Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
இந்த இடத்துல 2 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்...! பிறகு உடலில் என்ன நடக்குதுன்னு நீங்களே தெரிஞ்சிப்பீங்க
நமது உடலில் பல வகையான புள்ளிகள் உள்ளது. அவை ஒவ்வொன்றிற்கும் பலவித தொடர்புகளும், நோய்களை தீர்க்கும் ஆற்றலும் இருக்கின்றன. இந்த புள்ளிகள் உடலில் சில முக்கிய இடத்தில் மட்டுமே உள்ளதாம்.

இவ்வாறு வெறும் 2 நிமிடம் மட்டும் அழுத்தி பிடித்தால் பல வகையான மாற்றங்கள் உங்களின் உடலில் நடக்குமாம். உண்மையில் இது சாத்தியமாகுமா..? இதை எப்படி நம்புவது என நினைப்பவர்களுக்கே இந்த பதிவு. வாங்க, புதுவித விஞ்ஞானத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

நோய்களை விரட்டி அடிக்க...
நமது உடலில் உள்ள பல வகையான நோய்களை விரட்டி அடிக்க இந்த எளிய முறை நன்கு உதவும். வெறும் 2 நிமிடம் உடலில் உள்ள ஒரு சில முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்தால் எளிதில் பல வித உடல் சார்ந்த பிரச்சினைகள் தீர்ந்து விடுமாம். இதை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பரவலாக கடைபிடித்து வரும் மருத்துவ முறையாகும்.

அடிபாதத்தில்
உங்களின் அடி பாதத்தின் நடு மையத்தில் 2 நிமிடம் அழுத்தி பிடித்திருந்தால் பல வகையான நோய்கள் காணாமல் போய்விடுமாம். இந்த புள்ளியை சிறுநீரக புள்ளி என்றே அழைப்பார்கள். இந்த புள்ளியில் அழுத்தம் தந்தால் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்து கொள்கிறது. பசியின்மை, சோம்பேறி தனம், ஆகியவற்றை குணப்படுத்த கூடிய ஆற்றல் இந்த புள்ளிக்கு உள்ளதாம்.

கையின் உட்பகுதியில்
பொதுவாக கையில் உள்ள ஒவ்வொரு புள்ளிகளும் நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் குறிக்கிறதாம். நீங்கள் கையின் உட்பகுதியில் 2 நிமிடம் அழுத்தம் கொடுத்தால் இதயம், நுரையீரல், தொண்டை போன்ற உறுப்புகளில் ஏற்பட கூடிய பாதிப்புகள் தடுக்கப்படுகிறது.

கழுத்து வலி பறந்து போக
பலர் இன்று கணினி சார்ந்த வேலைகளை அதிகம் செய்து வருகின்றனர். இது போன்ற நிலையில் அவர்களின் கழுத்து எலும்பு மிகவும் பாதிக்கப்பட்டு பல வித ஆபாயங்களை சந்திக்கிறது. இதனை எளிதில் குணப்படுத்த, ஆமணக்கு எண்ணெய்யை வலி உள்ள இடத்தில் ஊற்றி இரு கைகளை கொண்டு மசாஜ் உடன் அழுத்தத்தையும் சேர்ந்து கொடுத்தால் எளிதில் கழுத்து வலி குணம் அடையும்.

கட்டை விரல்
கட்டை விரல் மிக முக்கிய விரலாக கருதப்படுகிறது. உங்களின் தலை, மூளை, கண்கள் சார்ந்த பாதிப்புகளை இவை பார்த்து கொள்கிறது. மேலும், உங்களுக்கு இந்த மூன்று உறுப்புகளிலும் ஏதேனும் பாதிப்பு இருந்தால் கட்டைவிரலை நன்கு அழுத்தி 2 நிமிடம் வரை பிடித்து கொள்ளவும். மிக விரைவில் இதன் பிரச்சினைகளை குணப்படுத்தி விடுமாம்.

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த முறையை தாராளமாக கடைபிடிக்கலாம். கால் கீழ்பகுதியின் பின்புறத்தில்(கொலுசு அணியும் இடத்தில்) உள்ள புள்ளியை 2 முதல் 5 நிமிடம் அழுத்தம் தந்தால், எதிர்ப்பு சக்தி உடனடியாக அதிகரிக்குமாம்.

பின்னந்தலை
உங்களின் பின்னந்தலையில் ஒரு அற்புதமான புள்ளி உள்ளது. இவை உங்களின் மன குமுறல்களை எளிதில் குணப்படுத்தி விடுமாம். பின்னந்தலையில் கீழ் பகுதியில் இரு கைகளை கொண்டு அழுத்தம் தந்தால் உளவியல் சார்ந்த பிரச்சினைகள் பல தீர்ந்து விடும். மேலும், இரவில் நிம்மதியான தூக்கமும் வரும்.

தொப்புள் புள்ளி
பலருக்கு இன்றைய முக பெரிய பிரச்சினை காலை கடனை மிக கடினமாக கழிப்பதே. இந்த மலச்சிக்கல் பிரச்சினையிலும், செரிமான கோளாறுகளிலும் இருந்து தப்பிக்க, தொப்புளின் 3 cm கீழ் பகுதியில் அழுத்தம் தந்தால் இதற்கு தீர்வு கிடைத்து விடும்.

5 நிமிடம் பிளீஸ்..!
உங்களின் நடுவிரலை 5 நிமிடம் இழுத்து பிடித்திருந்தால், பல பலன்கள் கிடைக்கும். முக்கியமாக உங்களின் பயம், தயக்கம், நடுக்கம் ஆகியவற்றை இந்த புள்ளி சரி செய்து விடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் நல்ல மன ஓட்டத்தையும் இவை தருமாம்.

காலின் மேற்பகுதி
காலின் பெரு விரலுக்கும், நடு விரலுக்கும் இடையில் உள்ள இடத்தில் 2 நிமிடம் அழுத்தம் கொடுத்தால் தலை வலி, பாத வலி போன்ற பல வலிகளில் இருந்து உங்களை விடுதலை பெற செய்யும் வழி இதுதான்.
இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications
