For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முத்தம் கொடுப்பதால் பரவும் நோய்கள் என்னென்ன தெரியுமா?

சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல் நோய் வரை முத்தத்தின் மூலம் பரவுகிறது. பொதுவாகவே பாலியல் நோய் என்றால் அவை உடலுறவு மூலம்தான் பரவும் என நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் முத்தத்தின் மூலமும் சில

|

முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. முத்தம் குடுக்காதவரோ, அதனை விரும்பாதவரோ எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. குழந்தைகள் முதல் முதல் பெரியவர் வரை அனைவரும் முத்தம் கொடுத்துக்கொண்டும், பெற்றுக்கொண்டும்தான் இருக்கிறார்கள். அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது.

List of diseases which can transmit through kissing

சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல் நோய் வரை முத்தத்தின் மூலம் பரவுகிறது. பொதுவாகவே பாலியல் நோய் என்றால் அவை உடலுறவு மூலம்தான் பரவும் என நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் முத்தத்தின் மூலமும் சில பாலியல் நோய்கள் பரவக்கூடும். இந்த பதிவில் முத்தங்கள் மூலம் பரவக்கூடிய நோய்கள் என்னவென்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹெர்பெஸ்

ஹெர்பெஸ்

ஹெர்பெஸ் என்பது மிகவும் மோசமான அதேசமயம் குணப்படுத்த இயலாத தொற்றுநோயாகும். இந்த நோய் பெரும்பாலும் முத்தத்தின் மூலம்தான் பரவும். , ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் வகை 1 என்னும் இந்த வைரஸ் உங்கள் வாய்ப்பகுதியில் குணப்படுத்த இயலாத புண்களை உண்டாக்கக்கூடும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நீங்கள் நேரடியாக வை வழி முத்தத்தில் ஈடுபடும்போது இந்த நோய் உங்களுக்கும் பரவக்கூடும்.

கேவிட்டிஸ் (அ) நுண்குழி

கேவிட்டிஸ் (அ) நுண்குழி

முத்தத்தின் மூலம் கேவிட்டிஸ் ஏற்படும் என்பது பலரும் அறியாத ஒன்று. ஆனால் உண்மையில் இதற்கு வாய்ப்புள்ளது. முத்தமிடும் போது அதன் மூலம் பரவும் பாக்டீரியாக்கள் நுண்குழியை ஏற்படுத்தும். குறிப்பாக இது பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு அதிகம் பரவுகிறது, இளைஞர்களுக்கும் தங்கள் காதலன்/காதலியை முத்தமிடும் போது இந்த பாக்டீரிய தொற்று ஏற்படலாம். டூத்பிரஷை பகிர்ந்துகொள்வது, ஒரே பாத்திரங்களை சமைக்க இருவர் உபயோகிப்பது போன்ற பல காரணங்கள் இந்நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

சுவாச நோய்கள்

சுவாச நோய்கள்

சளி, காய்ச்சல், குடல் தொடர்பான நோய்கள் போன்றவை முத்தங்கள் மூலம் பரவலாம் என பிரபல நாளிதழ் கூறியுள்ளது. இவை சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகளாலோ அல்லது சுற்றத்தார் இருமுவதாலோ, தும்முவதாலோ கூட பரவலாம். ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர் இன்னொருவரை முத்தமிடும்போது இந்த நோய்கள் அவர்களுக்கும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

மோனோநியூக்ளியோசிஸ்

மோனோநியூக்ளியோசிஸ்

இது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்காது. மோனோநியூக்ளியோசிஸ் அல்லது மோனோ என்னும் இந்த நோய் எப்ஸ்டீன்- பார் என்னும் வைரசால் ஏற்படுகிறது. முத்தத்தின் மூலம் பரவும் இந்த நோய் அளவுக்கதிகமான சோர்வை ஏற்படுத்தக்கூடும்.

எம்ஆர்எஸ்ஏ

எம்ஆர்எஸ்ஏ

எம்ஆர்எஸ்ஏ என்னும் இந்த நோய் நீங்கள் ஜிம்மில் இருக்கும்போதோ அல்லது மருத்துவமனையில் இருக்கும்போதோ அங்கிருக்கும் கிருமிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். ஆனால் இது முத்தங்கள் மூலம் பரவக்கூடும் என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். வட்ட நுண்ணுயிரிகளால் ஏற்படும் இந்த நோய்கள் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தொண்டை நோய்கள்

தொண்டை நோய்கள்

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஏற்பட முக்கிய காரணம் இந்த தொண்டை அழற்சிகள்தான். இந்த தொண்டை அழற்சிகள் பெரும்பாலும் முத்தங்கள் மூலம்தான் பரவும். ஏனெனில் இந்த பாக்டீரியாக்கள் உங்கள் வாயின் மேற்புறங்களில்தான் இருக்கும். இந்த சூழ்நிலையில் நீங்கள் மற்றவர்களை முத்தமிடும்போது இந்த நோய் அவர்களுக்கும் ஏற்படும் வாய்ப்புள்ளது.

சிபிலிஸ்

சிபிலிஸ்

சிபிலிஸ் என்பது வாயின் உட்புறத்தில் காயங்களை ஏற்படுத்தும் நோயாகும். இந்த நிலையில் மற்றவர்களை முத்தமிடுவது மிகவும் ஆபத்தானதாகும். மற்ற நோய்களை போலவே இதுவும் முத்தம் மூலம் பரவும், ஆனால் இதன் பாதிப்பு மற்ற நோய்களை விட அதிகமாக இருக்கும்.

சைட்டோமெகல்லோவைரஸ்

சைட்டோமெகல்லோவைரஸ்

ஹெர்பெஸ் வகையை சேர்ந்த இந்த சைட்டோமெகல்லோவைரஸ் நோயும் முத்தங்கள் மூலம் பரவக்கூடிய ஒன்று. அனைவரின் உடலிலும் உள்ள ஆன்டிபாடீஸ் இந்த னாய் தாக்கினாலும் நமக்கு அறிகுறியை காட்டாமல் பார்த்துக்கொள்ளும், அதனால் இந்த நோயால் பாதிக்கப்ட்டவர்களுக்கு உடனடியாக தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது தெரிய வாய்ப்பில்லை. இந்த நோய் தீவிரமடைந்த பின்தான் இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

ஜிங்விட்டிஸ்

ஜிங்விட்டிஸ்

இது உங்களுக்கு தெரிந்த ஒன்றாக இருக்கலாம், முத்தமிடுவதால் ஜிங்விட்டிஸ் வைரஸ் பரவும்எ அபாயம் அதிகரிக்கும். முத்தமிடும்போது எச்சில்கள் பரிமாறப்படுவது உங்களுக்கு ஈறுகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். பற்களை சுத்தமாக வைத்துக்கொள்வது உங்களை இந்த நோயிலிருந்து பாதுகாக்கலாம்.

ஹெபாடிட்டீஸ் பி

ஹெபாடிட்டீஸ் பி

இது அரிதானதாக இருந்தாலும் ஹெபாடிட்டீஸ் பி முத்தங்கள் மூலம் பரவக்கூடிய ஒன்று. பொதுவாக இந்த நோய் உடலுறவு மூலம் மட்டுமே பரவுவதாக அறியப்பட்டாலும் இது முத்தத்தின் போது ஏற்படும் எச்சிலாலும் பரவிய சில நோயாளிகள் உள்ளனர். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது நம் கடமை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

List of diseases which can transmit through kissing

Kissing is a part of most romantic relationships, no matter how serious they might be. But some deadly diseases can spread through kissing.Focus keyword: Health, Health care, Health tips, Sexually transmitted diseases, kissing diseases list
Desktop Bottom Promotion