மூக்கு ஒழுகல் பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண்பது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

காலநிலை மாறும் போது நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளுள் ஒன்று தான் மூக்கு ஒழுகல். குறிப்பாக குளிர்காலம், பனி காலங்களில் இப்பிரச்சனையால் நிறைய பேர் அவஸ்தைப்படுவார்கள். சொல்லப்போனால், மூக்கு ஒழுகல் சளி பிடித்துக் கொண்டது என்பதற்கான ஆரம்ப அறிகுறியாகும்.

How To Stop Runny Nose At Home

பெரும்பாலும் இந்த மூக்கு ஒழுகல் பிரச்சனையானது சளி, அலர்ஜி, சைனஸ் தொற்றுகள், கால நிலை மாற்றம் போன்றவற்றால் வரும். இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால், இருமல், காது வலி, தலை வலி மற்றும் இதர பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இந்த மூக்கு ஒழுகல் பிரச்சனைக்கு கடைகளில் ஏராளமான மருந்துகள் விற்கப்படுகின்றன. ஆனால் இவை சில சமயங்களில் பக்க விளைவை ஏற்படுத்தும். உங்களுக்கு பக்க விளைவுகளின்றி, எளிதில் மூக்கு ஒழுகல் பிரச்னையில் இருந்து விடுபட நினைத்தால், இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் இங்கு மூக்கு ஒழுகல் பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண்பது எப்படி என கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உப்பு நீர்

உப்பு நீர்

* 2 கப் வெதுவெதுப்பான நீரை கொதிக்க வைத்து இறக்கி, அதில் 1/2 டீஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.,

* பின் நாஸ்ட்ரில் பயன்படுத்தி, இரண்டு மூக்கின் துவாரங்களிலும் சில துளிகளை விட வேண்டும்.இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், மூக்கு ஒழுகல் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக இச்செயலை தினமும் 2 முறை பின்பற்றுவது நல்ல பலனைத் தரும்.

ஆவி பிடிப்பது

ஆவி பிடிப்பது

தினமும் சுடுநீரில் 10 நிமிடம் ஆவி பிடித்து வந்தால், சுவாச பாதையில் சளியால் ஏற்பட்ட அடைப்பு நீங்கி, மூக்கு ஒழுகும் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இப்படி தினமும் 2-3 முறை செய்யுங்கள். அதிலும் அந்நீரில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயிலை சேர்த்துக் கொண்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயில் ஆன்டிபயாடிக், ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-ஹிஸ்டமைன் போன்ற பண்புகள் உள்ளது. இவை மூக்கு ஒழுகலில் இருந்து உடனடி நிவாரணம் வழங்கும். அதற்கு சிறிது கடுகு எண்ணெயை சூடேற்றி, வெதுவெதுப்பான நிலையில், ட்ராப்பர் பயன்படுத்தி மூக்கு துவாரங்களில் விடுங்கள். அப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்ய வேண்டும்.

மஞ்சள்

மஞ்சள்

மூக்கு ஒழுகல் அதிகம் இருந்தால், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடியுங்கள். இது உடலில் உள்ள சளியைத் தளர உதவும். இல்லாவிட்டால், 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடித்தால், மூக்கு ஒழுகல், சளி, இருமல், தொண்டை புண் போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளுடன், ஆன்டி-வைரல், ஆன்டி-டாக்ஸிக், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை மூக்கு ஒழுகலில் இருந்து நிவாரணம் அளிக்கும். ஒரு துண்டு இஞ்சியை உப்பு தொட்டு வாயில் போட்டு சாற்றினை மென்று விழுங்குங்கள். இல்லாவிட்டால் இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேன் கலந்து குடியுங்கள்.

பூண்டு

பூண்டு

பூண்டில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளது. இத்தகைய பூண்டை அன்றாட உணவில் சேர்த்து வருவதோடு, மூக்கு ஒழுகல் பிரச்சனை இருக்கும் போது, 1 சிறிய துண்டு பூண்டு பல்லை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் உடல் வெப்பமாகி, மூக்கு ஒழுகலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

யூகலிப்டஸ் ஆயில்

யூகலிப்டஸ் ஆயில்

* ஒரு அகலமான பாத்திரத்தில் சுடுநீரை நிரப்பி, அதில் 7 துளிகள் யூகலிப்டஸ் ஆயில், 4 துளிகள் லாவெண்டர் ஆயில் மற்றும் புதினா ஆயில் சேர்த்து கலந்து, அந்நீரால் ஆவி பிடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்தால், முக்கு ஒழுகல், மூக்கடைப்பு, சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

* இல்லாவிட்டால் ஒரு துணியில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயிலை ஊற்றி, நாள் முழுவதும் அந்த துணியை நுகர்ந்து வாருங்கள். இதனால் மூக்கு ஒழுகலைத் தடுக்கலாம்.

தேன்

தேன்

* ஒரு சிறிய கப்பில் 2 டேபிள் ஸ்பூன் தேன், 1 சிட்டிகை பட்டைத் தூள் மற்றும் 1 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தினமும் 2 முறை உட்கொள்ள வேண்டும்.

* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் 2 வேளை குடித்து வருவதன் மூலம் மூக்கு ஒழுகல் பிரச்சனை அகலும்.

துளசி

துளசி

துளசியில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை மூக்கு ஒழுகலை சரிசெய்யும். அதற்கு தினமும் சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். இல்லாவிட்டால் சிறிது துளசி இலைகளை வெல்லத்துடன் சேர்த்து திகமும் 2 வேளை சாப்பிடுங்கள். இதனால் மூக்கு ஒழுகலுடன் சளியும் சரியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Stop Runny Nose At Home

Getting a runny nose happens to all of us, a condition that we can easily deal with at home. Read on to know more about it...
Story first published: Saturday, January 6, 2018, 17:20 [IST]