For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உங்களுக்கும் இப்படி வெள்ளை புள்ளிகள் இருக்கா?... அப்போ உங்க பிறப்புறுப்பு சுத்தமா இல்லன்னு அர்த்தம்.

  By Gnaana
  |

  பூஞ்சை பாதிப்பால் ஏற்படும் சரும வியாதிகளைப்போல, உடலில் வேறு சில பூஞ்சைத் தொற்றுக்களும் ஏற்படுகின்றன. பொதுவாக இவை மற்றவருக்கு பரவுவதில்லை. ஆயினும், வாய் மற்றும் பெண்களின் அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படும் வெண்படல வியாதிகள், பால்வினை நோய்களைப் போல, உடலுறவின் போது பரவக்கூடியவை என்பதே, அவற்றின் ஆபத்துக்கள்.

  health

  வெண்படலம் என்பது, கேன்டிடா ஆல்பிகான்ஸ் எனும் பூஞ்சையால் ஏற்படும் உடல் செல் பாதிப்பாகும். மோசமான வியாதியாக இல்லாவிடினும், வாயில் பரவும் இந்த வெண்படலம், நாக்கு உதடு மற்றும் தொண்டை போன்ற இடங்களில், வெண்புள்ளிகளாக படர்ந்து, வலியை ஏற்படுத்தும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  வெண்படலங்கள்

  வெண்படலங்கள்

  இதுவே, பெண்களின் பிறப்புறுப்பை பாதிக்கும்போது, நிறத்தை சிவப்பாக்கி, வலி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். பிறப்புறுப்பு வெண்படலம், உறுப்பை வீங்கச்செய்து, வெண்ணிற நீரை வெளியேற்றக்கூடும். உடலுக்கும் மனதுக்கும் வேதனை மற்றும் அச்சத்தை ஏற்படுத்தும், வெண்படல பாதிப்பை, எப்படி குணமாக்குவது என்று குழப்பமா? குழம்ப வேண்டாம், இந்த அச்சம்தரும் நோயை, வீட்டிலேயே, எளிய முறைகளில் குணமாக்கிவிடலாம். அவை என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?

  பூண்டு

  பூண்டு

  பூஞ்சைத் தொற்றுக்கெதிரான மருந்தாக, நாம், பூண்டைப் பயன்படுத்தி வந்தாலும், 1936 ஆம் ஆண்டு, ஸ்மிட் மற்றும் மர்க்வார்ட் எனும் ஆராய்ச்சியாளர்கள், பூண்டின் பூஞ்சை எதிர்ப்பு தாதுக்களை கண்டறிந்த பின்னரே, மேலை மருத்துவம் இதன் பெருமையை உணர்ந்தது. ட்ரிகோபைதான், கேண்டிடிடா, டோருலோப்சிஸ் மற்றும் க்ரிப்டோகாக்கஸ் போன்ற பூஞ்சைகளுக்கு எதிராக, பூண்டு, செயலாற்றி, அவற்றின் ஆக்சிஜன் ஈர்ப்பை விலக்கி,, வளர்ச்சியைத் தடுக்கிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் கீமோதெரபி சம்பந்தமான அறிவியல் மாநாட்டில், பூண்டிலுள்ள பூஞ்சை எதிர்ப்பு வேதிகள், C ஆல்பிகன்ஸ் பூஞ்சையை அழிப்பதாக, தெரிவித்துள்ளனர்.

  பூண்டைப்பச்சையாகவோ அல்லது மாத்திரையையோ தினமும், சாப்பிட்டுவர, பூஞ்சையை அழித்து, வெண்படல பாதிப்புகளைத் தீர்க்கும். தோல் நீக்கிய பூண்டை பருத்தித் துணியில் முடிந்து, பிறப்புறுப்பில் வைத்து சற்றுநேரம் கழித்து எடுக்க, பூஞ்சைத்தொற்று விலகும்.

  கிராம்புத் தைலம்

  கிராம்புத் தைலம்

  கிராம்பிலுள்ள ஈஜினால், பூஞ்சைத்தொற்றை எதிர்த்து செயல்படும். சுத்தமான நீரில் சிலதுளிகள் கிராம்பு எண்ணையை விட்டு, வாய்கொப்புளித்துவர, வாய் உதட்டிலுள்ள வெண்படலம் மறையும். கிராம்பு, பூஞ்சைகளின் இனப்பெருக்கத்தையும் வளர்ச்சியையும் தடுப்பதாக, ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், கிராம்பிலுள்ள ஈஜினால் தாதுக்கள், பூஞ்சை தாக்கிய உடல் அணுக்களை சீராக்குவதை, உறுதிசெய்கின்றன.

  ஆப்பிள் சீடர் வினிகர்

  ஆப்பிள் சீடர் வினிகர்

  வெண்படலத்தை அகற்ற, ஆப்பிள்சீடர் வினிகரும் குணமளிக்கும். மைக்ரோடைலூசன் முறையில் ஆப்பிள்சீடர் வினிகர், வெண்படலத்தை ஏற்படுத்தும், கேன்டிடா பூஞ்சையை, நீக்குகிறது. ஆப்பிள்சீடர் வினிகர், நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்புமிக்கது. பத்து மில்லி ஆப்பிள்சீடர் வினிகரை, அரைகப் நீரில் கலக்கி, மவுத்வாஷ்போல, வாயிலிட்டு கொப்புளித்துவர, வாயிலுள்ள வெண்படலம் நீங்கிவிடும். ஆப்பிள்சீடர் வினிகர், வெண்படல பூஞ்சை பாதிப்பை போக்கும், கிருமிநாசினியாகும். குளிக்கும்நீரில் இருநூறுமிலி ஆப்பிள்சீடர் வினிகரை கலந்து, பிறப்புறுப்பில் நன்கு ஊற்றி அலசிவர, பெண்களின் அந்தரங்க வெண்படல தொற்று பாதிப்புகள் அகலும்.

  வெங்காயம்

  வெங்காயம்

  வெங்காயம், ஈஸ்ட்தொற்றை மட்டுப்படுத்தி, வாயின் வெண்படல புள்ளிகளை, நீக்குகிறது. தினமும் வெங்காயத்தை பச்சையாகவோ அல்லது சமையலிலோ சேர்த்து வரலாம். இருப்பினும், அந்தரங்கபகுதிகளில் வெண்படல பூஞ்சைத் தொற்று காணப்பட்டால், வெங்காயத்தைத் தவிர்க்க வேண்டும்.

  தயிர்

  தயிர்

  தயிரிலுள்ள லாக்டோபேசில்லஸ் அசிடோபிலஸ் எனும் இயற்கைபாக்டீரியா சுரக்கும் ஹைட்ரஜன்பெராக்சைட்,அந்தரங்க உறுப்பின் கேன்டிடா பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தும் ஈஸ்டின் வளர்ச்சியைத்தடுக்கிறது. டாம்பொன் எனும் பருத்திசுருளில் தயிரைத்தோய்த்து, அந்தரங்கஉறுப்பில் வைத்துவர, வெண்படல தொற்றுக்கள் விலகும். வாய் மற்றும் நாக்கின் வெண்படல பாதிப்பு, தயிரை அதிகம் உட்கொள்வதன்மூலம், நீங்கும். கர்ப்பிணிகளின் வெண்படலத் தொற்றைப் போக்குவதில், தேனும் தயிரும், நல்லதீர்வு தருவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  எலுமிச்சைசாறு

  எலுமிச்சைசாறு

  எலுமிச்சை சிறந்த கிருமிநாசினி என்பது நமக்குதெரியும், எலுமிச்சையிலுள்ள மோனோடெர்பெனாய்டுகள் பூஞ்சை எதிர்ப்புதன்மை மிக்கவையாதலால், சிலதுளிகள் எலுமிச்சைசாற்றை நாக்கிலிட, கேன்டிடா வெண்படல பாதிப்புகள் விலகும். தேங்காயெண்ணையை சமையலில் சேர்த்தாலும், வெண்படல பாதிப்புகள் நீங்கும்.

  போரிக் அமிலம்

  போரிக் அமிலம்

  போரிக் அமிலத்திலுள்ள பூஞ்சை எதிர்ப்புதன்மை, சக்கரோமைசஸ் செரிவிசியா எனும் பெண்ணுறுப்பில் வீக்கத்தை ஏற்படுத்தும் பூஞ்சையின் பாதிப்பை, அகற்றும். இரத்த கார்பன் ஆய்வில், பெண்ணுறுப்பின் பூஞ்சைத் தொற்றைப் போக்கும் விலையுயர்ந்த மருந்துகளுடன் ஒப்பிடும்போது, சாதாரண போரிக் அமிலம், பூஞ்சைத் தொற்றை ஒழிக்கும் ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. போரிக் அமிலம் நிரப்பிய கேப்ஸ்யூலை பெண்ணுறுப்பினுள்ளே, சென்றுவிடாமல் செருகிவர, பூஞ்சைதொற்று பாதிப்புகள்நீங்கும். கேப்ச்யூல்கள் உட்சென்றால், வயிற்று பாதிப்புகள் ஏற்படலாம். இதுபோல வாரமொருமுறை செய்துவரலாம். ஆயினும், கர்ப்பிணிகள் இதைத் தவிர்ப்பது நலம்.

  ஹைட்ரஜன் பெராக்சைடு

  ஹைட்ரஜன் பெராக்சைடு

  பிறப்புறுப்பிலுள்ள பாக்டீரியாக்கள் ஹைட்ரஜன்பெராக்சைடை உற்பத்தி செய்து, பூஞ்சைத்தொற்றைத் தடுத்தாலும், பூஞ்சைபாதிப்பு ஏற்படும் சமயங்களில், பத்து மில்லி ஹைட்ரஜன் பெராக்சைடை அரைகப் நீரில் கலந்து, ஸ்பிரேயர் மூலம், பெண்ணுறுப்பில் தெளித்துவர, பூஞ்சைத்தொற்று விலகிவிடும்.

  பேக்கிங் சோடா

  பேக்கிங் சோடா

  சூடான நீரில் உப்பை சேர்த்து, கொப்புளித்துவர, வாய்வெண்படல பாதிப்புகள் குணமாகும். பேக்கிங்சோடாவின் பூஞ்சை எதிர்ப்பு தன்மையால், பெண்ணுறுப்பின் PH அளவைக் கட்டுப்படுத்தி, பூஞ்சைத்தொற்றை விலக்கமுடியும். இருபது கிராம் பேக்கிங் சோடாவை, இரண்டு கப் நீரிலிட்டு, வாரமிருமுறை, பெண்ணுறுப்பை அலசிவர, பூஞ்சைபாதிப்புகள் விலகும். கேப்ஸ்யூல்களில் அடைத்து, செருகியும் உபயோகிக்கலாம்.

  சிவப்பு களாக்காய் சாறு

  சிவப்பு களாக்காய் சாறு

  நறுக்கிய வெள்ளரிப்பிஞ்சு, இலைகளுடன் கூடிய கொத்தமல்லி தண்டு, அவகேடோ, துளசி விதைகள், எலுமிச்சை சாறு, இந்துப்பு மற்றும் மிளகுத்தூள் இவற்றை நன்கு கலக்கி, கால்லிட்டர் நீரிலிட்டு, பாதியை காலை சிற்றுண்டிக்கு முன்பும் மீதியை மதிய உணவுக்கும் முன் பருகி வரலாம். களாக்காய்சாறு, உடல் செல்களின் வெளிப்புறத்தில் பூஞ்சைப்படர்வு ஏற்படாமல் தடுக்கின்றன. வீக்கத்தை ஏற்படுத்துவதில்லை. களாக்காயிலுள்ள ப்ரோந்தோசியானிடின்ஸ் எனும் பூஞ்சை எதிர்ப்புச்சத்து, வாய் வெண்படலத்தை ஏற்படுத்தும் பூஞ்சைத்தொற்றை தடுத்து, சரியாக்குகிறது. களாக்காய் சாற்றைப்பருகிவர, அந்தரங்க உறுப்பிலுள்ள வெண்படலத்தொற்று குணமாகிவிடும்.

  இலவங்கப்பட்டை

  இலவங்கப்பட்டை

  பூஞ்சைஎதிர்ப்புமிக்க இலங்கப்பட்டையைபொடித்து, நீரிலிட்டு கொதிக்கவைத்து, இளஞ்சூட்டில் பருகிவர, வெண்படல பாதிப்புகளை சரியாக்கும். ஆயினும் கருவடைவதை எதிர்நோக்கும் பெண்கள், இதைத் தவிர்க்க வேண்டும். உதடுகளிலுள்ள வெண்படலத்தை அகற்ற, சூடான பாலில், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணை கலந்து பருகி வரலாம். வெண்படல பூஞ்சை பாதிப்புகளுக்கு, மூலிகைகள் நல்ல தீர்வளிக்கும். சோற்றுக் கற்றாழையிலுள்ள இயல்பான செயல்திறன், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிக்கின்றன.

  சோற்றுக் கற்றாழை ஜெல்லை, வெண்படலத்தில் தடவிவர, பாதிப்புகள் நீங்கும்.

  திராட்சை விதை

  திராட்சை விதை

  குழந்தைகளின் வாய் வெண்படலத்திற்கு, திராட்சை விதைச்சாறு கலந்தநீரை, காட்டனில் நனைத்து, குழந்தைகளின் வாயில் வைத்துவர, பூஞ்சைத்தொற்று குணமாகும். பெரியவர்கள், இந்தக்கலவையை குடிக்க, பூஞ்சைத் தொற்று விலகும். அந்தரங்க உறுப்பில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றுக்கு இதை, கிருமிநாசினியாகப் பயன்படுத்தலாம். சிலதுளிகள் டீட்ரீ ஆயிலை, நீரிலிட்டு வாயை அலசிவர, பூஞ்சைத்தொற்று நீங்கும். சிலதுளிகளை, வெண்படலத்தின் மேல் வைத்து வரலாம். ஆயினும், விழுங்கிவிடக் கூடாது, இதிலுள்ள வேதிப்பொருட்கள், உடலைபாதிக்கும்.

  லாவெண்டர் ஆயில்

  லாவெண்டர் ஆயில்

  கேன்டிடா ஆல்பிகன்ஸ் பூஞ்சையை அழிக்கும் ஆற்றல்மிக்க லினலூல் மற்றும் லினையில்அசிடேட் அடங்கிய லாவெண்டர் ஆயில், பூஞ்சைகளின் பரவலைத் தடுக்கும். பல்துலக்கும்போது, சிலதுளிகள் லாவெண்டர் ஆயிலை டூத்பேஸ்டில் கலந்து பிரஷ் செய்துவர, பாதிப்புகள் நீங்கும்.

  சவ்ரோபஸ் ஆன்ட்ரோஜீனஸ் இலைச்சாற்றை குழந்தைகளின் நாக்கில் தடவ, கேன்டிடா ஆல்பிகான்ஸ் பூஞ்சைத் தொற்றைத் தடுக்கும்.

  மூலிகை மவுத் வாஷ்

  மூலிகை மவுத் வாஷ்

  எச்சினாசியா, லிகொரைஸ் மற்றும் மிர் மூலிகைகளை நீரிலிட்டு, மவுத் வாஷ்போல உபயோகிக்க, வெண்படல பூஞ்சைத்தொற்று நீங்கிவிடும். இந்த நீரானது தெரியாமல் வாய்க்குள் விழுங்கிவிட்டாலும் எந்த பிரச்சினையோ பக்க விளைவுகளோ ஏற்படாது.

  பிளட் ரூட் மற்றும் கோல்டன் சீல்

  பிளட் ரூட் மற்றும் கோல்டன் சீல்

  பெர்பிரின் அடங்கிய பிளட்ரூட் மற்றும் கோல்டன்சீல் எனும் அமெரிக்க மூலிகைகளின் கலவையை, பாதிப்புள்ள இடங்களில்தடவ, பூஞ்சைத்தொற்றைத் தடுக்கலாம்.

  ஓம எண்ணை

  ஓம எண்ணை

  ஓம எண்ணையிலுள்ள பூஞ்சை எதிர்ப்பு, வாய் வெண்படலத்தை போக்கும். ஓம எண்ணெயிலுள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் அந்தரங்கப் பகுதிகள் மட்டுமல்லாது, சருமத்தில் உள்ள எல்லா வகையான பூஞ்சைத் தொற்றுக்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

  பூஞ்சைப் படலத்தொற்றை தவிர்க்க

  பூஞ்சைப் படலத்தொற்றை தவிர்க்க

  ஸ்வீட் மற்றும் கார்போஹைட்ரெட் நிரம்பிய, பூஞ்சைகளை அதிகரிக்கக்கூடிய உணவுப் பொருள்கள் உண்பதைத் தவிர்க்கவேண்டும்.

  தினமும் இரண்டு முறை பல்துலக்கி, பற்களில் உணவுத் துணுக்குகள் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  ஐஸ் டீ, குளிர் நீர், ஜூஸ் நன்மை தரும். இறுக்கமான ஆடைகளை விலக்கி, பருத்தி உள்ளாடைகளை அணிந்து, அந்தரங்க உறுப்புகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மாதவிலக்கு காலங்களில், நாப்கின்களை அடிக்கடி மாற்ற வேண்டும்.

  தவிர்க்க வேண்டியவை.

  தவிர்க்க வேண்டியவை.

  புகைபிடிப்பது மற்றும் மனச்சோர்வை போக்க வேண்டும். பல புதிய பிளேவர்கள் என்ற பெயரில் விற்கும் எண்ணைத் தன்மை நிறைந்த ஆணுறைகளைத் தவிர்த்தல் வேண்டும். பால் பொருட்கள், ஈஸ்ட் மற்றும் மஸ்ரூம் இவற்றை முற்றிலும் தவிர்ப்பது அவசியம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  amazing home remedies to get rid of thrush

  Thrush is a fungal infection that occurs due to the overgrowth of a fungus called Candida albicans.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more