உங்களுக்கு மாரடைப்பு மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கு இந்த ஒரு பழமே போதும்

மங்குஸ்தான் பழம் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. வாசனைமிகுந்த, சுவையான இந்த பழம் வருடம் முழுவதும் கிடைக்காது ஆனால் கிடைக்கும்போதெல்லாம் இதனை தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

உடலின் ஆரோக்கியத்திற்கும், தேவையான ஊட்டச்சத்திற்கும் மிகவும் முக்கியமானவை பழங்களாகும். பொதுவாகவே பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை. ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு தனித்துவமும், சிறப்பும் இருக்கிறது. நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கும் ஒரு பழத்தை பற்றி நமக்கு தெரியவில்லை. அதுதான் மங்குஸ்தான் பழம்.

health benefits of mangosteen

மங்குஸ்தான் பழம் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. வாசனைமிகுந்த, சுவையான இந்த பழம் வருடம் முழுவதும் கிடைக்காது ஆனால் கிடைக்கும்போதெல்லாம் இதனை தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். இது உங்கள் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் மிகவும் அவசியம். இந்த பழம் பற்றி உங்களுக்கு தெரியாத பல ஆரோக்கிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆன்டிஆக்சிடண்ட்கள்

ஆன்டிஆக்சிடண்ட்கள்

ஆரய்ச்சியாளர்களின் கருத்துப்படி மங்குஸ்தான் பழத்தில் சத்தான பாலிபீனால்களான எக்ஸோந்தன் என்னும் பொருள் உள்ளது. இதில் இரண்டு வகையான எக்ஸோந்தன் உள்ளது, ஆல்பா மங்குஸ்தான் மற்றும் காமா மங்குஸ்தான். இந்த எக்ஸோந்தன் பல இதய கோளாறுகளை தடுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டிஆக்சிடண்ட்கள் சிதைந்த திசுக்களை குணப்படுத்துவதோடு, வயதாவதை தடுப்பது, உடலியல் மற்றும் மனக்கோளாறுகளை தடுக்கிறது.

குறைந்த கலோரிகள்

குறைந்த கலோரிகள்

இந்த பழத்தில் மிகக்குறைந்த அளவு கலோரிகளே உள்ளது. 100 கிராம் மங்குஸ்தான் பழத்தில் 63 கலோரிகளே உள்ளது மேலும் இதில் குறைந்தளவு நிறைவுற்ற கொழுப்புகளும், அதிகளவு நார்ச்சத்துக்களும் உள்ளது. உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் இந்த பழத்தை அதிகம் சாப்பிட வேண்டும்.

வைட்டமின் சி

வைட்டமின் சி

மங்குஸ்தானில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதிக நீர்சத்து நிறைந்த இந்த ஆன்டிஆக்சிடண்ட்கள் மற்றும் வைட்டமின் சி காய்ச்சலுக்கு எதிராக செயல்படுவதுடன் தொற்றுநோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. எனவே வைட்டமின் சி அதிகமுள்ள பழங்கள் சாப்பிடுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். கர்ப்ப காலத்தில் இந்த பழம் சாப்பிடுவது பெண்களின் கர்ப்பப்பையை வலுப்படுத்தும்.

இரத்த ஓட்டம்

இரத்த ஓட்டம்

மங்குஸ்தான் உடலில் இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது மேலும் அனிமியா ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது, இதனால் ஆர்த்ரோகிளோரோசிஸ், உயர் கொழுப்பு, இதய நெரிசல், மார்பு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கிறது. கண்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரிப்பதன் மூலம் இது கதிர்வீச்சுக்கு எதிராக செயல்படுகிறது.

கொலஸ்ட்ராலை குறைக்கிறது

கொலஸ்ட்ராலை குறைக்கிறது

மங்குஸ்தானில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க பயன்படுகிறது. இது உடலில் உள்ள ட்ரைக்ளிசரைட்ஸின் அளவை சீராக்க உதவுவதுடன் இதயத்தின் சீரான இயக்கத்திற்கும் உதவுகிறது.

காசநோய்

காசநோய்

மங்குஸ்தானில் அதிகளவு ஆன்டிபாக்டீரியால் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படக்கூடிய பண்புகள் உள்ளது. மேலும் இது பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை தடுப்பதில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது.

புற்றுநோய்

புற்றுநோய்

இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் புற்றுநோய் மற்றும் இதய கோளாறுகளை குணப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது சக்திவாய்ந்த மற்றும் பயனுள்ள ஆன்டிஆக்சிடன்ட் ஆகும் இது செல்லுலர் ரெஸ்ட் எனப்படும் இதய அழுத்தத்தை ஏற்படுத்தும் மருத்துவக்கோளாறை சரிசெய்ய உதவுகிறது.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

மங்குஸ்தானில் அதிகளவு காப்பர், மக்னீசியம் மற்றும் மாங்கனீசு அதிகம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் மாரடைப்பு மற்றும் கரோனரி இதய நோய்கள் போன்றவற்றிக்கு எதிராக செய்லபட உதவுகிறது, இது செல் மற்றும் உடலுக்கு முக்கியமான திரவங்களை சமநிலைப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

எடை குறைப்பு

எடை குறைப்பு

மங்குஸ்தான் என்பது உலகம் முழுவதும் எடை குறைப்பிற்காக பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய பழமாகும். மங்குஸ்தான் அடிக்கடி சாப்பிடுவது உங்கள் எடை அதிகரிப்பதை தடுக்கும், மற்றும் கொழுப்பை குறைக்கும். இதில் உள்ள எக்ஸோந்தன் எடை குறைப்பிற்கு ,மிகவும் முக்கியமானது.

முகப்பருக்கள்

முகப்பருக்கள்

இதில் இயற்கையான ஆன்டி பாக்டீரியல் மற்றும் நுண்ணுயிர் பொருட்கள் உள்ளது. இது பலவிதமான சரும பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குகிறது. முகப்பருக்கள், தோல் கறைகள், எண்ணெய் சருமம் மற்றும் உலர் சருமம் போன்ற பிரச்சினைகள் மங்குஸ்தான் பழத்தை சாப்பிடுவதன் மூலம் சரிசெய்யப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, October 29, 2018, 18:27 [IST]
Desktop Bottom Promotion