விந்தணு எண்ணிக்கையையும், அதன் நீந்தும் திறனையும் மேம்படுத்துவதற்கான சில வழிகள்!

திருமணத்திற்குப் பின் தம்பதிகளின் வாழ்க்கையைப் பிரகாசமாக்குவதற்கும், அவர்கள் காதலின் அடையாளமாகவும் இருப்பது குழந்தைகள். இன்று பல தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு முயற்சிக்கும் போது, அதற்கு தடையாக ஆண் மலட்டுத்தன்மை உள்ளது. முன்பெல்லாம் ஒரு தம்பதியால் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாவிட்டால், கண்ணை மூடிக் கொண்டு பெண்களைக் குறைக் கூறுவார்கள். ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. பெண்களும் ஆண்களைப் போன்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்.

எனவே இந்த காலத்தில் ஒரு பெண்ணை அவ்வளவு எளிதில் குறைக்கூற முடியாது. மேலும் அதற்கு ஏற்ப ஆண்களும் மாறிவிட்டார்கள். இன்று ஒரு தம்பதியால் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாவிட்டால், ஆண், பெண் இருவருமே மருத்துவரிடம் தங்களை பரிசோதித்துக் கொண்டு, யாரிடம் பிரச்சனை உள்ளது என்பதை அறிந்து, அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தற்போதைய தம்பதிகளால் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாமல் போவதற்கு ஆண்களின் மோசமான சில பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையுமே முக்கிய காரணமாக உள்ளன.

Science-Backed Ways To Boost Your Overall Sperm Health

இத்தகைய மோசமான பழக்கங்களால் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவதோடு, விந்தணுக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, விந்தணுக்களால் ஒரு பெண்ணின் கருமுட்டையை அடைய தேவையான நீந்தும் சக்தி கிடைக்காமல் போய், கருத்தரிக்க உதவ முடியாமல் போகிறது. எனவே ஒரு ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியம் மேம்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் ஒருசில வழிகளைப் பட்டியலிட்டுள்ளன. அந்த வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து மனதில் கொண்டு நடந்து, விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எது விந்தணுக்களை ஆரோக்கியமாக்குகிறது?

எது விந்தணுக்களை ஆரோக்கியமாக்குகிறது?

விந்தணுக்களின் எண்ணிக்கை தான் ஒரு ஆணின் கருவளத்தை நிர்ணயிக்கிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது ஒன்று மட்டும் ஒரு ஆணின் கருவளத்தைக் குறிப்பிடுவது இல்லை. கீழே வேறு எந்த விஷயம் எல்லாம் விந்தணுக்களை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் ஆக்குகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

* தரம் அல்லது விந்துவில் எவ்வளவு விந்தணுக்கள் உள்ளது. ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்துவில் 15 மில்லியன் விந்தணுக்களுக்கும் குறைவாக இருந்தால், அந்த ஆணுக்கு விந்தணு மிகவும் குறைவாக உள்ளது என்று கருதப்படுகிறது.

* விந்துவின் உந்துதல் அல்லது கருமுட்டையை அடைய விந்து எவ்வளவு வேகமாக நீந்தி செல்கிறது என்பது முக்கியம்.

* விந்தணுக்களின் வடிவம் மற்றும் அளவு. சாதாரண விந்தணுவின் தலை நீள்வட்ட வடிவிலும், நீளமான வால் பகுதியையும் கொண்டிருக்கும். அசாதாரண விந்தணுவாக இருந்தால், அதன் தலை வித்தியாசமான வடிவிலும், வால் பகுதியில் பிளவு அல்லது பல்வேறு வால் பகுதியைக் கொண்டிருக்கும்.

கீழே விந்தணுக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் அதன் நீந்தும் திறனை வேகப்படுத்துவதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சரியான உணவுகளை உண்ணவும்

சரியான உணவுகளை உண்ணவும்

ஆண்களை பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்பதற்கான முக்கிய காரணம், அவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் விந்தணுக்களின் அடர்த்தியை அதிகரிக்கும். விந்தணுக்களின் தரத்தைப் பாதிக்கும் ஓர் காரணி ஆக்ஸிஜனேற்ற அழுத்தம். எப்போது ஒருவரது உடலில் ப்ரீ-ராடிக்கல்களின் அளவு அதிகமாகிறமோ, அப்போது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரிக்கும். இந்த அழுத்தத்தில் இருந்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நல்ல பாதுகாப்பை வழங்கும்.

எனவே ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளான பெர்ரிப் பழங்களை தினமும் தவறாமல் சேர்த்து வாருங்கள். அதிலும் ப்ளூபெர்ரியை காலை உணவின் போது சேர்த்து வருவது நல்லது. ஏனெனில் ஒரு கப் ப்ளுபெர்ரியில் 9019 ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உலர்ந்த முந்திரிப் பழம், ப்ளாக் பெர்ரிப் பழங்கள், திராட்சை போன்றவற்றில் அதிகம் உள்ளது.

வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ

வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ

ஆய்வுகளில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ, விந்தணுவின் வடிவத்தை மேம்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. எனவே தினமும் ஆண்கள் 15 மில்லி கிராம் வைட்டமின் ஈ எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய வைட்டமின் ஈ சூரியகாந்தி விதைகள், பசலைக்குரை போன்றவற்றில் போதுமான அளவில் நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின் சி சத்தைப் பெறுவதற்கு சிட்ரஸ் பழங்களான திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.

மதுவை அளவாக அருந்தவும்

மதுவை அளவாக அருந்தவும்

மது அருந்துவதால் மனதில் உள்ள அழுத்தம் குறைந்து, சந்தோஷமான உணர்வைப் பெறலாம். ஆனால் அது தற்காலிகமே தவிர நிரந்தரம் அல்ல. உண்மையில் மது விந்தணுக்களை அழிக்கும் ஒரு நச்சுப் பொருள். இந்த மதுவை அளவாக எப்போதாவது அருந்தினால் பிரச்சனை இல்லை. ஆனால் வாரத்திற்கு 10-15 பெக்கிற்கும் அதிகமாக அருந்தும் போது, விந்தணுக்களின் ஆரோக்கியம் மற்றும் எண்ணிக்கை பாதிக்கப்படும்.

ஆரோக்கியமான உடல் எடை

ஆரோக்கியமான உடல் எடை

கடந்த கருடம் வெளிவந்த ஆய்வு ஒன்றில், சரியான உடல் எடையுடன் உள்ள ஆண்களை விட, உடல் பருமன் அல்லது அதிகளவு உடல் எடை கொண்ட ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதோடு, விந்தணுக்களின் நீந்தும் தன்மையும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒருவரது உடலில் கொழுப்புக்கள் அதிகமாக இருந்தால், அவர்களது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தமும் அதிகமாக இருக்கும். எனவே இதைத் தவிர்க்க ஆண்கள் தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியம்.

சூடான நீர் குளியல்

சூடான நீர் குளியல்

ஆண்கள் மிகவும் சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமான வெப்பநிலையில் உள்ள நீரில் குளித்தால், விரைவிதையின் வெப்பநிலையும் அதிகரித்து, விந்தணுக்களின் உற்பத்தி குறையும். 2013-இல் வெளிவந்த ஆய்வில், வாரத்திற்கு இரண்டு முறை சூடான நீரில் குளித்த ஆண்களின் விந்தணு எண்ணிக்கை மற்றும் நீந்தும் திறன் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இறுக்கமான உள்ளாடையைத் தவிர்க்கவும்

இறுக்கமான உள்ளாடையைத் தவிர்க்கவும்

ஆம், இது உண்மையே. ஆண்கள் மிகவும் இறுக்கமான உள்ளாடை மற்றும் பேண்ட் அணியும் போது, விரைவிதை அதிகமாக வெப்பமடைந்து, அதன் விளைவாக விந்தணுக்களின் எண்ணிக்கை மோசமாக பாதிக்கப்படும். எனவே விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், இறுக்கமான ஆடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

அக்குபஞ்சரை முயற்சிக்கவும்

அக்குபஞ்சரை முயற்சிக்கவும்

அக்குபஞ்சர் விந்தணுக்களின் தரத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் இது உடலில் உள்ள அழுத்தத்தைக் குறைத்து, விந்தணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படாமல் தடுக்கும். 2014 ஆம் ஆண்டு, குறைவான மன அழுத்தம் கொண்ட ஆண்களை விட அதிகளவு மன அழுத்தம் கொண்ட ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் நீந்தும் திறன் குறைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், விந்தணுக்களும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion