For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வறட்டு இருமல், சளித்தொல்லைக்கு வீட்டு அஞ்சறைப்பெட்டியில் மருந்து இருக்கு

By Jaya Lakshmi
|

தோஷம் பிடித்ததை விட ஜலதோஷம் பிடித்தவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். மழை காலமும் குளிர்காலமும் இணைந்த இந்த நேரத்தில் அவ்வப்போது அடிக்கும் வெயிலும் ஆளை அசத்தும். இந்த பருவநிலை மாற்றம் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு பக்கம் மூக்கு ஒழுகும், தலையும் பாரமாக இருக்கும். சளித்தொந்தரவு, குரலில் மாற்றம் என பிரச்சினையை சமாளிக்க வீட்டு சமயலறை அஞ்சறைப்பெட்டியில் பலவித மருந்துகள் இருக்கின்றன.

சளி தொந்தரவுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை வீட்டிலேயே மருத்துவம் பார்க்கலாம். இதமான சுடுநீர் தொண்டைக்கு இதத்தை தரும். சளி மற்றும் இருமல் உள்ளவர்கள் சுடுநீரை குடிப்பதற்கு வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இஞ்சி, சுக்கு குளிர்கால நோய்களுக்கு அருமையான மருந்து வீட்டு அஞ்சறைப்பெட்டியில் அவற்றை வைத்திருப்பது கூடவே டாக்டரை வைத்திருப்பதற்கு சமமானது. கடுகை அரைத்துப் பாதங்களில் பூச, ஜலதோஷம் குணமாகும். மூக்கில் இடைவிடாது சளி ஒழுகிக் கொண்டே இருக்கும் நபர்கள் வெற்றிலைச் சாறு இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் சளி நிற்கும்.

 home remedies for cold

பெரியவர்களுக்கு சளி பிடித்தாலே தலை பாரமாக இருக்கும். சிறு குழந்தைகளுக்கு சளி பிடித்து மூக்கடைத்துக் கொள்ளும்போது சுத்தமான துணி அல்லது பஞ்சு கொண்டு சுடுநீரில் உப்புக் கலந்து தொட்டுத் துடைக்க மூக்கடைப்பு நீங்கும். குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டால், முருங்கைக் கீரையும், உப்பையும் கசக்கி 3 ஸ்பூன் அளவு கொடுக்க வாந்தியாக வெளியே வந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.தேனும் லவங்கப்பட்டையும்

1.தேனும் லவங்கப்பட்டையும்

காலை வேளையில் எழுந்த உடன் பால் கலந்த டீ, காபி சாப்பிடுவதற்கு பதிலாக சூடான நீரில் லவங்கபட்டையை தூளாக்கி அதனுடன் தேன் கலந்து பருகி வர தொண்டைக்கு இதமாக இருக்கும். குளிர்காலத்தில் லவங்கபட்டையை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் இஞ்சியையும் சேர்த்து கொள்வதன்மூலம் சளி தொந்தரவில் இருந்து விடுபடலாம். இலவங்கப்பட்டை இலவங்கம், மிளகு மற்றும் தேன் ஆகியவற்றை நீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி அருந்தினால் தொண்டை வலி குறையும். சளித்தொல்லை அதிகமாகாமல் தடுக்கலாம்.

2.ஏலக்காய் சீரகம் பொடி

2.ஏலக்காய் சீரகம் பொடி

ஏலக்காய், சீரகத்தை தூளாக்கி அதனுடன் நெய் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வர சளி தொந்தரவுகள் கட்டுப்படும்.

ஏலக்காயை பொடி செய்து சுடுநீரில் கலந்து டீயாக தயாரித்து குடிக்கலாம். இது குளிர்கால நோய் தொற்றுகளில் இருந்து காக்கும்.

இஞ்சியை இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து குடிக்க மார்பு சளி தீரும்.

3.ஜாதிக்காய், சுக்கு

3.ஜாதிக்காய், சுக்கு

ஜாதிக்காய்க்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆற்றல் உண்டு. சூடான பாலில் சிறிதளவு தேன் சேர்த்து அதனுடன் ஜாதிக்காயையும், ஏலக்காயையும் பொடித்து போட்டு பருகலாம். இது குளிர்கால நோய்களை தடுக்கும். கொதிக்கும் நீரில் சிறிதளவு சுக்கு தூள், எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை சேர்த்து பருகலாம்.

MOST READ: கௌசல்யாவை கொச்சைப்படுத்தும் மிருகங்களுக்கு இந்த பதிவு!

4.பால் மஞ்சள்தூள் பனங்கல்கண்டு

4.பால் மஞ்சள்தூள் பனங்கல்கண்டு

பாட்டி அடிக்கடி சொல்லும் வைத்தியமே பாலுடன் மஞ்சள்தூள் கலந்து சாப்பிடுவதுதான். பொதுவாகவே, குளிர்காலத்தில் மஞ்சள் தூளை பாலில் கலந்து கூடவே பனங்கல்கண்டு கலந்து சாப்பிட்டு வர பல நோய் தொற்றுகள் வராமல் காக்கலாம். மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி அதனை தேனில் கலந்து மூன்று முறை சாப்பிட்டு வர இரண்டு நாளில் சளி மாயமாகும்.

5.தூதுவளை ரசம், சின்ன வெங்காயம்

5.தூதுவளை ரசம், சின்ன வெங்காயம்

மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.

சின்ன வெங்காயம் சளியை முறிக்கும். சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கி மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.

6.புகை மருந்து

6.புகை மருந்து

புகை இதயத்திற்கு பகை, ஆனால் இந்த புகை சளிக்கு பகை. அதிகமாக சளி பிடித்து, தலை கனத்துக் கொண்டிருந்தால் ஆவாரை வேரை நெருப்பில் சுட்டு, வெளிப்படும் புகையை சுவாசிக்க வேண்டும். இதன் மூலம் அதிகமாக சளி வெளியேறுவதோடு பூரண குணம் கிடைக்கும். இதே போல மஞ்சளையும் சுட்டு அதன் புகையை சுவாசிக்கலாம்.

7.மூக்கடைப்பு சரியாக ஓமம்

7.மூக்கடைப்பு சரியாக ஓமம்

மூக்கடைப்பு தொல்லை இருந்தால் ஓம விதைகளை துணி ஒன்றில் முடிச்சு போன்று கட்டி, நேரடியாக மூக்கில் வைத்து அதன் மணத்தை இழுத்து சுவாசிக்க வேண்டும். மூக்கில் ஏற்படும் அடைப்பினை இது சரி செய்யும். சளி, தொண்டை வலி, காய்ச்சல் இவற்றிற்கு சீரகம் நல்ல மருந்தாகும். இதிலுள்ள நோய் எதிர்ப்புத் தன்மை உடல்நலக் குறைபாடுகளை நீக்கும்.

8.உடல் நலத்தை காக்கும் விரதம்

8.உடல் நலத்தை காக்கும் விரதம்

நம்முடைய முன்னோர்கள் குளிர்காலமான கார்த்திகை, மார்கழி மாதங்களில் அதிக அளவில் விரதம் கடைபிடித்தனர். வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை விழா நாட்களில் பட்டினி இருந்து மறுநாள் சாப்பிடுவார்கள். இதனால் நோய் பாதிப்பு அதிகமாகும்.

குளிர்காலத்தில் சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தால் ஒருநாள் முழுவதும் எதுவும் உண்ணாமல் பட்டினி இருக்கலாம். அப்போது உடலிலுள்ள அனைத்து நச்சுத்தன்மை கொண்ட பொருள்களும் வெளியேறும். சளி தொந்தரவு இருக்கும் நாட்களில் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடாமல் வேக வைத்த காய்கறி உணவுகளை மட்டுமே சாப்பிடலாம். மூலிகை சூப் அருந்தலாம்.

MOST READ: விமானத்தில் ஏர் ஹோஸ்டஸ் கடந்து வரும் வெறுக்கத்தக்க அனுபவங்கள்!

9.சூடான உணவுகள்

9.சூடான உணவுகள்

எந்த உணவையும் சூடாக சாப்பிடுவது தொண்டைக்கும் இதமாக இருக்கும். ஜலதோஷம் பிடித்த நேரங்களில் செரிக்க சிரமமான உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெய் மற்றும் வாசனை பொருள்கள் கலந்த உணவு, பால் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நலம்.

வீட்டு மருத்துவத்திற்கு சளி தொந்தரவு கட்டுப்படும். அதற்கும் கட்டுப்படாவிட்டால் மருத்துவரிடம் செல்வதைத்தவிர வேறு வழியில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: cold home remedies
English summary

Home Remedies To Cure Winter Cold And Cough

Here we have mentioned some of these home remedies that will help you treat common cold and cough. Ginger tea. Mixture of lemon, cinnamon and honey. This is one of the oldest and easiest home remedies for sore throat that even your grandmother would recommend. Turmeric milk and  Herbal tea.
Story first published: Monday, December 10, 2018, 18:13 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more