Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
குடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு
அஸ்கரியாஸிஸ் என்பது ஒருவகை சுருள்புழு நோயாகும். இது சிறுகுடலில் ஏற்படக்கூடியது. இது உங்கள் உடலை பயன்படுத்தி முட்டையிட்டு அதிகளவு புழுக்களை உற்பத்திசெய்யக்கூடியது. இங்கே இதன் அறிகுறிகள், பாதிப்புகள் ம
அஸ்கரியாஸிஸ் என்பது ஒருவகை சுருள்புழுவாகும். இது சிறுகுடலில் ஏற்படக்கூடியது. இது உங்கள் உடலை பயன்படுத்தி முட்டையிட்டு அதிகளவு புழுக்களை உற்பத்திசெய்யக்கூடியது. முழுமையாக வளர்ச்சியடைந்த புழுக்கள் 30 சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும். இது உங்களின் குடலில் ஒட்டிக்கொண்டு உயிர்ச்சத்துக்களை உரியும் ஒரு ஒட்டுண்ணியாகும்.

மனிதர்களுக்கு நிமோனியா, ஆஸ்துமா, வயிறுக்கோளாறுகள் என பல தீமைகளை ஏறப்டுடக்கூடிய இதனைப்பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. ஏனெனில் இது ஒருவரின் உடலுக்குள் வந்துவிட்டால் இவை இருக்கும் அறிகுறிகள் மிகவும் தாமதமாகவே தெரியும். அதற்குள் இவை பன்மடங்கு பெருகிவிடும். இங்கே இதன் அறிகுறிகள், பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகளை பார்க்கலாம்.

காரணங்கள்
அஸ்கரியாஸிஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு நேரடியாக பரவாது. அஸ்கரியாஸிஸ் முட்டை கலந்த தண்ணீரை குடிக்கும்போதோ அல்லது அல்லது புழுக்கள் உள்ள மண் மீது செல்லும்போதோ இவை மனித உடலுக்குள் எளிதாக சென்றுவிடுகிறது. குறிப்பாக நிலங்களில் கலக்கும் மனிதக்கழிவுகளே இவை பரவ முக்கிய காரணமாகிறது. குழந்தைகள் மணலில் விளையாடிவிட்டு அதே கையில் சாப்பிடுவது, மணல் உள்ள காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவது போன்றவற்றின் மூலம் இவை எளிதாக பரவுகிறது.

பரவும் விதம்
குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் இந்த நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனெனில் அவர்கள்தான் மணலில் விளையாட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இவை பெரும்பாலும் சூடான சூழ்நிலைகளிலியே பரவும். சுகாதாரம் குறைவாக உள்ள இடங்கள் இவை வளர மிகவும் உகந்தது. கழிவுகளை அகற்றாத இடங்கள் இவை பரவும் வாய்ப்பை அதிகரிக்கும்.

நுரையீரலில் அறிகுறிகள்
நுண்ணிய அஸ்கரியாஸிஸ் முட்டைகள் உங்கள் வயிற்றுள் சென்றபின் அவை உங்கள் சிறுகுடலில் குடியேறி உங்கள் இரத்தஓட்டத்தை பாதித்து நுரையீரலில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் சில அறிகுறிகளை உணரலாம். அவை, மூச்சுவிடுவதில் சிரமம், தொடர்ச்சியான இருமல், வீசிங் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். பத்து நாட்களுக்கு பிறகு அவை சிறுகுடலில் இருந்து உங்கள் தொண்டையை நோக்கி முன்னேறும்.

குடல் அறிகுறிகள்
உங்கள் குடலில் இருந்துகொண்டு சத்துக்களை உறிஞ்சி வாழும் இந்த புழுக்கள் உங்கள் குடலிலியே ஒட்டுண்ணியாக வளரும். முழுமையாக வளர்ச்சியடைந்த புழுக்கள் உங்கள் குடலில்தான் இறக்கும் வரை வாழும். அஸ்கரியாஸிஸ் பாதிப்பு ஆரம்ப நிலையிலிருந்து மிதமான நிலை வரை இருந்தால் அடிவயிற்றில் வலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

முதிர்ச்சியடைந்த புழுக்களின் பாதிப்புகள்
ஒருவேளை உங்கள் வயிற்றில் அதிகளவு முதிர்ச்சியடைந்த புழுக்கள் இருந்தால் அவற்றின் பாதிப்பு கடுமையாக இருக்கும். அவை முறையே, கடுமையான வயிற்றுவலி, அதிக களைப்பு, வாந்தி, எடை இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, மலத்தில் இரதம் அல்லது புழுக்கள் போற பாதிப்புகள் ஏற்படும்.

பாதிப்புகள்
வளர்ச்சியின்மை: குழந்தைகளிடம் இதன் பாதிப்பு அதிகமாய் இருக்கும். இது குழந்தைகளுக்கு பசியின்மையை அதிகரித்து அவர்களுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்தும். இதனால் குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும்.
குடல் அடைப்பு: அதிகளவு புழுக்கள் வயிற்றில் இருக்கும்போது அவை குடலின் செயல்பாடுகளை தடுக்கும். அதனால் கடுமையான வயிற்றுவலி, செரிமானக்கோளாறு, வாந்தி போன்றவை ஏற்படலாம்.
குழாய் அடைப்புக்கள்: சில நேரங்களில், புழுக்கள் உங்கள் கல்லீரல் அல்லது கணையத்தின் குறுகலான குழாய்களைத் தடுக்கலாம், இதனால் கடுமையான வலி ஏற்படுகிறது.

தடுக்கும் முறைகள்
இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி சுகாதாரம்தான். சாப்பிடுவதற்கு முன்னர் கைகளை சோப்பு பயன்படுத்தி நன்கு கழுவ வேண்டும் அதேபோல கைகள் மற்றும் பழங்களையும் சுத்தமாக கழுவ வேண்டும். அடைக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களை மட்டும் பயன்படுத்தவும் அதேபோல சூடாக சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடவும்.

கண்டறியும் முறைகள்
இதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது மால பரிசோதனைதான். அதுதவிர எண்டோஸ்கோபி, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், எக்ஸ்ரே போன்றவற்றை பயன்படுத்தியும் கண்டறியலாம்.

சிகிச்சை முறைகள்
மருத்துவர்கள் பெரும்பாலும் இதற்கு பயன்படுத்துவது ஆன்டிபராஸ்டிக் மருந்துகளைத்தான். இது சிறந்த சிகிச்சைமுறையாகும். இதனை ஒரேடியாக குணப்படுத்த இயலாது மருத்துவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முட்டைகளையும், புழுக்களையும் வெளியேற்றுவார்கள். ஒருவேளை புழுக்கள் அதிகமிருந்து அவை உங்கள் குடல் இயக்கங்களை தடுக்குமானால் அறுவைசிகிச்சை செய்ய நேரிடலாம்.



Click it and Unblock the Notifications