For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுன்னத் செய்வதால் உடலுறவு வாழ்க்கை பாதிக்கப்படுமா?

சுன்னத் செய்வதால் செக்சுவல் உணர்ச்சி, புணர்ச்சி நிலை குறையுமா?

|

ஆணுறுப்பு மேல்தோலின் முனைப்பகுதி நீக்குவது தான் சுன்னத். இது பல வகைகளில் ஆண்களுக்கு ஆரோக்கிய நன்மைகள் அளிக்கின்றன. ஆனால், இதனால் உடலுறவு உச்சநிலை பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுவதையும் காணமுடிகிறது.

பிறந்த போது பின்னுக்கு இழுக்க முடியாத நிலையில் இருக்கும் அந்த முனை தோல். இந்த முன் தோலுக்கு கீழே ஸ்மெக்கா எனும் பொருள் படியும். இதனால் முன் தோல் பிரிய துவங்கும்.

3 வயதுக்கு பிறகு இந்த ஸ்மெக்கா படித்தலின் காரணத்தால், முன் தோலை பின்னே இழக்க முடியும் நிலை உருவாகும். பதின் வயது இறுதியில் மிக குறைந்த அளவிலான ஆண்கள் மத்தியில் மட்டுமே இந்த முன் தோல் பின் இழுக்க முடியாத நிலை காணப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முன் தோல் செயல்பாடுகள்!

முன் தோல் செயல்பாடுகள்!

ஆண்குறி முன்தோல் வெறுமென இருப்பது கிடையாது. இது சில செயல்பாடுகளுக்கு துணையாக இருக்கிறது.

  • கருவில் வளரும் போது ஆண்குறியை பாதுகாத்தல்,
  • ஆண்குறி மொட்டினை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள,
  • பாலுணர்வு உணர்வு குறையாதிருக்க.
  • ஏன் சுன்னத் செய்ய வேண்டும்?

    ஏன் சுன்னத் செய்ய வேண்டும்?

    சடங்கு: இஸ்லாம் மதத்தில் ஆண்களுக்கு சுன்னத் செய்வது சமய சடங்காகவே பின்பற்றப்படுகிறது.

    நோய்: பால்வினை தொற்று, பால்வினை நோய் அபாயம் குறைய சுன்னத் அல்லது மேல்தோல் முனை பகுதி நீக்குவதை மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர்.

    சிகிச்சை: ஒருசில சிகிச்சைகளுக்காக மொட்டு பகுதி மேல்தோலை நீக்குகிறார்கள்.

    இப்போதெல்லாம் குழந்தை பிறக்கும் போது மருத்துவர்கள் சுன்னத் செய்ய அறிவுரைக்கிறார்கள்.

    சுத்தம்!

    சுத்தம்!

    சுன்னத் செய்துக் கொள்வதால் ஆண்குறி ஆரோக்கியம், சுகாதாரம் மேம்படும். சிறுநீர் பாதை தொற்றுகள் குறையும், பால்வினை நோய் தொற்று அபாயம் குறைதல், ஆண்குறி புற்றுநோய் வாய்ப்புகள் குறையும். இது போல ஆண்குறி சுகாதார நன்மைகள் பல அளிப்பதால் தான் சுன்னத் செய்ய கூறுகிறார்கள்.

    உடலுறவு செயல்பாடு குறையுமா?

    உடலுறவு செயல்பாடு குறையுமா?

    சுன்னத் செய்வதால் உடலுறவு இன்பம் குறையுமா? என்ற கேள்வி நிலவுகிறது. இதை சார்ந்து ஒரு மரபியல் கருத்து நிலவி வருகிறது. அதாவது ஆண்குறியின் மொட்டு பகுதி ரீதியாக உடலுறவில் ஈடுபடும் போது உச்சநிலை அதிகரிக்கும்.

    சுன்னத் செய்வதால் மொட்டு பகுதி காற்றுபடும் படியான நிலையில் இருக்கும். இதனால், காலப்போக்கில் மொட்டு பகுதி உணர்ச்சியானது குறைய துவங்கும். இதனால், அதிகப்படியான செக்ஸ் உணர்வு ஏற்படாது என்ற கருத்தும் கூறப்பட்டு வருகிறது.

    அறிவியல் ஆராய்சிகள்!

    அறிவியல் ஆராய்சிகள்!

    மரபியல் கருத்து ஒருபுறம் இருக்க, இது சார்ந்து சில ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டுள்ளன. பெல்ஜியத்தில் சுன்னத் செய்தவர்கள் (310), செய்யாதவர்கள் (1059) என இரு குழுவினர் மத்தியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இந்த காரணத்தினால் உடலுறவு இன்பம் குறைபாடு உண்டாகிறதா? என்ற ஆய்வு நடத்தப்பட்டது.

    தகவல்கள்!

    தகவல்கள்!

    இந்த ஆய்வில் நாற்பது கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு அதிகபட்சம் ஐந்து ரேட்டிங், குறைந்தபட்சம் ஒரு ரேட்டிங் அளிக்கும்படியான சர்வே ஆய்வு நடந்தது. அதிலிருந்து பெறப்பட்ட தகவல்கள்...

    1. சுன்னத் செய்யாத ஆண்களுடன் ஒப்பிடுகையில், சுன்னத் செய்த ஆண்களின் உடலுறவு இன்பம் குறைவாக தான் இருக்கிறது.
    2. உச்சக்கட்ட இன்பத்தை அடைவதில் சிரமம் இருக்கிறது.
    3. ஆணுறுப்பு மொட்டில் மரத்துப் போன உணர்வு இருக்கிறது.
    4. சிறுவயதில் சுன்னத் செய்துக் கொண்டவர்கள் உடன் ஒப்பிடுகையில் பருவம் அடைந்த பிறகு சுன்னத் செய்து கொண்ட ஆண்களின் உடலுறவு இன்பம் குறைவாக தான் இருக்கிறது.
    காக்ஸ் ஆய்வு!

    காக்ஸ் ஆய்வு!

    இதே கேள்வியுடன் 2015ல் நடந்த காக்ஸ் ஆய்வில் மைக்ரோஸ்கோப் கட்டமைப்பில் சுன்னத் செய்வதால் பாலியல் இன்பம் குறைவதாகவோ, அதனால் உணர்சிகள் குறைவது போன்றவை ஏற்படுவதாக அறியப்படவில்லை என ஆய்வறிக்கை வெளியானது.

    மோரிஸ் ஆய்வு!

    மோரிஸ் ஆய்வு!

    இது குறித்து 2013ல் மோரிஸ் ஆய்வு ஒன்றும் நடந்தது. அதில் சுன்னத் செய்து கொள்ளாத 19,542 ஆண்களும், சுன்னத் செய்து கொண்ட 20,931 ஆண்களும் கலந்துக் கொண்டனர்.

    இந்த ஆய்வறிக்கையில் சுன்னத் செய்துக் கொள்வதால் பாலியல் உணர்ச்சி, புணர்ச்சி இன்பம், விந்து வெளிவருவது, விறைப்பு என எந்த விதத்திலும் எதிர்மறை பாதிப்புகள் ஏற்படுவது போன்ற தாக்கங்கள் காணப்படவில்லை என கூறப்பட்டது.

    இந்த ஆய்வு தகவல்களுடன் ஒப்பிடுகையில், முந்தைய ஆய்வு தகல்கள் கேள்விக்குறியாகியிருக்கிறது. பின்னர் வந்த பல ஆய்வுகளில் சுன்னத் செய்வதால் எந்த பாலியல் ரீதியான உணர்ச்சி குறைபாடும் ஏற்படுவதில்லை என்றே கூறப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Will Circumcision aka Sunnath Affect Sexual Performance?

Will Circumcision aka Sunnath Affect Sexual Performance?
Desktop Bottom Promotion