விதைப்பை புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் இப்படியும் இருக்கலாம்!

Posted By: Staff
Subscribe to Boldsky

ஆண்களைப் பொறுத்தவரையில் மிகவும் பயமறுத்தக்கூடிய புற்றுநோய்களில் ஒன்று விதைப்பை புற்றுநோய். பொதுவாக விதைப்பை புற்றுநோய்க்கு என்று எந்த குறிப்பிட்ட அறிகுறிகளும் இல்லை. புற்றுநோயாக இருக்குமோ என்று பயந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளச் சென்றால், அது சிறுநீர் தொற்றாகவோ அல்லதுவ் வேறு ஏதேனும் பிரச்சனையாகவோ இருக்கும்.

அதனால் வெறும் அறிகுறிகளை மட்டும் வைத்துக் கொண்டு நீங்களே எந்த முடிவுக்கும் வந்து விடாதீர்கள். விதைப்பை அளவில் பெரிதாக இருப்பது, கடினமாக மாறுவது, வலி ஆகியவை முதற்கட்ட அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. இவற்றை மட்டுமே கொண்டு முடிவு செய்யாமல் உரிய மருத்துவ ஆலோசனை பெறுங்கள். புற்றுநோய் பரவும் அபாயம் கொண்டிருப்பதாலும், விதைப்பை புற்றுநோய் என்றால் அதற்கான அறிகுறிகள் விதைப்பையில் மட்டுமே தெரியாது என்பதாலும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இவற்றைத் தாண்டி விதைப்பை புற்றுநோய்க்கு என்னென்ன அறிகுறிகள் தெரியும் என்று தெரிந்து கொள்ளுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறி தெரியாது :

அறிகுறி தெரியாது :

புற்றுநோய் உடல் முழுவதும் எளிதாக பரவக்கூடியது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் விதைப்பை புற்றுநோய் தாக்கிய ஆண்களில் இருபது சதவீதம் பேர் வரையிலும் தங்களுக்கு ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் தெரியவில்லை என்றே சொல்லியிருக்கிறார்கள்.

கட்டி :

கட்டி :

பெரும்பாலும் சருமம் தடித்திருப்பது, கட்டி ஆகியவை தோன்றுகிறது. சிலருக்கு ரத்த நாளங்கள் வீங்கும் இவற்றை எல்லாம் சாதரணமாக கடந்து செல்லாமல் உரிய பரிசோதனை மேற்கொண்டிருந்தால் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்திருக்கலாம்.

வயிற்று வலி :

வயிற்று வலி :

விதைப்பை புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்களுக்கு வயிற்று வலி உண்டாகும். அதை நாம் கவனிக்காமல் விட்டாலோ அல்லது அஜீரணமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அதற்குரிய சிகிச்சைகளை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தால் விதைப்பை புற்றுநோய் மெல்ல உள்ளுறுப்புகளுக்கு பரவ ஆரம்பிக்கும். இதனால் தான் கடுமையான வயிற்று வலி உண்டாகிறது.

அன்றாட பரிசோதனை :

அன்றாட பரிசோதனை :

குறிப்பிட்ட நபர்களுக்குத் தான் வரும் என்றில்லை யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்பதால் மிகவும் ஜாக்கிரதையுடன் அணுக வேண்டியது அவசியம். தினமும் உங்களது உறுப்பில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா, கடினமாக மாறியிருக்கிறதா அல்லது ஏதேனும் கட்டி தோன்றியிருக்கிறதா என்பதனை பரிசோதித்துக் கொண்டேயிருங்கள். பெரும்பாலும் இவற்றை உங்களது தொடுதலாலேயே நீங்கள் கண்டுபிடித்து விடலாம். இதே போலத் தான் மார்பக புற்றுநோய்க்கும் சொல்லப்பட்டது.

கடினத்தன்மை :

கடினத்தன்மை :

சிலருக்கு எந்த அறிகுறிகளும் தெரிந்திருக்காது மெல்ல விதைப்பை மட்டும் கடினமாகிக் கொண்டேயிருக்கும். இதை பெரும்பாலும் யாரும் அவதானிப்பதில்லை என்பதால் நோய் முற்றிய பிறகே நாம் மருத்துவமனைக்குச் செல்கிறோம்.

சிறுவர்கள் :

சிறுவர்கள் :

விதைப்பையிலிருந்து தான் ஆண்ட்ரோஜன் உற்பத்தியாகிறது. இது தான் ஆண் பருவமடைவதை உறுதிப்படுத்துகிறது. உரிய வயது வரும் முன்னரே வெகு சீக்கிரமாக குரல் உடைவது, சிறுவர்களின் பிறப்புறுப்புகளில் முடி முளைப்பது ஆகியவற்றை கண்டால் சற்று கவனமாக இருக்கவும். இவர்களுக்கு பிறரை விட விதைப்பை புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.

திரவம் :

திரவம் :

விதைப்பையையில் தோன்றிய கட்டிகள் மூலமாக திரவம் வெளியேறினால் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும். இது உங்களுக்கு பெரும் இடைஞ்சலாகவும் அசௌகரியத்தையும் கொடுக்கும் என்பதால் உரிய நேரத்தில் கண்டுபிடிப்பதுடன் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

வடிவம் :

வடிவம் :

வழக்கமாக விதைப்பை இருக்கும் வடிவத்தை விட வேறு ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும். வழக்கத்திற்கு மாறாக அளவில் பெரிதானாலோ அல்லது சிறிதானாலோ தொடர்ந்து அதனை தீவிரமாக கண்காணித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

மூச்சு வாங்குதல் :

மூச்சு வாங்குதல் :

கால்களில் வீக்கம், மூச்சு வாங்குவது ஆகியவை உங்களுக்கு ரத்த உறைவு ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள். பிறப்புறுப்புகளில் ரத்தக்கட்டு ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆனால் கால்கள் வீங்கியதற்கும் பிறப்புறுப்பில் ரத்தக்கட்டு ஏற்பட்டிருக்கலாம் என்றும் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

நோய்த் தொற்று :

நோய்த் தொற்று :

உங்களது விதைப்பையில் ஏற்படுகிற நோய்த் தொற்றிற்கு ஆர்ச்சிட்ஸ் என்று பெயர். இதன் அறிகுறிகளும் சற்று விதைப்பை புற்றுநோய் அறிகுறிகளைப் போலவே இருக்கும் என்பதால் பதட்டமடையாமல் அது நோய்த்தொற்றா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

நோய்த்தொற்றாக இருந்தால் ஆண்ட்டிபயாட்டிக் மருந்துகள் எடுத்துக் கொண்டால் போதுமானது. அதற்கும் சரியாகவில்லை என்றால் புற்றுநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளலாம்.

பிற அறிகுறிகள் :

பிற அறிகுறிகள் :

மேற்சொன்ன அறிகுறிகளைத் தவிர பிற அறிகுறிகளையும் தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் இவற்றை எல்லாம் நாம் கவனம் செலுத்துவது கூட கிடையாது. தானாய் சரியாகும் என்று நினைத்தே காலம் தாழ்த்துவோம் அதனால் வந்த விணை தான் புற்றுநோயாய் விடியும்.

தொடர்ந்து அடிக்கடி இருமல்,உடல் வலி,மூச்சுவாங்குவது,தலைவலி, உணவு விழுங்குவதில் சிரமம், காரணமின்றி எடை குறைவது, எப்போதும் சோர்வுடனே காணப்படுவது,உறவில் நாட்டமின்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Get Aware Of Testicles Cancer

Get Aware Of Testicles Cancer
Story first published: Tuesday, March 20, 2018, 9:00 [IST]