Latest Updates
-
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...!
விறைப்பு தன்மையை போக்கி, தாம்பத்தியத்தில் திருப்தி அடைய செய்யும் தர்பூசணி ...!
தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு பல வகையாக இயற்கை உதவும்.
பூமியில் இருக்க கூடிய ஒவ்வொரு உயிரினங்களும் எதோ ஒரு வகையில் மற்றொரு உயிரினத்திற்கு உதவத்தான் செய்கிறது. இங்கு கிட்டத்தட்ட பெரும்பாலான ஜீவ ராசிகள் ஒன்றை ஒன்று சார்ந்துதான் இயங்குகிறது. இவற்றை ஒரு பிணைப்பாகவோ அல்லது சங்கிலி தொடராகவோ கூறலாம். அந்த வகையில் மனிதன் மட்டும் விதி விலக்கல்ல. பல வகையான தாவரங்களையும், மரங்களையும், விலங்குகளையும் மனிதன், சார்ந்துதான் இருக்கின்றான். அவை அனைத்தும் மனித குலத்துக்கு எண்ணற்ற பலன்களை தருகிறது.

மனிதன் இன்னொரு உயிரை உயிர்ப்பிக்க வேண்டுமானாலும் இவற்றின் உதவி நிச்சயம் தேவைதான். அதாவது தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு பல வகையாக இயற்கை உதவும். அந்த வகையில் தர்பூசணி எவ்வாறு இல்லற வாழ்வில் நல்ல பலன்களை பெற உதவுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் அறிவோம்.

இல்லற வாழ்வும்... பழங்களும்..!
பழங்கள் என்றாலே அவற்றில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். அவற்றை நாம் உண்ணும் போது அவை நம் உடலுக்கு நன்மைகளை தரும். இல்லற வாழ்வில் ஆணும் பெண்ணும் இன்பமாய் இருக்க வேண்டும் என்றால் அதற்கு பழங்களின் பங்கு இன்றியமையாததாகும். பழங்கள் தாம்பத்திய வாழ்வை ஆரோக்கியமாக மேற்கொள்ள பெரிதும் உதவும்.

நலம் தரும் தர்பூசணி..!
பொதுவாக வெயில் காலங்களில் தெரு ஓரத்தில், நிச்சயமாக வீதிக்கு ஒரு தர்பூசணி கடை இருக்கத்தான் செய்யும். வெயிலின் கொடுமையை சமாளிக்க பெரிதும் இந்த பழம் உதவும். இவற்றின் கோடை கால பலன்கள் ஒரு புறம் இருக்க, மறு புறம் பிள்ளை பேறுக்கு இவை உதவ கூடிய ஒரு அற்புத பழமாக இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இல்லற வாழ்வை மேம்படுத்த...
தர்பூசணியை ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட பழம் என்றே மருத்துவர்கள் கருதுகின்றனர். இவற்றில் citrulline என்ற அமினோ அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவை ரத்த நாளங்களின் செயல்பாட்டை அதிகரிக்க செய்து ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு தன்மையை குணப்படுத்தும். மேலும் ஆண்களின் பிறப்புறுப்பை சீராக்கி, அவர்களில் இல்லற வாழ்வில் நலமாக இருக்க வழி வகுக்கும்.

தர்பூசணியின் ஊட்டசத்துக்கள்...
தர்பூசணியில் பல வகையான ஊட்டசத்துக்கள் உள்ளன. 100 g தர்பூசணியில் எவ்வளவு சத்துக்கள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கலோரிகள் 30
பொட்டாசியம் 112 mg
வைட்டமின் எ 569 IU
வைட்டமின் சி 8.1 mg
காரோடின் 303 µg
லைகாபேன் 4532 µg
வைட்டமின் ஈ 0.05 mg
காப்பர் 42 µg
மக்னேசியம் 10 mg

ஆராய்ச்சியின் முடிவுகள்...
டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் அருமையான முடிவுகள் கிடைத்ததாம். தங்களின் உணவில் தர்பூசணியை சேர்த்து கொண்டோரின் இல்லற வாழ்வு சிறப்பாக இருப்பதாவாகவும், விறைப்பு தன்மை, பிறப்புறுப்பு பாதிப்புகள் குணமடைவதாகவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆண்களின் பெரும்பாடு..!
இன்று பல ஆண்கள் அவதிப்படும் ஒரு மிக பெரிய பிரச்சினை இந்த விறைப்பு தன்மை தான். தர்பூசணியில் உள்ள citrulline என்ற வேதி பொருள், ஆண்களின் உடலில் பல நன்மைகளை தருகின்றது. மேலும் இல்லற வாழ்வில் திருப்தி அடையாமல் இருக்கும் ஆண்களுக்கு தர்பூசணி ஒரு வர பிரசாதமே...!

வயகரவா தர்பூசணி..?
இந்த பழம் கிட்டத்தட்ட ஒரு வயகரா போன்றே செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதாவது, இவற்றில் உள்ள citrulline என்ற அமினோ அமிலங்கள் உடலில் சென்றடைந்த உடன் arginine என மாறி விடுமாம். இவை ரத்த நாளங்களை இலகுவாக்கி இல்லற வாழ்வில் இனிமையை தருமாம். சீரான அளவில் இதனை எடுத்து கொண்டால் நன்மையே.

இதய ஆரோக்கியத்துக்கு...
மற்ற பழங்களை போன்றே இவை உடலுக்கு நன்மை தருகின்றது. அதாவது, இவற்றில் lycopene என்ற ஊட்டசத்து அதிகம் உள்ளதால் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். அத்துடன் ரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்தின் செய்யப்ட்டை செம்மைப் படுத்துமாம். மேலும் மன அழுத்தம், ரத்த அழுத்தம் போன்றவற்றையும் குறைக்கும்.

புற்றுநோயை கூட தடுக்குமா..!
ஒரு சில பழ வகைகள் மட்டுமே புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெற்றவையாக இருக்கும். இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் புற்றுநோய் செல்கள் உடலில் உருவாகாமல் பாதுகாக்குமாம். அத்துடன் ஆண்களுக்கென்றே பிரத்தியேகமாக வர கூடிய ப்ரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் வல்லமை உடையதாம்.

இளமையை நீடிக்க செய்ய...!
இவற்றில் உள்ள வைட்டமின் எ, முக அழகை பராமரிக்க பெரிதும் பயன்படுகிறது. சருமத்தின் பொலிவை கூட்டவும், ஈரப்பதத்தை அதிகரிக்கவும் தர்பூசணி உதவுகிறது. மேலும் மேனியில் உள்ள காலஜென் செல்களை உற்பத்தி செய்யவும் அவற்றின் வளர்ச்சிக்கு உதவவும் செய்கிறதாம். இதனால் நீங்கள் நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம்.

சுறுசுறுப்பான உடல் அமைப்பிற்கு...
தசை பிடிப்பு மற்றும் தசை வலிகளை தர்பூசணி எளிதில் குணப்படுத்தி விடும். குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு இவை அதிக அளவில் பயன் தர கூடியது. மேலும், உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்ள, விளையாட்டு வீரர்கள் இதன் ஜுஸை குடித்தாலே போதும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications











