Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை விரட்டுவது எப்படி ?
ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றும் தனித்தனியாக பல்வேறு வாசனைகளில் பர்ப்யூம் கிடைக்கிறது. அதிகளவு பர்ப்யூம் உபயோகிக்கும்போது அது நமக்கு தோல் புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. இங்கே உடல்துர்நாற்
இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருவரும் போட்டிபோட்டு செய்யும் ஒரு செலவு என்றால் அது அழகு சாதனங்களுக்காகத்தான். உண்மைதான் பெண்கள் அளவிற்கு ஆண்களும் தங்களை அழகாகவும், நேர்த்தியாகவும் வெளியிடங்களில் காட்டிக்கொள்ள விரும்புவதாக சமீபத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. நேர்த்தி என்று வரும்போது அதில் முக்கிய இடம் பிடிப்பது வாசனை திரவியங்கள்.

ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றும் தனித்தனியாக பல்வேறு வாசனைகளில் பர்ப்யூம் கிடைக்கிறது. நாம் இதனை உபயோகப்படுத்த காரணம் நம் உடலில் இயற்கையாக எழக்கூடிய துர்நாற்றம்தான். இதற்கு நம் உணவுப்பழக்கமும் ஒரு காரணமாகும். அதே உணவுகளை வைத்து நாம் அந்த துர்நாற்றத்தை விரட்டாலம். அதுவே ஆரோக்கியமானதும் கூட. ஏனெனில் அதிகளவு பர்ப்யூம் உபயோகிக்கும்போது அது நமக்கு தோல் புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. இங்கே உடல்துர்நாற்றத்தை போக்கும் உணவுகள் என்னவென்பதை பார்க்கலாம்.

வெந்தயம்
நம் உடலில் உள்ள நச்சு பொருட்களை வெளியேற்றுவதில் வெந்தயத்தின் பங்கு முக்கியமானது. இதன் இலைகளை மற்றும் விதைகள் இரண்டுமே உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. ஒரு டம்ளர் நீரில் சிறிது வெந்தயத்தை போட்டு கொதிக்கவைத்து அதனை குடித்தால் நாள் முழுவதும் உங்கள் உடலில் துர்நாற்றம் ஏற்படாது.

அருகம்புல்
எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டது அருகம்புல். அருகம்புல்லில் குளோரோபில் அதிகளவு உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கும். ஒரு டம்ளர் பாலில் இரண்டு ஸ்பூன் அருகம்புல் சாறு சேர்த்து காலையில் குடித்தால் மாலை வரை புத்துணர்ச்சியாகவும், துர்நாற்றம் இல்லாமலும் இருக்கலாம்.

இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை வாய் துர்நாற்றத்தை போக்க கூடியது என்பது நாம் அறிந்ததே. ஆனால் இது ஒரு இயற்கை வாசனை திரவியமாக செயல்படக்கூடியது என்பது நாம் அறியாத ஒன்று. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் துர்நாற்றம் காணாமல் போகும். சில துண்டு இலவங்கப்பட்டையை வாயில் போட்டு தினமும் இரண்டு முறை மென்றாலே போதும் உங்களுக்கு பர்ப்யூம் தேவையில்லை.

ரோஸ்மேரி டீ
ரோஸ்மேரி டீ உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கிறது, மேலும் இதில் மென்தால் மற்றும் குளோரோபில் அதிகளவில் உள்ளது. இவை இரண்டுமே துர்நாற்றத்தை விரட்டும் தன்மையுடையவை.

ஏலக்காய்
ஏலக்காய் உங்கள் உணவில் வாசனையை சேர்க்கும் என்று மட்டும்தான் நாம் அறிவோம், ஆனால் இது உங்கள் உடலில் உராப்தியாகும் மோசமான துர்நாற்றத்தை விரட்டும் என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதன் இனிமையான நறுமணம் வாய் மற்றும் உடலதுர்நாற்றத்தை சரிசெய்யக்கூடியது.

எலுமிச்சை
உடலின் பல ஆரோக்கிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருள் எலுமிச்சை ஆகும். தலைவலியில் இருந்து உடல் எடை குறைப்பு வரை அனைத்திற்கும் எலுமிச்சை உபயோகப்படுகிறது. இயற்கையிலேயே அமிலத்தன்மை இருப்பதால் இது உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்து உடலில் நல்ல வாசனையை ஏற்படுத்துகிறது. ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு குடிப்பது உங்களுக்கு அதிகளவு ஆன்டிஆக்சிடண்ட்களை வழங்குகிறது. இதனால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது.

க்ரீன் டீ
உங்கள் உடல் துர்நாற்றத்தை போக்கும் ஒரு சிறந்த நண்பன் க்ரீன் டீ ஆகும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் உடலில் நச்சுக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை குறைக்கிறது. தினமும் இரண்டு கப் க்ரீன் டீ குடிப்பது உங்கள் உடலை இயற்கையாகாவே வாசனையாக வைத்திருக்கும்.

ஆரஞ்சு
ஆரஞ்சு எளிதில் செரிக்கக்கூடிய ஒரு பொருள் அதேசமயம் இயற்கை அமிலத்தன்மை கொண்டது. எனவே உங்கள் உடலில் உள்ள துர்நாற்றத்தை எளிதில் போகக்கூடும். இதை பழமாகவும் சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் குடிக்கலாம், எப்படி பயன்படுத்தினாலும் இது உடலில் இயற்கையாக வாசனையை அதிகரிக்கக்கூடியது.

தேங்காய் எண்ணெய்
செரிமான கோளாறு உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா? செரிமானம் உங்கள் உடலில் மறைமுகமாக நாற்றத்தை ஏற்ப்படுத்தக்கூடும். எனவே தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
