For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ஆணுறுப்பு ஆரோக்கியமா இருக்கான்னு தெரிஞ்சுக்கணுமா? வீட்லயே இப்படி டெஸ்ட் பண்ணிப்பாருங்க...

பொதுவாக நம்முடைய கண்ணின் நிறமும் நம் உயரமும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது. அதுபோலத்தான் ஆணுறுப்பும் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருக்காது. சராசரியாக 2 முதல் 4 இன்ச் வரை நீளம் இருக்கும். விறை

|

பொதுவாக நம்முடைய கண்ணின் நிறமும் நம் உயரமும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது. அதுபோலத்தான் ஆணுறுப்பும் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருக்காது.

is your penis normal?

சராசரியாக 2 முதல் 4 இன்ச் வரை நீளம் இருக்கும். விறைப்பு உண்டாகும் போது 5 முதல் 6 இன்ச் வரை இருப்பது சராசரி. இது சிலருக்கு கூடலாம். குறையவும் செய்யலாம். இதுபோன்ற இன்னும் ஏராளமான சந்தேகங்கள் பலருக்கும் ஏற்படுவதுண்டு. அந்த சந்தேகங்களுக்கு விடை தெரிய வேண்டுமென்றால், கீழே உள்ள கேள்விகளுக்கு நீங்களே விடை சொல்லி பாருங்கள். உங்கள் ஆணுறுப்பு ஆரோக்கியமாக இருக்கிறதா என நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஆணுறுப்பை உங்களால் முறிக்க முடிகிறதா ?

ஆணுறுப்பை உங்களால் முறிக்க முடிகிறதா ?

நீங்கள் ஆம் என்று சொன்னால் அது நிச்சயம் பொய். ஏனெனில் ஆணுறுப்பில் எலும்பு கிடையாது. அப்படி முறிப்பது இயலாத காரியம். ரத்தம் வேகமாக பரவி பீய்ச்சி அடிக்கும்போதுதான் விறைப்பு உண்டாகும். உடலுறுவின்போது முறிவது போல் தோன்றினால் லேசாக உங்களுக்கு சத்தம் கேட்கும். அதுவும் எலும்பு கிடையாது. அப்படி ஒருவேளை உறவின்போது முறிவு ஏற்பட்டால் அறுவை சிகிச்சை தான் அதற்கு சிறந்த தீர்வு. ஆணுறுப்பு சாதாரணமாக முறிவு ஏற்படாது. அதனால் நீங்கள் கவலைப்படத் தேவையே இல்லை.

எந்த வயதில் இருந்து ஆணுறுப்பில் முதன்முதலில் விறைப்பு உண்டாக ஆரம்பிக்கும்?

எந்த வயதில் இருந்து ஆணுறுப்பில் முதன்முதலில் விறைப்பு உண்டாக ஆரம்பிக்கும்?

1 வயதுக்கும் குறைவாக இருக்கும்போது, ஏன் சில குழந்தைகள் பிறக்கும்போதே ஆணுறுப்பு விறைப்புடன் பிறக்கும். இவ்வாறு குழந்தைகளுக்கு அவ்வப்போது விறைப்பு உண்டாவது பாலியல் இச்சைக்காக அல்ல. சில காரணங்களுக்காக அவ்வாறு தூண்டப்படுகிறது. உதாரணமாக டயப்பரை மாற்ற வேண்டிய நேரம் வந்தால், அதன் அசௌகரியத்தை வெளிப்படுத்த அவ்வாறு செய்கிறது.

தொடர்ந்து விறைப்பு இருந்தால் குளித்தால் சரியாகிவிடுமா?

தொடர்ந்து விறைப்பு இருந்தால் குளித்தால் சரியாகிவிடுமா?

தொடர்ந்து 4 மணி நேரம் வரை விறைப்பு இருந்தால் சிலர் வெதுவெதுப்பான நீரில் குளித்தால் சரியாகிவிடும் என்று சொல்வார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான வழிகாட்டுதல். குளிர்ந்த நீரோ ஐஸ் கட்டிகளோ வேண்டுமானால் விறைப்பை குறைக்க உதவும். ஒருபோதும் வெந்நீரில் குளிக்கக்கூடாது. தொடர்நது நிறைய மருந்துகள் எடுத்தல், போதைப்பழக்கத்துக்கு அடிமையாதல் போன்ற பல காரணங்களால் இந்த பிரச்னைகள் உண்டாகின்றன.

ஆணுறுப்பின் மேல் புள்ளிபுள்ளியாக இருக்கிறதா?

ஆணுறுப்பின் மேல் புள்ளிபுள்ளியாக இருக்கிறதா?

ஆணுறுப்பின் மேல்பகுதியில் புள்ளிகள் இருப்பது கவலையாக இருக்கிறதா?... சிலர் அப்படி இருப்பதை நினைத்து, ஏதேனும் நோய்த்தொற்று இருக்குமா என்று பயப்படுவார்கள். அது ஏதோ நோய்க்குறிகள் போல் பலர் நினைத்துக் கொள்கிறார்கள். அந்தப் பகுதியில் வளர்ச்சியடையாத மயிர்கால்களின் துளைகள் தான் அப்படி ஆகின்றன. அப்படி இல்லாமல் இருந்தால் தான் ஆணுறுப்பின் சருமத்தைப் பாதிக்கும்

முழு விறைப்புடன் இருக்கும்போது சராசரியாக எவ்வளவு நீளம் இருக்கும்?...

முழு விறைப்புடன் இருக்கும்போது சராசரியாக எவ்வளவு நீளம் இருக்கும்?...

என்னதான் விறைப்பு வந்தாலும் என்னுடைய உறுப்பு சிறியதாக இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்க்ள. இப்படி தாழ்வு மனப்பான்மையாக நினைப்பதை பெனிலி டைஸ்மார்பிக் டிசார்டர் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் எவ்வளவு விறைப்புத்தன்மை இருநு்தாலும் சராசரியாக, 5 முதல் 6.5 இன்ச் இருப்பதே ஆரோக்கியமானது தான். அதைவிட பெரிதாகக் கூடாது என்பதெல்லாம் கிடையாது. அது சராசரியான அளவு தான். அதை நினைத்து வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பாதத்துக்கும் ஆணுறுப்பின் நீளத்துக்கும் சம்பந்தம் உண்டா?

பாதத்துக்கும் ஆணுறுப்பின் நீளத்துக்கும் சம்பந்தம் உண்டா?

சிலர் கால் பாதத்தின் நீளத்துக்கும் ஆணுறுப்பின் அளவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது வெறும் கட்டுக்கதை. ஆணுறுப்பின் நீளத்திற்கும் கால் பாதத்தின் நீளத்துக்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது. ஒருவேளை நீங்கள் ஓவர் வெயிட்டாக இருந்தால் வேண்டுமானால் உங்களுடைய உறுப்பின் நீளத்தை உங்களால் காண முடியாமல் உங்கள் தொப்பை உங்களை மறைத்துக் கொள்ளலாம்.

தூங்கும்போது விறைப்பு உண்டாவது இயற்கையா, நோயா?...

தூங்கும்போது விறைப்பு உண்டாவது இயற்கையா, நோயா?...

தூங்கும்போது சிலருக்கு ஆணுறுப்பு விறைத்துக் கொண்டிருக்கும். அது இயற்கையான ஒன்று தான். பொதுவான ஆண்கள் தூங்கும்போது மூன்று முதல் ஐந்து முறை விறைப்புக்கு உள்ளாகிறார்கள் என்று ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. இதற்கு கனவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இது இயற்கையான ஒன்று தான்.

அறுவை சிகிச்சை மூலம் ஆணுறுப்பை பெரிதாக்க முடியுமா?

அறுவை சிகிச்சை மூலம் ஆணுறுப்பை பெரிதாக்க முடியுமா?

நிச்சயம் முடியும். ஆனால் ஓரளவுக்கு பெரிதாக்கலாமே ஒழிய மிகவும் பெரிதாக மாற்றவியலாது. நீளம் மட்டுமல்ல அதன் தடிமனையும் அதிகரிக்கச் செய்ய முடியும். ஆனால் இதற்கு அதிக செலவாகும். வலி அதிகம் இருக்கும்.இது தேவையில்லாத ரிஸ்க்.

சுயஇன்பம் செக்ஸை விட ஆரோக்கியமானதா?

சுயஇன்பம் செக்ஸை விட ஆரோக்கியமானதா?

நிச்சயமாக இல்லை. சுய இன்பத்தால் வேறு எந்த பக்க விளைவுகளோ துன்பமோ இருக்காதுதான். ஆனால்அது உடலுறுவைக் காட்டிலும் ஆரோக்கியம் என்று சொல்ல முடியாது. உடலுறவின் போது விந்து ஆரோக்கியமான முறையில் உற்பத்தி செய்வதும் வெளியேறுவதும் என இரண்டு செயல்களும் நடக்கின்றன. ஆனால் சுயஇன்பத்தில் அவ்வாறு இல்லை. விந்து வெளியேற்றம் மட்டும் தான் நடக்கும்.

விறைப்பு தவிர மற்ற நேரங்களில் ஏன் சுருங்கியிருக்கிறது?

விறைப்பு தவிர மற்ற நேரங்களில் ஏன் சுருங்கியிருக்கிறது?

விறைப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் ஆணுறுப்பு சுருங்கியிருப்பதற்கு டெஸ்ட்ரஜோன் குறைவாக சுரப்பது காரணம் என்று தவறான கருது்து பரப்பப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. அந்த உறுப்ப சுருக்கம் விந்துக்களை பாதுகாப்பாக வைத்திக்கிறது. வெப்பநிலைக்கு ஏற்ப வெதுவெதுபு்பாகவும் குளிர்ச்சியாகவும் தன்னைத் தானே மாற்றிக் கொள்கிறது.

வாரத்துக்கு 5 முறைக்கு மேல் சுயஇன்பம் மேற்கொள்வது ஆபத்தானதா?

வாரத்துக்கு 5 முறைக்கு மேல் சுயஇன்பம் மேற்கொள்வது ஆபத்தானதா?

நிச்சயமாக இல்லை. இத்தனை முறை தான் சுய இன்பம் மேற்கொள்ள வேண்டும் என்ற வரைமுறைகள் கிடையாது. அவர்களுடைய சூழல், பாலியல் தூண்டல் ஆகியவற்றைப் பொருத்துதான் அதன் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வாரத்துக்கு 5 முறைக்கு மேல் சுயஇன்பம் மேற்கொள்வது ஆபத்தானது என்பது வெறும் கட்டுக்கதை தான்.

ஆணுறுப்பு ஒருபக்கமாக தொங்கிக் கொண்டிருப்பது நார்மலா?

ஆணுறுப்பு ஒருபக்கமாக தொங்கிக் கொண்டிருப்பது நார்மலா?

சிலருக்கு விறைப்பின்றி சாதாரண நிலையில் இருக்கும்போது ஒரு பக்கமாக திரும்பித் தொங்கிக் கொண்டிருக்கும். அதனால் ஏதாவது பிரச்னை வருமா அது நார்மலா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. நன்றாக ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆணுறுப்பின் வடிவம் நேர் செங்குத்தானது அல்ல. அது லேசாக வளைந்து தான்இருக்கும். அதற்கு விதைப்பையும் ஒரு காரணம். இடது மற்றும் வலது விதைப்பையில் ஏதாவது ஒன்று சிறய அளவுடையதாக இருக்கும். அதனால் அந்த திசையில் ஆணுறுப்பு தொங்கிக் கொண்டிருக்கும்.

40 வயதுக்கு மேல் விறைப்புத்தன்மை எப்படி இருக்கும்?

40 வயதுக்கு மேல் விறைப்புத்தன்மை எப்படி இருக்கும்?

40 வயதுக்கு மேல் உள்ளவர்களில் எத்தனை பேர் விறைப்புத்தன்மை உண்டாகாமல் பாதிக்கப்படுகிறார்கள். கிட்டதட்ட 40 சதவீதம் ஆண்கள் இந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். 70 வயதுக்குமேல் 70 சதவீதம் பேர் இந்த பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்க்ள. உடல்பருமன், சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் என எதுவுமே இல்லாத போது இந்த பிரச்னை உண்டானால் மருத்துவரை பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Your Penis Normal?

just like your eye color and your height. So there’s no “normal” size, because everyone is different. Studies have shown that the average penis size ranges from 2-4 inches without an erection, and between 5-6 inches with an erection.
Story first published: Tuesday, March 27, 2018, 11:54 [IST]
Desktop Bottom Promotion