For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் பிறப்புறுப்பில் ஏற்பட கூடிய புற்றுநோயை தடுக்கும் கிரீன் டீ ..! எப்படினு தெரியுமா..?

|

பெண்களை போலவே ஆண்களுக்கும் அவர்களின் அந்தரங்க உறுப்புகளில் பல வித நோய்கள் குறி வைத்து தாக்குகிறது. இவை எண்ணற்ற உயிர் இழப்புகளை சமீப காலமாக ஏற்படுத்துகிறது. இந்த வரிசையில் முதன்மையான இடத்தில் இருப்பது ஆண்களின் பிறப்புறுப்பில் வர கூடிய ப்ரோஸ்டேட் புற்றுநோய் தான்.

ஆண்களின் பிறப்புறுப்பில் ஏற்பட கூடிய புற்றுநோயை கிரீன் டீ குடிப்பதால் தடுத்து விடலாமாம்..!

இவற்றின் அறிகுறிகளை ஆரம்ப கால கட்டத்திலே அறிய முடியாததால் ஆண்கள் பலரும் அபாயமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் அண்மையில் நடந்த ஆராய்ச்சியில், கிரீன் டீ குடிக்கும் ஆண்களை இந்த வகை புற்றுநோய் தடுத்து விடும் என கண்டுபிடித்துள்ளனர். இதனை பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில் அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புற்றுநோய் கொடியதா..?

புற்றுநோய் கொடியதா..?

மற்ற நோய்களை காட்டிலும் புற்றுநோயை பொதுவாகவே கொடிய நோய் என்றே சொல்கின்றனர். இதற்கு காரணம், இவை ஆரம்ப நிலையில் எந்த வித பெரிய அறிகுறிகளையும் தராதாம். மேலும், இறுதி காலத்தில் இவை மரணத்தை தர கூடும். இதனால் தான், புற்றுநோயை கொடிய நோய்களின் வரிசையில் சேர்த்துள்ளனர்.

பெண்களா..? ஆண்களா..?

பெண்களா..? ஆண்களா..?

புற்றுநோய் ஆண்களின் பிறப்புறுப்புகளிலும் பெண்களின் அந்தரங்க பகுதிகளிலும் இன்றைய கால கட்டத்தில் அதிகம் வருகிறது என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். குறிப்பாக ஆண்களுக்கு பிறப்புறுப்பில் புற்றுநோய் செல்கள் உருவாகி மெல்ல மெல்ல பல மடங்காக உற்பத்தி செய்து, மற்ற உறுப்புகளுக்கும் இவை பரவ தொடங்கிய பின்னரே நமக்கு இதன் விளைவுகள் தெரியுமாம்.

பல்கலைக்கழக ஆராய்ச்சி...

பல்கலைக்கழக ஆராய்ச்சி...

இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இதில் 62 ஆண்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரு குழுவாக பிரித்து, ஒரு குழுவிற்கு மட்டும் கிரீன் டீயை அன்றாடம் 3 முறை கொடுத்து வந்தனர். எஞ்சிய பாதி பேருக்கு கிரீன் டீ கொடுக்கப்படவில்லை.

முடிவு என்ன..?

முடிவு என்ன..?

இந்த ஆராய்ச்சி ஒரு குறிப்பிட்ட காலம் வரை நடத்தப்பட்டது. இறுதியாக கிரீன் டீ குடித்தவர்கள் பிறப்புறுப்பு புற்றுநோயை தடுக்க கூடிய எதிர்ப்பு சக்தியை அதிகம் கொண்டவர்களாக உள்ளனர் என்பதை அறிந்தனர்.

MOST READ: கொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..!

கிரீன் டீ எப்படி..?

கிரீன் டீ எப்படி..?

மற்ற டீயை காட்டிலும் ஆண்களின் பிறப்புறுப்பில் உருவாக கூடிய புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இந்த கிரீன்டீயிற்கு உள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆண்கள் தினமும் கிரீன் டீ குடித்து வந்தால் எளிதில் இந்த வகை புற்றுநோயை தடுத்து விடலாம்.

அப்படி என்ன இருக்கிறது..?

அப்படி என்ன இருக்கிறது..?

கிரீன் டீயில் epigallocatechin-3-gallate (EGCG) என்கிற மூல பொருள் உள்ளது. இவை ஒரு வித முக்கிய ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இதன் காரணமாக தான் ஆண்களின் பிறப்புறுப்பில் உண்டாக கூடிய புற்றுநோய் செல்களை இவை தடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றது.

கிரீன் டீயின் வேலை...

கிரீன் டீயின் வேலை...

நாம் தினமும் கிரீன் டீ குடித்தால் நமது உடலில் உருவாக கூடிய புற்றுநோய் செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக தடை செய்ய படுகிறது. குறிப்பாக பிறப்புறுப்பில் ஏற்பட கூடிய புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுத்து நிறுத்துகிறது. மேலும், ஏற்கனவே பிறப்புறுப்பு புற்றுநோயால் பாதிக்கபட்டவர்கள் இதனை குடித்தால் அவர்களின் ஆயுள் காலம் சிறிது அதிகரிக்கும்.

எவ்வளவு அளவு..?

எவ்வளவு அளவு..?

கிரீன் டீயை ஆண்கள் குடித்தால் இந்த கொடிய வகை புற்றுநோயில் இருந்து தப்பித்து கொள்ளலாம். அதற்கு தினமும் குறைந்தது 2 வேளை கிரீன் டீ குடித்தாலே போதும். இது போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ள எளிதான உணவுகளே போதும்.

MOST READ: உங்களின் காதலிக்கோ(அ) மனைவிக்கோ இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள்..!

கிரீன் டீயின் மகிமை..!

கிரீன் டீயின் மகிமை..!

புற்றுநோய்க்கு மட்டுமா கிரீன் டீ..? என்று கேட்டால், அதற்கு பதில்" இல்லை" என்பதே. கிரீன் டீ பல வகையான மருத்துவ தன்மைகளை கொண்டது. உடலில் சேர கூடிய கெட்ட கொலஸ்ட்ரால் முதல் உடல் எடை குறைப்பு வரை அனைத்து வித பிரச்சினைகளுக்கும் இது உதவுகிறது. மேலும், ரத்த ஓட்டத்தையும் இது சீராக வைக்கிறதாம்.

இது போன்ற புதிய பதிவுகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Green Tea Treat Prostate Cancer?

Prostate cancer is a kind of cancer affects men's private organ.
Desktop Bottom Promotion