Latest Updates
-
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்களுக்கு மட்டும் மரபணு மூலம் ஏற்படும் பாலியல் நோய்
ஆண்களை மட்டுமே தாக்கும் நோய்கள் பெரும்பாலும் மரபணுக்களில் இருந்து ஏற்படுவதாகவே உள்ளது. அப்படி மரபணு மூலம் ஆண்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு நோய்தான் க்ளின்ஃபெல்டர் நோயாகும்.
உடலமைப்பு என்பது ஆண்கள் மற்றும் பெண்களை பொறுத்தவரையில் ஒரே மாதிரியானதாக இருக்கலாம். ஆனால் இருவருக்கும் ஏற்படும் தனித்துவமான பிரச்சினைகள் நிறைய உள்ளன. பெண்களுக்கு மட்டும் எப்படி மாதவிடாய் ஏற்படுகிறதோ அதேபோல ஆண்களை மட்டும் பாதிக்கும் நோய்கள் சில இருக்கிறது.

ஆண்களை மட்டுமே தாக்கும் நோய்கள் பெரும்பாலும் மரபணுக்களில் இருந்து ஏற்படுவதாகவே உள்ளது. அப்படி மரபணு மூலம் ஆண்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு நோய்தான் க்ளின்ஃபெல்டர் நோயாகும். ஆண்களின் முன்னோர்கள் யாருக்கேனும் இந்த நோய் இருந்தாலும் அவர்களை இந்த கொடிய நோய் தாக்க நேரிடும். இந்த பதிவில் க்ளின்ஃபெல்டர் நோய் பற்றிய விரிவான தகவல்களை பார்க்கலாம்.

க்ளின்ஃபெல்டர்
க்ளின்ஃபெல்டர் நோய் என்பது ஆண்களின் உடல் மற்றும் மூளையை பாதிக்க கூடிய குரோமோசோம்கள் மூலம் பரவக்கூடிய ஒரு நோய். இதன் பாதிப்பு மற்றும் அறிகுறிகள் இது தாக்கிய நபரை பொருத்து மாறுபடும்.

அறிகுறிகள்
இதனால் பாதிக்கப்பட்டதற்கான முதல் அறிகுறி டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் சுரப்பு குறைவாக இருப்பதுதான். இந்த ஹார்மோன்தான் ஆண்களின் பாலியல் திறனை அதிகரிக்க கூடியதாகும். இது ஆண்கள் பருவமடைவதற்கு முன்பிலிருந்தே உற்பத்தியாக தொடங்கிவிடும். டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு தாமதமாக பருவமடைதல், மார்பக வளர்ச்சியில் குறைபாடு, முகம் மற்றும் மார்பில் முடி வளர்ச்சியின்மை போன்ற குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும்.

மோசமான விளைவுகள்
மேலே கூறியவை மட்டுமின்றி மரபணுவில் இருக்கும் இந்த நோய் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அவை ஆண்மைக்குறைவு, யுரேத்ரா நாளத்தில் பாதிப்பு, வழக்கத்தைவிட சிறிய ஆணுறுப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை விட உயரம் அதிகமாக இருப்பார்கள்.

குழந்தைகள்
க்ளின்ஃபெல்டர் நோயால் பதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு படிப்பதில் குறைபாடுகள், தாமதமாக பேச தொடங்குதல், பேச்சுகுறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். பாதிக்கப்பட்ட குழந்தைகள் அமைதியாகவும், உணர்ச்சிவசப்பட கூடியவராகவும், ஆளுமை குறைவானவர்களாகவும் காணப்படுவார்கள்.

மார்பக புற்றுநோய்
க்ளின்ஃபெல்டர் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மேலும் லூபஸ் எரிதிமடோசஸ் எனப்படும் நீண்டகால அழற்சி நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இது போன்ற பிரச்சினைகளில் இருந்து இயற்கை பெண்களை விலக்கி வைத்துள்ளது.

யாருக்கெல்லாம் இந்த நோய் இருக்கும்?
சமீபத்திய ஆய்வின்படி 1000 ஆண்களில் ஒருவருக்கு க்ளின்ஃபெல்டர் நோய் இருப்பதாக கண்டறிப்பட்டுள்ளது. புதிதாக பிறக்கும் குழந்தைகளில் 50000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த பாதிப்பு உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இதனை குணப்படுத்துவது கடினம் என்று கூறுகிறார்கள், ஏனெனில் இதனை ஆரம்ப காலத்தில் கண்டறிவதே கடினம். மற்ற சோதனைகளின் போது இதனை கண்டறிவதை தவிர இதனை விரைவில் கண்டுபிடிக்க வேறுவழியில்லை.

காரணங்கள்
க்ளின்ஃபெல்டர் X மற்றும் Y குரோமோசோம்களுடன் தொடர்புடையது. பொதுவாக மனிதர்கள் இரண்டு குரோமோசோம்களுடன் காணப்படுகிறார்கள். பெண்கள் இரண்டு X குரோமோசோம்களுடன் இருப்பார்கள். ஆண்கள் ஒரு X மற்றும் ஒரு Y குரோமோசோமுடன் பிறப்பார்கள். க்ளின்ஃபெல்டர் ஏற்பட காரணம் ஒவ்வொரு செல்லிலும் இரண்டு X குரோமோசோம்களும், ஒரு Y குரோமோசோமும் இருப்பதுதான், அதாவது XXY. இது ஆண்களின் பாலியல் திறனை பாதித்து டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை குறைக்கிறது.

கிளாசிக் க்ளின்ஃபெல்டர்
சிலருக்கு ஒவ்வொரு செல்லிலும் மூன்று X குரோமோசோம்கள் இருக்கும். அதாவது XXXY . இதனை கிளாசிக் க்ளின்ஃபெல்டர் என்று அழைக்கிறார்கள். இதன் விளைவுகள் க்ளின்ஃபெல்டரை விட மோசமாக இருக்கும். அதாவது பாலியல் இயலாமை, அறிவுசார்ந்த குறைபாடுகள், வித்தியாசமான முக அமைப்பு போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படும். உயிர் செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதன் விளைவுகள் அதிக மோசமாகி கொண்டே இருக்கும்.

மொசாய்க்
சிலருக்கு சில செல்களில் மட்டும் X குரோமோசோம்கள் அதிகமாய் இருக்கும். இந்த நிலை மொசாய்க் எனப்படும். எத்தனை செல்கள் இவ்வாறு இருக்கிறது என்பதை பொறுத்து இதன் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் இருக்கும்.

பரவும் விதம்
இவை எப்பொழுதும் மரபு வழியாக பரவுவதில்லை. பொதுவாக இந்த குரோமோசோம் மாற்றங்கள் பெற்றோர்களின் உயிரணுக்கள் சீரற்ற முறையில் இணைவதால் ஏற்படுகிறது. உயிர்செல்கள் தவறான முறையில் பிரிக்கப்படும் போது அவை சீரற்ற குரோம்சோம்களை உருவாக்குகிறது. குறிப்பாக ஆண்களின் உயிரணுவில் ஒரு X குரோம்சோம் அதிகமாக இருக்கும்போது அந்த ஒரு உயிரணு கருமுட்டைக்குள் சென்று கரு உருவாகும்போது இந்த பிரச்சினை ஏற்படும்.

தடுக்கும் முறை
இதனை தடுக்கும் முறை இதுவரை கண்டறியப்படவில்லை என்பது அதிரிச்சியான செய்தி. இதனை தடுக்க நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். உடலுறவில் ஈடுப்படும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அதேபோல குழந்தை பிறந்தவுடனேயே இதற்கான சோதனைகளை செய்ய வேண்டும். குழந்தையின் உடலிலோ அல்லது நடவடிக்கைகளிலோ ஏதெனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.



Click it and Unblock the Notifications