Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்களே, உங்களின் தசைகளில் இந்த அறிகுறிகள் இருந்தால், நீங்கள் அபாயகரமான நிலையில் உள்ளீர்களாம்..!
இப்போதெல்லாம் சிறு வயது முதலே பல வகையான நோய்களுக்கு ஆளாகின்றோம். இந்த நிலை பல வகையான காரணிகளால் உருப்பெற்று வந்துள்ளது. நமக்கு தெரிந்த நோய்களின் எண்ணிக்கை மிக குறைவு. ஆனால், நாம் அறியாத நோய்களும் அவற்றின் தாக்கமும் எண்ணில் அடங்காதவை.

இது வரை நாம் தசைகளை பற்றிய நோய்களை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டோம். ஆனால், இது போன்ற தசை சார்ந்த நோய்களின் அறிகுறிகளை நாம் சாதாரணமாக விட்டு விட கூடாது. இந்த வகை தசை வறட்சி நோய்கள் உங்களை ஆபாயகரமான நிலைக்கு தள்ளி விடும். இனி தசை வறட்சி நோய்க்கான அறிகுறிகளை அறிந்து கொள்வோம்.

தசை வறட்சியா..?
இது வரை நாம் கேட்டிராத நோயாக உள்ளதே என்று பலருக்கு தோன்றும். ஆனால், நாம் அறிந்திராத நோய்களின் தாக்குதலில் இதுவும் மிக முக்கியமானது. தசை வறட்சி நோய் யாருக்கு எப்போ வருகின்றது என சொல்ல முடியாது. ஏனெனில், சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோய் வர கூடும். இது மரபணு கடத்தலின் காரணமாகவும் ஏற்பட கூடும்.

விரிவடைந்த தசை பகுதி
நம்மில் பலருக்கு இந்த அறிகுறி இருக்கத்தான் செய்யும். அதாவது, கால்களில் பின்பகுதியில் தசைகள் பெரிதாகவோ, விரிவடைந்தோ இருந்தால் உங்களுக்கு இந்த தசை வறட்சி நோய் வந்துள்ளது என்று அர்த்தம். இந்த நோய் வருவதற்கான முதல் அறிகுறி இது தானாம். ஆண்களுக்கு இது சிறுவயதிலே ஏற்பட கூடும் என ஆய்வுகள் சொல்கிறது.

முதுகு தண்டு
நமது உடலில் முக்கிய உறுப்பான தண்டு வடத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அவ்வளவுதான். நமது தண்டு வடம் நேராக இருந்தால் மட்டுமே ஆரோக்கியமாக நாம் இருக்கின்றோம் என அர்த்தம். கூன் வளைந்தது போன்று இருந்தால் தசை வறட்சி நோய்க்கான அறிகுறியாகும். இது போன்ற நிலையில் அடிக்கடி முதுகு வலி ஏற்பட கூடும்.

ஆண்களின் பிரச்சினை
ஹார்மோன் என்பது நமது உடலின் முழு செயல்பாட்டையும் கட்டுப்படுத்த கூடியவை. இதன் சமநிலை சீர்கேடு அடையும் போது பல வகையான ஆபத்துகள் நமக்கு வருகிறது. ஆண்களுக்கு விரைகளில் ஏதேனும் பிரச்சினை அல்லது ஆண்மை குறைபாடு இருந்தால், இவை தசை வறட்சி நோயை குறிக்கிறது. இந்த பிரச்சினை குறிப்பாக 20 முதல் 30 வயதுடைய ஆண்களுக்கு ஏற்படுமாம்.

இறுக்கமான நிலையா...?
தசைகள் தனது செயல்பட்டை இழக்கும் தன்மையை உணர்த்தும் ஒரு ஆபத்தான அறிகுறி இதுவே. உங்களின் கை அல்லது கால்களில் இறுக்கமாக அல்லது முள் குத்துவது போன்று அடிக்கடி ஏற்பட்டால் தசை வறட்சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும், இந்த இடங்களில் வலி ஏற்பட்டால் சற்றே மோசமான நிலையில் உள்ளீர்கள் என அர்த்தம்.

வழுக்கை பிரச்சினையா..?
கால நிலை மாற்றத்தால் ஆண்களில் பலருக்கு முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கையாக மாறி விடுகிறது. இந்த பிரச்சினைக்கும் ஹார்மோன்கள் தான் காரணம். எனவே, இவை தசை வறட்சி நோய்க்கான ஒரு அறிகுறியாகும். இது அதிக அளவில் ஆண்களுக்கு ஏற்படுமாம்.

கண் பாதிப்பா..?
இந்த அழகிய உலகத்தை நமக்கு காட்டும் அவசியமான உறுப்பு இந்த கண் தான். கண்ணில் புரையோ, எப்போதும் கண்ணீர் வடிந்து கொண்டோ, அதிக வலியோ ஏற்பட்டால் உங்களுக்கு தசை வறட்சி நோய் உள்ளது என அறிந்து கொள்ளலாம். மேலும், பார்வையில் குறைபாடு, மங்கலான அறிகுறி இருந்தாலும் இந்த நோய் தான் காரணம்.

அதிக கடினமா..?
பலருக்கு சாப்பிட கூடிய எந்த பொருளும் மிக கடினமாக உள்ளே செல்லும். குறிப்பாக விழுங்கும் போது, எதையாவது துப்பும் போதும், பேசும் போதும் தொண்டை பகுதியில் வலி இருந்தால் சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். இது தசை வறட்சி நோய்க்கான அறிகுறி என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதய வலி
அடிக்கடி இதய பகுதியில் கட்டி இழுப்பது போன்றோ அல்லது இறுக்கமாக இருந்து கொண்டு வலி ஏற்படுத்துகிறதென்றால், அதற்கு தசை வறட்சி தான் காரணம். இந்த நிலையில் திடீரென்று மயக்கமோ, அதிக அல்லது குறைந்த இதய துடிப்போ ஏற்பட கூடும்.

தீர்வு என்ன..?
இந்த தசை வறட்சி நோயில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்றால் தசைகளுக்கு வலிமை ஏற்படுத்தும் வகையில் சில உடற்பயிற்சி செய்தல் வேண்டும். மேலும், வைட்டமின் ஈ, டி நிறைந்த உணவுகளை சாப்பிடுதல் வேண்டும். அத்துடன் உணவில் மஞ்சளை அதிகம் சேர்த்து கொண்டாலே இந்த நோயிலிருந்து காத்து கொள்ளலாம்.

கிரீன் டீ
தினமும் காபி அல்லது வெறும் டீ குடிப்பதற்கு பதிலாக இந்த கிரீன் டீயை குடித்து வந்தால் தசை வறட்சி நோய்களை தடுக்க முடியும். ஏனெனில், இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தசைகளுக்கு அதிக வலிமையை தந்து வறட்சியை போக்குகிறது.
மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால் அஜாக்கிரதையாக இருக்காமல், மருத்துவரை அணுகுங்கள் நண்பர்களே.



Click it and Unblock the Notifications











