில விஷத்தன்மை உள்ள பொருட்கள் இருக்கிறது. இந்த பதிவில் நீங்கள் தினமும் சாப்பிடும் உள்ள உணவில் என்னென்ன நச்சுப்பொருட்கள் உள்ளது என்பதை பார்க்கலாம்.

இறைச்சி
பலரும் விரும்பும் இராசிகளில் கார்பன் மோனாக்சைடு என்னும் நச்சுப்பொருள் உள்ளது. இறைச்சிகள் எப்பொழுதும் சிவப்பு நிறத்தில் ப்ரெஷாக இருக்க காரணம் என்னவென்று யோசித்துள்ளீர்களா?. அதற்கு காரணம் கார்பன் மோனாக்சைடுதான். இது உடலுக்கு ஆரோக்கியமானதல்ல.

கேக்
உணவுகளின் நிறங்கள் அதன் தோற்றத்தில் பல மாற்றங்களை உண்டாக்கக்கூடும், ஆனால் உங்களுக்கு அதிர்ச்சியை தரக்கூடிய ஒரு செய்தி என்னெவனில் பல உணவு நிறமூட்டிகள் புழுக்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ரெட் வெல்வட் கேக் போன்ற பல கேக்குகளில் சிவப்பு நிறத்தை சேர்க்க கோச்சினியால் புழுக்கள் பயன்படுத்தப்படுகிறது.

சாலட்
உங்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் நீங்கள் வெளியிடங்களில் சாப்பிடும் சாலட்களில் சன்ஸ்கீரின் க்ரீம் சேர்க்கப்படும். இந்த கிரீம்களில் டைட்டானியம் டையாக்ஸைடு உள்ளது. இது வெளிப்புற கிருமிகள் உணவின் மீது படராமல் பார்த்துக்கொள்கிறது ஆனால் இது உணவில் உள்ள சத்துக்களை அழிக்கக்கூடியது.

அரிசி
அரிசியில் ஆர்சனிக் என்னும் மோசமான நச்சுப்பொருள் உள்ளது. மனித உடலுக்கு பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஆர்சனிக் அரிசி உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆர்சனிக் உடலில் அதிகம் சேர்க்கும்போது இது புற்றுநோய், நரம்பு மண்டல கோளாறுகள் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் போன்றவற்றை ஏற்படும். எனவே அரிசி உபயோகிக்கும் முன் அதனை நன்கு சுத்தம் செய்து சமைத்து சாப்பிடுங்கள்.

ஜெல்லிகள்
கேக் மற்றும் ஜெல்லிகளில் பன்றிக்கொழுப்புகள் பயன்படுத்தப்படுகிறது. ஜெல்லிகளில் பயன்படுத்தப்படும் ஜெலட்டின் என்னும் பொருள் ஜெல்லிகளில் பயன்படுத்தப்படுவது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவை கேக், கப் கேக் போன்ற உணவுகளிலும் பயன்படுகிறது.

பாதாம்பால்
பால் பொருட்கள் அல்லாத மற்ற பால்களில் அவற்றின் அடர்த்திகாக கேராஜீனான் என்னும் பொருள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக பாதாம் பாலில் இது அதிகம் சேர்க்கப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

பீர்
அனைவரும் விரும்பும் பீரில் மீனின் சிறுநீர்ப்பை சேர்க்கப்படும் என்னும் அதிர்ச்சியான செய்தி சமீபத்தில் வெளியாகியுள்ளது. உலரவைக்கப்பட்ட மீனின் சிறுநீர்ப்பையில் இருந்து இசிங்கிளாஸ் என்னும் பொருள் கிடைக்கிறது. பீர் மற்றும் வைன் போன்றவற்றை வடிகட்ட இது பயன்படுகிறது.

சீஸ்
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பல கம்பெனிகளின் சீஸ்களில் செல்லுலோஸ் சேர்க்கப்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த செல்லுலோஸ் உங்கள் சருமம் மற்றும் வயிற்றில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications