டூத் பேஸ்ட் வாங்க போறதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க...

Written By: manimegalai
Subscribe to Boldsky

தினமும் நாம் மறக்காமல் செய்யும் ஒரு விஷயம் பல் துலக்குவது. அதிலும் நம்மில் கிட்டதட்ட 69சதவீதம் பேர் காலை, இரவு என ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குகிறோம். நல்ல விலையுயர்ந்த பேஸ்ட் கொண்டு பல் துலக்குவதை கௌரவம் என்று நினைப்பவர்களும் அதற்குள் அடங்கியிருக்கிறார்கள் என்பதை நம்மால் மறுக்கவே முடியாது.

toothpaste

ஆனால் நாம் அப்படி டூத் பேஸ்ட் கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது என்பது நம்முடைய ஆரோக்கியத்துக்கு நல்லது தானா என்று பார்த்தால் அது முற்றிலும் கேடு விளைவிப்பதாகவே இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 இரண்டு முறை

இரண்டு முறை

ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால் நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் ஆரோக்கியமானதா என்பது தான் கேள்வி. அதனால் எத்தனை முறை பல் துலக்குகிறோம் என்பது முக்கியமே இல்லை. எப்படிப்பட்ட பேஸ்ட் கொண்டு துலக்குகிறோம் என்பது தான் முக்கியம்.

உயிர்க்கொல்லிகள்

உயிர்க்கொல்லிகள்

நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டுகள் தற்போது பல்வேறு பிளேவர்களில் வருகின்றன. அதையும் நமக்குப் பிடித்த பிளேவர்களில் வாங்கிக் கொள்கிறோம். அவை நம்முடைய பற்களைப் பாதுகாக்கும் என்று நம்புகிறோம். ஆனால் அவை நம்முடைய உயிருக்கே கேடு விளைவிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?... ஆம். நாம் வாங்கும் பெரும்பாலான டூத் பேஸ்ட்டுகளில் உயிர்க்கொல்லிகள் அதிகமாகக் கலக்கப்படுகின்றன.

எந்த டூத் பேஸ்ட் வாங்கக்கூடாது?

எந்த டூத் பேஸ்ட் வாங்கக்கூடாது?

என்ன டூத் பேஸ்ட் வாங்க வேண்டும் என்பதைவிட எதையெல்லாம் வாங்கக் கூடாது என்பதைத் தெரிந்து கொண்டாலே போதும். பாதி பிரச்னை தீர்ந்துவிடும். டூத் பேஸ்ட்டில் நிறம், மணம், சுவை ஆகியவற்றுக்காக பல்வேறு வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. அதனால் என்னென்ன பொருள்கள் கலந்திருந்தால் வாங்கக் கூடாது என்பதைத் தெரிந்துகொண்டு அந்த மாதிரியான டூத் பேஸ்ட்டை வாங்காமல் தவிர்த்திடுங்கள்.

புளோரைடு

புளோரைடு

பொதுவாக நாம் பயன்படுத்தும் பெரும்பாலான டூத் பேஸ்ட்களில் புளோரைடு கலந்துதான் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் விற்கப்படும் 95 சதவீத டூத் பேஸ்ட்டுகளில் புளோரைடு மிக அதிக அளவில் கலந்திருக்கிறது. அது பற்களின் எனாமலை போக்குவதோடு பற்களின் நிறமும் நாளடைவில் மங்கச் செய்துவிடும். 41 சதவீதம் பேர் அமெரிக்காவில் இந்த எனாமல் தேய்மானப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்கிறது ஓர் ஆயு்வு.

செயற்கை இனிப்புகள்

செயற்கை இனிப்புகள்

டூத் பேஸ்ட் எப்போதும் வறட்சியடையாமல் இருக்கக் காரணம்அதில் சேர்க்கப்படும் சோர்பிடோல் என்னும் திரவம் தான். இது குழந்தைகளுக்கு டயேரியாவை உண்டாக்கிவிடும். டூத் பேஸ்ட்டில் சுவைக்காக பயன்படுத்தப்படுகிற சாச்சரின் என்னும் மற்றொரு செயற்கை இனிப்பு வகை சிறுநீர்ப்பையில் புற்றுநோயை உண்டாக்குகிறது. அதற்கு பதிலாக ஸ்டீவியா அல்லது எக்ஸ்லிடோல் என்னும் இயற்கை இனிப்பு வகை அடங்கிய டூத் பேஸ்ட் பயன்படுத்துவது நல்லது.

செயற்கை நிறமிகள்

செயற்கை நிறமிகள்

டூத் பேஸ்ட்டில் பயன்படுத்தப்படுகிற சிந்தடிக் கலர்கள் பெரும்பாலும் நிலக்கரி தாரிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. ஏழு நிறங்கள் மட்டுமே டூத் பேஸ்ட்டில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டவை. மற்ற நிறங்களுக்கு தடையுண்டு. குறிப்பாக, மஞ்சள் நிற டூத் பேஸ்ட்டுகள் ஒற்றை தலைவலி, ரத்த அழுத்தம், கேன்சர் ஆகியவற்றை உண்டாக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். அதனால்உங்க டூத் பேஸ்ட் இந்த மாதிரி இருந்தா மொதல்ல அத தூக்கி வீசுங்க...

சோடியம் லாரில் சல்பேட்

சோடியம் லாரில் சல்பேட்

சோடியம் லாரில் சல்பேட் டிடர்ஜெண்ட்டாகப் பயன்படுத்தக் கூடியது. ஆனால் அதை நம்முடைய டூத் பேஸ்ட்டில் உட்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். அது உண்மையிலேயே தரையை சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். டூத் பேஸ்ட்டில் நுரை வருவதற்காக இந்த வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இதனால் நாக்கில் வெள்ளை நிறத்தில் புள்ளிகள் உண்டாகும்.

கார்ஹீனன்

கார்ஹீனன்

இந்த கார்ஹீன்ன என்னும் வேதிப்பொருள் சிவப்பு கடல்பாசியின் கழிவிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது பொதுவாக டூத் பேஸ்ட் திக்காக மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த உட்பொருள் கொண்ட பேஸ்ட்டை பயன்படுத்துவதால் இரைப்பை அழற்சி, மலக்குடல் புற்றுநோய், அல்சர் ஆகியவை உண்டாகும் என்று விலங்குகள் கொண்டு பரிசோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நம்முடைய உடலில் இன்சுலின் சுரப்பை தடுக்கவும் குளுக்கோஸ் பற்றாக்குறையையும் உண்டாக்குகிறது.

புரோபலின் க்ளைக்கால்

புரோபலின் க்ளைக்கால்

டூத் பேஸ்ட் உறைந்து போகாமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிற மிக முக்கிய உட்பொருள் தான் இந்த புரோபலின் க்ளைக்கால் ஆகும். இது பொதுவாக அழகு சாதனப் பொருள்களில் மென்மைத்தன்மை கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது. இந்த புரோபலின் க்ளைக்கால் சேர்க்கப்பட்ட டூத் பேஸ்ட் பயன்படுத்தப்படுவதால் மத்திய நரம்பு மண்டலம், கல்லீரல், இதயம் ஆகியவை பாதிப்புக்கு உள்ளாகும்.

ட்ரைகுளோசன்

ட்ரைகுளோசன்

பாக்டீரியா தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்த ட்ரைகுளோசன் டூத் பேஸ்ட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா சுகாதார நிறுவனம் இந்த ட்ரைகுளோசன் கலந்த சோப்பு மற்றும் பாடி வாஷ்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் நாம் பயன்படுத்தும் கோல்கேட் டூத் பேஸ்ட்டில் இன்னும் இந்த

ட்ரைகுளோசன் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இந்த ட்ரைகுளோசன் நம்முடைய உடலில் தைராய்டு ஹார்மோன்களைக் குறைக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்காமல் தடுக்கிறது.

எந்த பேஸ்ட் வங்கலாம்...

எந்த பேஸ்ட் வங்கலாம்...

கடையில் நிறைய காசை கொடுத்து எதையாவது வாங்கி, கூடவே நோயையும் சேர்த்து வாங்குவதை விட, வீட்டிலேயே டூத் பேஸ்ட் தயாரித்து பயன்படுத்துவது நல்லது. கிளே பேஸ்ட் அதாவது மண்ணில் நம் முன்னோர்கள் பல் துலக்கினார். அதை முட்டாள்தளம் என்று சொன்னோம். ஆனால் அதுதான் ஆரோக்கியம் நிறைந்தது என்பதை உணர தவறிவிட்டோம்.

அதைத்தவிர, வேப்பிலையின் குணம் நிறைந்த, வேப்பிலை எண்ணெய் உட்பொருளாகக் கொண்ட, கிராம்பு உட்பொருளாகக் கொண்ட டூத் பேஸ்ட்டுகளை வாங்கிப் பயன்படுத்துவது நம்முடைய பணத்தை சேமிப்பதற்காக மட்டுமல்ல, நம்முடைய பற்கள் மற்றும் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளையும் பாதுகாக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: teeth care
English summary

check your toothpaste for these 7 sinful ingredients to avoid

You do it every day at least twice if you are one of the 69 percent who brushes your pearly whites morning and evening. Many toothpastes on the market include a host of harmful ingredients.
Story first published: Wednesday, March 7, 2018, 17:30 [IST]