உங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் தீய பழக்கங்கள்!

Written By:
Subscribe to Boldsky

நல்ல பழக்கங்களை கற்க நமக்கு பல நாட்கள் ஆகின்றன. ஆனால் சில தீய பழக்கங்களோ நாம் அழைக்காமலேயே நம்மிடம் வந்து ஒட்டிக்கொள்கின்றன. ஒரு சில தீய பழக்கங்கள் நமக்கும், நமது ஆரோக்கியத்திற்கும் மிகவும் தீங்கு விளைவிப்பதாக இருக்கின்றன. அந்த வகையில், நாம் சில தீய பழக்கங்களை உடனடியாக கைவிட வேண்டியது அவசியம். அவை என்னென்ன என்று இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. நொறுக்கு தீனி

1. நொறுக்கு தீனி

பசி எடுக்காமல் சாப்பிடுவது மிகவும் தவறான ஒன்று. டிவி பார்த்துக்கொண்டே பசியே எடுக்காமல் நொறுக்கு தீனிகளை உண்பதை முதலில் நிறுத்த வேண்டியது அவசியம். அதிகமாக சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், இருதய பிரச்சனை போன்ற சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

பசி எடுக்காமல் சாப்பிடாதீர்கள், போர் அடிக்கிறது, கவலை, கோபம் போன்ற சூழ்நிலைகளில் எல்லாம் சாப்பிட வேண்டாம். வீட்டில் எண்ணெய்யால் செய்யப்பட்ட ஸ்நேக்ஸ் இருந்தால், அவற்றிற்கு பதிலாக, பழங்களையும், ஹேல்தியான தானியங்களையும் வையுங்கள்.

2. அதிக நேரம் டிவி பார்ப்பது

2. அதிக நேரம் டிவி பார்ப்பது

அதிக நேரம் டிவி பார்ப்பதால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சில நொறுக்கு தீனிகளை சாப்பிட கூடும், உடலுக்கு வேலை இல்லாமல் போகும். இது டைப் 2 சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.

இதனை தடுக்க, உடற்பயிற்சி செய்து கொண்டே டிவி பார்க்கலாம், வீட்டை சுத்தம் செய்து கொண்டே டிவி பார்க்கலாம். தினமும் 2 மணி நேரத்திற்கு மேல் டிவி பார்க்காதீர்கள்.

3. அதிகமாக செலவு செய்வது

3. அதிகமாக செலவு செய்வது

நிதி பற்றாக்குறை பிரச்சனை உங்களுக்கு இரத்த அழுத்தம், தலைவலி, உடல் வலி, மன உலைச்சல், அல்சர், செரிமான பிரச்சனை, புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பிரச்சனைகளில் கொண்டு சேர்த்துவிடும். எனவே பணத்தை தேவையில்லாமல் செலவு செய்யாதீர்கள்.

கிரேடிட் கார்டு, வாடகை, சேமிப்பு, இதர செலவுகள் என அனைத்திற்கும் பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள். தேவையான செலவு, தேவையற்ற செலவு என இருவகைப்படுத்துங்கள். தேவையற்ற செலவுகளை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

4. துரித உணவுகள்

4. துரித உணவுகள்

அதிகமாக துரித உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை குறைத்துக்கொள்ளுங்கள். இவை உடலுக்கு பல ஆரோக்கிய சீர் கெடுகளை விளைவிக்கும். வார வாரம் கொஞ்சம் கொஞ்சமாக துரித உணவு உண்ணும் பழக்கத்தை குறைத்துக்கொண்டே வாருங்கள்! துரித உணவுகளுக்கு பதிலாக, ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுங்கள்.

5. வெயிலில் சுற்றுவது :

5. வெயிலில் சுற்றுவது :

அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால் சருமம் பாதிப்படைகிறது. அதற்காக வெயிலில் செல்லாமலேயே இருக்கவும் கூடாது. வெயிலில் செல்லும் போது சன் க்ரீம் உபயோகப்படுத்துங்கள்.

6. டென்சன் மற்றும் கவலை

6. டென்சன் மற்றும் கவலை

எந்த நேரமும் டென்சன் மற்றும் கவலையுடன் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். இது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே வேலைகளை சரியான முறையில் முறைப்படுத்தி செய்யுங்கள். கவலைகளை மறக்க நண்பர்களுடன் பேசுங்கள். வெளியிடங்களுக்கு சென்று வாருங்கள்..!

7. காலை உணவை தவிர்ப்பது

7. காலை உணவை தவிர்ப்பது

தினமும் காலையில் கட்டாயமாக உணவு உட்க்கொள்ள வேண்டும். சிலர் காலையில் தாமதமாக எழுந்து, அவசர அவசரமாக சாப்பிடாமல் வேலைக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் உடல் எடை அதிகரிக்க கூடும். மூளையின் பலமும் குறையும். எனவே காலையில் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.

8. அதிகமாக குடிப்பது

8. அதிகமாக குடிப்பது

ஆல்கஹால் அதிகமாக குடிப்பது, குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம் ஆகிவற்றிற்கும் உங்கள் உடல் நலனுக்கும் ஆரோக்கியமற்றது. எனவே கொஞ்சம் கொஞ்சமாக குடியை விட முயற்சி செய்யுங்கள்.

9. புகைப்பிடித்தல்

9. புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல் உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் கெடு விளைவிக்கும். எனவே புகைப்பிடிப்பதை படிப்படியாக குறைத்துக்கொள்ளுங்கள். இது உங்களது ஆரோக்கியம் மற்றும் உங்களை சுற்றி உள்ளவர்களின் ஆரோக்கியம் இரண்டிற்குமே நல்லது.

10. வலிநிவாரணிகள்

10. வலிநிவாரணிகள்

வலி நிவாரண மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உண்பதை சற்று குறைத்துக்கொள்ளுங்கள். எதற்கு எடுத்தாலும் வலி நிவாரணிகளை சாப்பிடுதல் உங்களை அந்த மாத்திரைகளுக்கு அடிமையாக்குவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். மருத்துவரின் பரிந்துரை இன்றி மாத்திரைகளை சாப்பிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

You Should Stop These Bad Habits Immediately

You Should Stop These Bad Habits Immediately
Story first published: Thursday, August 10, 2017, 15:23 [IST]