உங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க தேவையான உணவுகள்

ஆரோக்கியமான உணவுகளோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பது உங்கள் மருத்துவ செலவுகளை குறைப்பதோடு தேவையற்ற அறுவை சிகிச்சைகளை குறைகிறது. இங்கு நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க உதவும் 10 உணவுகளை பார்க்கலாம

உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின் படி, சுவாச குறைபாடுகளால் வருடத்திற்கு சுமார் 3 மில்லியன் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? மாசுக்களால் நச்சடைந்த காற்றும் மோசமான வாழ்க்கை முறையும் உங்கள் நுரையீரலை பாதிக்கிறது. மேலும் இது சுவாசத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, பல்வேறு விதமான சுவாச கோளாறு நோய்களுக்கும் வித்திடும்.

foods to keep your lungs healthy

இதனால் முடிந்த வரை ஆரோக்கியமான உணவுகளோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பது உங்கள் மருத்துவ செலவுகளை குறைப்பதோடு தேவையற்ற அறுவை சிகிச்சைகளை குறைக்கிறது. இங்கு நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க உதவும் 10 உணவுகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு

பூண்டு

பூண்டில் இயற்கையாகவே இருக்கும் முக்கிய ஃபைட்டோநியூண்ட்ரியண்ட்டான அல்சின் பல தரப்பட்ட உடல் ஆரோக்கியத்தை தரவல்லது. இது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பியாகவும், புற்றுநோய் எதிர்ப்பியாகவும் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் பண்புகளையும் கொண்டிருக்கிறது. பூண்டு சாப்பிடுவது சுவாசக்கோளாறு மற்றும் நுரையீரல் புற்றுநோய் இருக்கும் நோயாளியின் உடலில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதாக சீனா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தினசரி உணவில் ஏதாவது ஒரு வடிவத்தில் இரண்டு முதல் மூன்று பல் பூண்டை உணவில் சேர்த்து கொள்வது நுரையீரல் தோற்று மற்றும் நுரையீரல் நோயிருந்து உங்களை பாதுகாக்கும்.

கீரைகள்

கீரைகள்

பச்சை கீரைகள் மற்றும் மற்ற அடர்நிறத்தில் இருக்கும் கீரைகளான காலே, சார்ட், ராக்கெட் கீரைகள் மற்றும் முள்ளங்கி கீரை போன்றவற்றில் அதிக அளவில் வைட்டமின்களும், தாதுப்புக்களும் நிறைந்திருக்கின்றன. மேலும் கீரைகளில் இருக்கும் ஃபைட்டோகெமிக்கல் ஆக்சிஜனேற்ற சேதம், நுரையீரல் வீக்கம் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு பாதுகாக்கும் ஆற்றலை கொண்டிருக்கிறது. தினமும் உணவில் ஒரு கப் கீரை சேர்த்து கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

கொழுப்பு மீன்

கொழுப்பு மீன்

சால்மன், மேக்ரல் போன்ற மீன்களில் ஒமேகா 3 அமிலம் அதிகம் உள்ளது. இதுபோன்ற மீன்களை சாப்பிடும்போது அல்லது மீன் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அது உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இதனை எந்த அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது என்பதில் மட்டும் கவனமாக இருக்கவும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சி மிகவும் நம்பத்தகுந்த ஒரு வீட்டு மருத்துவ பொருள் ஆகும். இதில் உள்ள ஜிஞ்சரால் என்னும் பொருள்தான் அதன் வித்தியாசமான சுவைக்கு காரணமென விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த ஜிஞ்சரால் ஆஸ்துமா, சளி, இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் குணமுடையது. உங்கள் நுரையீரலை சுத்தமாக வைத்துக்கொள்ள உங்கள் இஞ்சியை நசுக்கி அதனை சுடுநீரில் போட்டு குடிப்பது அதில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும்.

அப்ரிகாட்

அப்ரிகாட்

இனிப்பு அப்ரிகாட் சுவையான பொருள் மட்டுமல்ல அது உங்கள் நுரையீரலை பாதுகாக்கவும் உதவும் என்பது பலரும் அறியாத ஒன்று. இந்த பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை நுரையீரலை பாதுகாப்பதோடு புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்பட உதவுகிறது.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி

குணப்படுத்தும் உணவுகள் அனைத்திற்கும் அரசனாக விளங்குவது ப்ரோக்கோலி ஆகும். ப்ரோக்கோலியில் சல்போர்பின் என்னும் ஊட்டச்சத்து உள்ளது. இவை எதிர்ப்பு அழற்சி, ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடிய பண்பு உள்ளது. இந்த சல்போர்பின்மார்பகம், நுரையீரல் போன்ற இடங்களில் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் ப்ரோக்கோலி சாப்பிடுவது உங்கள் நுரையீரல் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் என்பது பல காலமாக மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருளாகும். இதன் அனைத்து மருத்துவ குணங்களுக்கும் காரணமாக இருப்பது அதில் இருக்கும் குர்குமின் ஆகும். இதன் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் எதிர் அழற்சி பண்புகள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதுடன், வீக்கத்தை கட்டுப்படுத்துவது, எடை குறைப்பு போன்ற பலவற்றிற்கு காரணமாக உள்ளது. தினமும் மஞ்சளை கொஞ்சம் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் நுரையீரலை பாதுகாக்கும்.

அவோகேடா

அவோகேடா

அவோகேடாவில் வைட்டமின் கே, ஈ, பி6, ரிபோவின், பேன்டோதெனிக் அமிலம் மற்றும் நியாசின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சமீபத்திய ஆய்வில் அடிக்கடி அவோகேடாவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது ஆர்திரிடிஸ், நுரையீரல் கோளாறுகள் போன்ற பிரச்சினைகளை குணமாக்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது மூட்டு வலிகளை குணப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, October 20, 2018, 17:30 [IST]
Desktop Bottom Promotion