Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
வாழ்நாளை அதிகரிக்க கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்
இயற்கை நமக்கு அளித்துள்ள மூலிகைகளை சரியாக சாப்பிட்டு வந்தாலே நமக்கு ஆரோக்கியம் தொடர்பான எந்த பிரச்சினைகளும் வராது. நாம் சாப்பிடும் உணவுகள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவு சாப்பிடும் முறையும் முக்கியம
ஆரோக்கியமான உணவுப்பழக்கம் என்பது நம்மை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாக மட்டும் வைக்காமல் நம்முடைய வாழ்நாளையும் அதிகரிக்கிறது. இயற்கை நமக்கு அளித்துள்ள மூலிகைகளை சரியாக சாப்பிட்டு வந்தாலே நமக்கு ஆரோக்கியம் தொடர்பான எந்த பிரச்சினைகளும் வராது. நாம் சாப்பிடும் உணவுகள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவு சாப்பிடும் முறையும் முக்கியம்.

இந்தியாவின் மிகவும் தொன்மையான மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் நம் ஆரோக்கியத்தை அதிகரிக்க மேலும் வாழ்நாளை அதிகரிக்க சில உணவமுறைகள் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவில் ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியமான உணவுமுறைய பற்றி விரிவாக பார்க்கலாம்.

சூடான நீருடன் நாளை தொடங்குங்கள்
காலை நேரத்தை சூடான நீர் அருந்தி தொடங்குவது நமக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன் , வளர்ச்சிதை மாற்றத்தையும் சீராக்குகிறது. ஒருவேளை நீங்கள் எடையை குறைக்க எளிய வழியை தேடுபவராக இருந்தால் அந்த சூடான நீருடன் சிறிது எலுமிச்சை சாறை கலந்து குடியுங்கள். பிறகு பாருங்கள் அதிசயத்தை.

நின்றுகொண்டு தண்ணீர் குடிக்காதீர்கள்
நின்றுகொண்டு தண்ணீர் குடிக்கும்போது நம் உடலுக்கு தண்ணீரால் எந்தவித பலனும் கிடைப்பதில்லை. இது உணவுக்குழாய் வழியாக வேகமாக கீழ்நோக்கி செல்லும்போது பல பாதிப்புகளை ஏற்படுத்தும், முக்கியமாக முட்டியில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வேகமான ஓட்டத்தில் தண்ணீர் செரிமான மண்டலம் மற்றும் அதன் அருகில் உள்ள உறுப்புகளில் பல பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மசாலா பொருட்களை குறையுங்கள்
இது சற்று கடினமானதாக இருக்கலாம். ஏனெனில் நாம் ஆரம்பம் முதலே காரமான உணவுகளை சாப்பிட்டே வளர்ந்தவர்கள். ஆனால் இதனை தவிர்த்து சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும், குறிப்பாக வெங்காயம் மற்றும் பூண்டை தவிர்க்க வேண்டும். இது உணவுகுழாயை பாதுகாப்பதுடன் வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.

பருவகால பொருட்களை சாப்பிடுங்கள்
காய்கறிகளோ அல்லது பழங்களோ எதுவாக இருப்பினும் குறிப்பிட்ட காலத்தில் கிடைப்பனவற்றில் பல சத்துக்கள் அடங்கியிருக்கும். இதனை ஒருபோதும் தவிர்த்துவிடாதீர்கள். ஆயுர்வேதத்தின் படி பருவகாலத்தில் கிடைக்கும் பொருட்கள் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக இருக்கும். உதாரணத்திற்கு குளிர் காலத்தில் வெல்லம் சாப்பிடுவதும், கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. சித்திரை மாதத்தில் வேப்பிலை சாப்பிடுவது உங்கள் இரத்தத்தை தூய்மையாக்கும்.

அதிகமாக சாப்பிடக்கூடாது
உணவு என்று வரும்போது அதனை சாப்பிடுவதை எங்கே நிறுத்தவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சாப்பிட்ட பிறகு மீண்டும் எப்பொழுது பசிக்கிறதோ அப்பொழுது மட்டும் சாப்பிடுங்கள். இது மிகவும் ஆரோக்கியமான ஒரு பழக்கமாகும். ஒவ்வொரு வேளை உணவிற்கும் இடையில் சீரான இடைவெளி இருக்க வேண்டியது அவசியம்.

உணவை மெதுவாகவும், ஒழுங்காகவும் சாப்பிடுங்கள்
நமது முன்னோர்கள் எப்பொழுதும் உணவை நன்கு மென்று சாப்பிடும்படி கூறுவார்கள். ஏனெனில் இது உணவை சிறியதாக உடைப்பதோடு மட்டுமின்றி உணவை எளிதில் செரிமானம் அடையவும் உதவுகிறது. உணவை நன்கு மென்று சாப்பிடும் போது மட்டும்தான் உணவின் முழுமையான சுவையை உங்களால் உணர முடியும்.

எப்பொழுதும் அமர்ந்து சாப்பிடுங்கள்
கவனமின்றி சாப்பிடும்போது அது உங்களுக்கு எந்தவித நன்மையும் அதிலிருந்து கிடைப்பதில்லை. அதேபோல நின்றுகொண்டு சாப்பிடுவதும் ஆரோக்கியமான பழக்கம் இல்லை. அமர்ந்து கொண்டு தெளிவான மனநிலையுடன் சாப்பிடுவது உங்கள் செரிமானத்தை சீராக்குவதுடன் வாயுக்கோளாறுக்ள ஏற்படுவதையும் தடுக்கும்.

செரிமானத்தில் கவனம் செலுத்துங்கள்
உங்களுக்கு பசியுணர்வு எழவில்லை என்றால் சிறிது எலுமிச்சை சாறுடன் இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து குடிக்கவும். ஆயுர்வேதத்தின் படி இவை செரிமானத்திற்கு தேவையான அனைத்து என்சைம்களையும் உற்பத்தி செய்வதுடன் பசியையும் நன்கு தூண்டும்.

குளிர்ந்த நீரை தவிர்க்கவும்
ஆயுர்வேதத்தின் படி குளிர்ந்த நீர் அதாவது உடல் வெப்பநிலையை விட குறைந்த வெப்பநிலையில் உள்ள நீரை குடிப்பது இரைப்பை தொடர்பான பல பிரச்சினைகளை உருவாக்கும். அதுமட்டுமின்றி வாயுக்கோளாறுகளையும் உண்டாக்கும். அதிக குளிர்ச்சியுடன் பழச்சாறு குடிப்பது கூட ஆரோக்கியமற்றதுதான்.

தவறான உணவு ஜோடிகள்
ஆரோக்கியமான இரண்டு உணவுகளை ஒன்று சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியம் என நீங்கள் நினைத்தால் அது தவறு. ஏனெனில் சில உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும்போது அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இவை வழக்கமான செரிமானத்தை பாதித்து இரைப்பையில் பல கோளாறுகளை உருவாக்கும். தவறான உணவு ஜோடிகள் என்று வரும்போது அதில் நெய் - தேன், பால் - முட்டை, மீன் - தயிர் போன்றவை முக்கியமானவை.



Click it and Unblock the Notifications