Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
இந்த வகை சிகரெட் பிடித்தால் எந்த பாதிப்பும் வராதாம்..! உண்மையா..? கட்டுக்கதையா...?
இன்றைய இளைஞர்களை அதிகம் ஆட்டி படைத்து கொண்டிருக்கின்ற மிக மோசமான பழக்கம் இந்த புகை பழக்கம். இதை ஒரு ஃபேஷனாகவே மக்கள் இப்போதெல்லாம் கருதுகின்றனர். ஆனால், இந்த பழக்கம் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே உண்மை.

புகை பிடிக்கும் ஒவ்வொருவரும் தனக்குள் ஒரு வித கோட்பாட்டை வைத்து கொள்கின்றனர். சிலர், கொஞ்சமாக புகை பிடித்தால் உடலுக்கு எதுவும் ஆகாது என்றும், வேறு சிலர் விலை அதிகம் உள்ள சிகரெட்கள் ஆபத்தை தராது என்கிற போலியான எண்ணங்களை தனக்குள்ளே வைத்து கொள்கின்றனர்.

புகை யாருக்கும் பகை இல்லையா..?
"புகை பிடித்தல் உயிரை கொல்லும்" என்கிற வாசகத்தை ரத்தத்தால் எழுதி வைத்தாலும், பார்த்து விட்டு மீண்டும் புகை பிடிக்க சென்று விடுவார்கள். இந்த பழக்கம் இன்று நேற்று வந்தது கிடையாது. பல ஆயிரம் வருடமாக வேறு வேறு மாறுதல்களை பெற்று வருகின்றது. இது எல்லா காலத்திலும் உயிரை குடித்து விடும் என்பதே உண்மை.

e-cigarettes எப்படி..?
புகை பிடிக்கும் பலர் இந்த வகை e-cigarette-களை பயன்படுத்துவதால் புற்றுநோய் வராது என்றும், உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது என்றும் நினைக்கின்றனர். ஆனால், இதில் அடைக்கப்பட்டுள்ள திரவம் அதிக நச்சு தன்மை உடையதாகும். அத்துடன் இதனை பயன்படுத்தினால் விரைவிலே மரணம் நிச்சயம்.

புகை பல விதம்..!
பலருக்கு இது நன்கு தெரிந்த ஒன்றுதான். புகை பிடிக்கும் புகை இலையுடன் பல வகையான ஃபிளவர்கள் சேர்த்து மனமுடன் புகையை விடுகின்றனர். இது பெரிதும் பெண்கள் விரும்புகின்றதாக இருக்க கூடியவை. ஐஸ் கிரீம்களை போன்று வெண்ணிலா, ஸ்ட்ராவ்பெரி, பைன் ஆப்பிள், சாக்லேட் போன்ற ஃபிளவர்கள் இருப்பதால் எந்த பாதிப்பும் வராது என எண்ணுகின்றனர். ஆனால், இவை புகை இலையுடன் சேர்ந்து இருப்பதால் நுரையீரலை நிச்சயம் பாதிக்குமாம்.

என்னை தவிர வேறு யாரு..?
புகை பிடிக்கும் நண்பர் ஒருவராவது நம்முடன் நட்பாக இருப்பார். அந்த நண்பர் புகை பிடிக்கும் போது நாம் அவருடனே தான் இருப்போம். அந்த புகையை யார் சுவாசித்தாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு புற்றுநோய் உண்டாக கூடும். இது புகை பிடிப்பவருக்கும், அவருடனே இருக்கும் நண்பர்களுக்கும் நிச்சயம் ஆபத்தை உண்டாக்கும்.

புதினா ஃபிளவர் சிகரெட்கள்
பலர் ஒரு மிக பெரிய தவறான கருத்தை தனக்குள்ளே வைத்துள்ளனர். அதாவது, புதினா ஃபிளவர் கொண்ட சிகரெட்கள் நுரையீரலை பாதிக்காது என கருதுகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் இந்த வகை சிகரெட்கள் குளிர்ந்த தன்மையை உங்களுக்கு தருவதால் மேலும் நிறைய சிகரெட்களை குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தந்து, பேராபத்தை ஏற்படுத்தும்.

ஃபில்டர் சிகரெட் எப்படி..?
புகை பிடிக்கும் பழக்கம் இருபவர்களை கவர்வதற்காகவே இது போன்ற சிகரெட்டுகள் வரிசை கட்டி கொண்டு வருகிறது போல. பலருக்கு ஃபில்டர் சிகரெட் பயன்படுத்தினால் அந்த வித பாதிப்பும் ஏற்படாது என தவறாக நினைத்துள்ளனர். இந்த வகை சிகரெட்கள் புகையிலையை நன்கு நசுக்கி புகையை எளிதில் உள்ளே இழுக்க வழி செய்கிறதே தவிர நன்மையை தராது.

எப்போவாவதா..?
social smoker என்ற அடிப்படையில் பலர் மோசமான குறிக்கோளை கடைபிடித்து வருகின்றனர். அதாவது, எப்போதாவது புகை பிடித்தால் எந்த வித நோய்களின் தாக்குதலும் இருக்காது என எண்ணுகின்றனர். ஆனால், எப்போதாவது புகை பிடித்தாலும் உடல் ஆரோக்கியம் சீர்கேடு அடையும் என்பதே உண்மை.

புகைத்தால் இறக்கமாட்டோம்..!
புகை பழக்கம் மரணத்தை தராது என பலர் தப்பு கணக்கு போட்டு வைத்துள்ளனர். உங்களின் புகை பழக்கம் பலவித பக்க விளைவுகளை உடலில் ஏற்படுத்தும். பல கோடி மக்கள் புகை பழக்கத்தால் பாதிக்கப்பட்டு மரணத்தை கண்ணீர் பரிசாக பெற்றுள்ளனர்.

ஒருபக்கம் புகை..! மறுபக்கம் உணவு..!
புகை பழக்கம் பாதிக்க கூடாது என்பதற்காக ஆரோக்கியமான உணவும், உடற்பயிற்சியும் இருந்தாலே போதும் என்கிற மனப்போக்கு மிக தவறானது. புகை பழக்கத்தை நிறுத்துவதே எல்லாவற்றிருக்குமான தீர்வாகும்.

குழந்தைகளை கவருமா..?
ஃபிளவர்கள் நிறைந்த சிகரெட்களை நாம் குழந்தைகள் முன் பயன்படுத்தினால், இவை அவர்களை கவர அதிக வாய்ப்புகள் உண்டு. இதன் மனத்திற்காகவே பயன்படுத்த குழந்தைகள் விரும்புவார்கள். எனவே, குழந்தைகள் முன் இது போன்ற பழக்கங்களை செய்யாதீர்கள்.



Click it and Unblock the Notifications
