For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளாவை போல வெள்ளம் ஏற்பட்டால் இவற்றை செய்தாலே தப்பித்து கொள்ளலாம்...!

இந்த பதிவில் வெள்ளத்தில் சிக்கி கொண்டால் என்னென்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது, எத்தகைய நோய் தொற்றுகள் ஏற்படும், எவ்வாறு அதில் இருந்து காக்கலாம், எப்படிப்பட்ட உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் போன்ற பல்வ

By Haripriya
|

இயற்கையின் ரகசியத்தை யாராலும் கணிக்க முடியாது. இருப்பினும் அறிவியலின் வளர்ச்சியால் இது தற்போது ஓரளவு சாத்தியம் ஆகி உள்ளது. இன்று இயற்கையின் மாற்றங்களை கண்டறிய பல அறிவியல் சாதனங்கள் வந்துள்ளது. ஆனால் அவற்றால் அவ்வளவு துள்ளியமாக இயற்கையின் செயல்பட்டை கண்டறிய முடியாது. இப்படிப்பட்ட கட்டுக்கடங்கா சூழ்நிலையில்தான் பெரும்மழை, வெள்ளம், சுனாமி, சூறாவளி, புயல் இத்தகைய இயற்கை பேரழிவுகள் ஏற்படுகிறது. இதனை நாம் தடுக்க முற்றப்பட்டாலும் அது அதிக வினையைத்தான் தரும்.

Safety, Health & Hygiene Tips For Floods

ஆனால் இவற்றில் இருந்து நம்மை முன்னெச்சரிக்கையுடன் காத்து கொள்ளலாம். இந்த பதிவில் வெள்ளத்தில் சிக்கி கொண்டால் என்னென்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது, எத்தகைய நோய் தொற்றுகள் ஏற்படும், எவ்வாறு அதில் இருந்து காக்கலாம், எப்படிப்பட்ட உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடையை பற்றி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெரும்மழைதான் வெள்ளமே..!

பெரும்மழைதான் வெள்ளமே..!

இயற்கை தாயின் ஒரு அழகிய பிள்ளை இந்த மழை. மழை இல்லை என்றால் பூமியில் எந்த வித உயிரினங்களும் வாழ இயலாது. ஏனெனில் மழைதான் நீருக்கு முதல் ஆதாரமாக விளங்குகிறது. முன்பெல்லாம் இயற்கையின் செயல்பாடு சீராக இருந்ததால், அந்த குறிப்பிட்ட மாதம் தவறாமல் மழை பெய்து விடும். ஆனால் இன்று பல்வேறு கால மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் இது சற்றே மாறி பெய்து வருகிறது. அதனால் அதிக படியான அளவில் மழை பெய்து விடுகிறது. இதுவே வெள்ளம் என கருதப்படுகிறது.

வெள்ளத்திற்கு முன்பு #1

வெள்ளத்திற்கு முன்பு #1

முதலில் ஒன்றை நன்கு மனதில் வைத்து கொள்ள வேண்டும். எந்த ஒரு இயற்கை சீற்றமாக இருந்தாலும் அது மனிதனாலும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எடுத்துக்காட்டாக, நாம் அதிகமாக வாகனங்களை பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளியாகும் நச்சு புகை, அமில மழை மற்றும் சில. குறிப்பாக எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பைகளை அப்படியே போட்டு விடுவது. இது கால்வாய்களில் அடைத்து கொண்டு இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் நீர் போக்கை முற்றிலுமாக தடை செய்கிறது.

வெள்ளத்திற்கு முன்பு #2

வெள்ளத்திற்கு முன்பு #2

எனவே பிளாஸ்டிக் பைகளை எப்போதும் சரியான முறையில் கவனத்துடன் குப்பை தொட்டியில் போடா வேண்டும். மேலும் எந்த ஒரு குப்பையையும் சீரான வழியில் கையாள வேண்டும். மழை அதிகமாக பெய்கிறதென்றால் கட்டாயம் வீட்டிற்குள்ளே இருங்குங்கள். மேலும் வானிலை அறிக்கையை உடனுக்குடன் ரேடியோ அல்லது தொலைக்காட்சியின் மூலம் அறிந்து கொள்ளுங்கள். அதில் கூறும் தகவலின் படி செயல்படுங்கள்.

வெள்ளத்திற்கு முன்பு #3

வெள்ளத்திற்கு முன்பு #3

வெள்ள ஆபாய எச்சரிக்கையை, ரேடியோ அல்லது சாதாரண முறையில் ரோந்து வண்டிகளில் விடுத்தால், உடனடியாக அவர்கள் கூறும் நிவாரண இடத்திற்கு செல்ல வேண்டும். அத்துடன் கையில் டார்ச், துணிகள் சில, முக்கிய பத்திரங்கள், குறிப்பாக குடி நீர் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும். வீட்டை விட்டு நிவாரண முகாமிற்கு செல்லும்போது வீட்டில் உள்ள குழாய்களை அடைத்து விட்டீர்களா என்பதை பரிசோதித்து கொள்ளவும்.

வெள்ளத்திற்கு முன்பு #4

வெள்ளத்திற்கு முன்பு #4

எப்போதும் வெள்ளம் ஏற்பட்டவுடன் மின் இணைப்பு மற்றும் கேஸ் இணைப்பை வீட்டில் துண்டித்து விடுங்கள். மேலும் எந்த வித மின் சாதனைகளையும் பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள். அந்த நேரத்தில் அரசாங்கம் மற்றும் நிவாரண குழுக்கள் கூறும் ஆலோசனைகளை கடைபிடிப்பது மிக அவசியமானது. அனைத்திற்கும் மேலாக அரசாங்கத்தில் இருந்து வரும் தகவல்களை மட்டும் நம்புகள். வதந்திகளை ஒரு போதும் நம்பாதீர்கள்.

வெள்ள நேரத்தில் #1

வெள்ள நேரத்தில் #1

வெள்ளம் ஏற்பட்டவுடன் அதிகம் பாதிக்கப்படுவது நீர் இன்மையால்தான். அந்த நேரத்தில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அப்போது வெளியில் பெய்கின்ற மழை நீரை பாத்திரங்களில் பிடித்து கொண்டு பயன்படுத்தலாம். பொதுவாக இது போன்ற நேரங்களில் நீரை சூடு செய்தே குடிக்க வேண்டும். ஆனால் சூடு செய்ய சாதனங்கள் இல்லை என்பதால், துணியால் வடிகட்டி குடிப்பது சற்றே சிறந்தது.

வெள்ள நேரத்தில் #2

வெள்ள நேரத்தில் #2

வெள்ள நேரத்தில் வீட்டிற்கு அருகில் அதிக நீர் தேங்கி நிற்கும். அது கால்வாய் நீருடன் கலந்தே இருக்கும். இதனால், பல்வேறு நோய் தொற்றுகள் வர கூடும். எனவே, வீட்டிற்கு அருகில் நீர் தேங்கி உள்ள இடத்தில ப்ளீச்சிங் பவுடர் அல்லது உப்பு தெளிப்பது மிக நன்று. இது கிருமிகளை கொல்லும் ஆற்றல் பெற்றது. இது போன்ற நேரங்களில் ஏதேனும் காயங்கள் உடலில் ஏற்பட்டு இருந்தால் கட்டாயம் நன்கு சுத்தம் செய்து விட்டு துணியால் அதனை முழுக்க சுத்தி விடவும்.

வெள்ள நேரத்தில் #3

வெள்ள நேரத்தில் #3

பொதுவாக வெள்ள நேரத்தில் அடுத்து முக்கிய இடத்தில் இருப்பது உணவே. இருக்கும் ஒரு சில உணவு பொருட்களை வைத்து நன்கு சமைத்து உண்ண வேண்டும். மேலும் கைகளை சுத்தம் செய்த பிறகே சாப்பிட வேண்டும். மேலும், இந்த நேரங்களில் குளிர் சாதன பெட்டியில் உள்ள உணவுகளை தவிர்ப்பது நன்று.

உணவே இல்லாத பட்சத்தில் நீரை கொதிக்க விட்டு அதில் 5 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து குடியுங்கள். இது உடலில் நீர் சத்து குறையாமல் காக்கும். குறிப்பாக நீரை அப்படியே குடித்தால் காலரா, மலேரியா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

வெள்ளதிற்கு பின் #1

வெள்ளதிற்கு பின் #1

வெள்ளம் வடிந்த பிறகுதான் மிக முக்கியமாக இருக்க வேண்டும். வெள்ளம் வடிந்து விட்டதே என்று எண்ணி எல்லா இடத்திற்கும் செல்வதை சில காலங்கள் நிறுத்துங்கள். ஏனெனில் திடீரென்று அந்த பகுதியில் இருந்து வெள்ளம் வெளியேறலாம். இதனை தடுக்க ஏதேனும் வாகனங்கள் கொண்டு செல்வது சற்றே உகந்தது.

வெள்ளதிற்கு பின் #2

வெள்ளதிற்கு பின் #2

வெள்ள நிவாரண முகாமில் இருந்து நம் வீட்டிற்குள் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் வெள்ளத்தில் அடித்து கொண்டுவந்த பூச்சிகள், பாம்புகள், மேலும் சில உயிரினகள் வீட்டிற்குள் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், வீட்டிற்குள் சென்றவுடன் காஸ் லீக் ஏதேனும் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வீட்டில் நுழைந்த உடனேயே மின் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

வெள்ளதிற்கு பின் #3

வெள்ளதிற்கு பின் #3

வீட்டில் தேங்கியுள்ள நீரை வாக்கும் கிளீனர் போன்றவற்றை பயன்படுத்தி நீக்காதீர்கள். அடுத்து வீட்டில் உள்ள நீரை அப்படியே பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், வெள்ளத்தில் நீரானது சாக்கடையுடன் சேர்ந்திருக்கும். எனவே, வெள்ளம் ஏற்பட்ட பிறகு நீரை சூடு செய்து, வடிகட்டி குடியுங்கள்.

எனவே எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் மிக தையிரியமுடன் செயல்பட்டு உங்களையும் உங்கள் அருகில் இருப்போரையும் காத்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Safety, Health & Hygiene Tips For Floods

A flood is an overflow of water that submerges land that is usually dry. The European Union (EU) Floods Directive defines a flood as a covering by water of land not normally covered by water.
Desktop Bottom Promotion