For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வியாதிகளைப் போக்கி புத்துணர்வு தரும் அரோமா தெரபியை பயன்படுத்தும் முறை!

ஆயுர்வேத உலகில் அரோமா தெரபியும் மிக முக்கியமான ஒன்று. அது தரும் நன்மைகளிய இந்த கட்டுரையில் காணலாம்.

By Gnaana
|

சங்ககாலம்தொட்டு இன்றுவரை, தெய்வீகத் தலங்கள், விழா வைபவங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளிலும் முதன்மையான இடம் பிடிப்பது மலர்களே!

மலர்களின் மணமும் அவற்றின் அழகிய கண்ணைக்கவரும் தோற்றமும் பார்ப்போரை தம்வயப்படுத்தும் ஆற்றல்மிக்கவை என்றால் அது மிகையில்லை.

மலர்கள், அழகுக்காக மட்டுமன்றி, உடல் பிணி நீக்கவும் மருந்தாகப் பயன்படுகிறது என்பதை நாம் தாமரை, ரோஜா உள்ளிட்ட பலவகை மலர்களின் மருத்துவ குணங்களின் மூலம் அறிந்திருப்போம்.

பூக்களின் நறுமணம்! இதை சுவாசித்து உணர, நமது மூக்குக்கு நுகரும் சக்தியைக் கொடுத்தது மட்டுமல்லாமல், அவற்றின் மூலம் நமது சோர்வை நீக்கி, உற்சாகம், உடல் வேதனைகள் தீர்த்தல் போன்ற பல அரிய நற்பலன்களையும் தந்திருக்கிறார் இறைவன்.

நமது மூக்கில் உள்ள உணர்ச்சியை அறியும் செல்கள் மூலம் நாம் நுகரும் மணத்தை மூளையில் உள்ள செல்கள் உள்வாங்கி, நல்ல மணத்தை, மகிழ்ச்சியான மனநிலை மூலமும், கெட்ட மணத்தை சோர்வான மனநிலை முலமும் நமக்கு உணர்த்துகின்றன. மேலும் சில செயற்கை மணங்கள் நமக்கு தலைவலி உள்ளிட்ட ஒவ்வாமையை உண்டாக்கும், இதன்மூலம் வாசனைகள், மனித உடலை ஆள்வதை உணரலாம்.

வாசனைமருத்துவம், பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமதுதேசத்தில் வழக்கத்தில் இருந்திருந்தாலும், தற்கால நவநாகரீக மங்கையரின் முக,உடல் அழகுக்கலையில் அதிகம் பயன்படுத்தப்படுவதால், தற்போது பிரபலமாகி வருகிறது.

வாசனைப்பூக்கள் மூலம் தயாராகும் எசன்ஷியல் ஆயில் எனப்படும் பூத்தைலம், நிறைய மருத்துவ பலன்கள் கொண்டது. அரோமாதெரபிக்கு இதுபோன்ற ஆயிலே, மூலமாகும்.

அரோமா தெரபியின் மூலம் உடல் அழகை பொலிவாக்க, தடுமாறும் மனதை அமைதிப்படுத்த, உடலில் அசுத்தத்தை நீக்கி, இரத்தத்தை சீராக்க, பயன்படுத்தலாம் என்கின்றனர்.

Types of Aroma therapy to rejuvenate your body and mind

நாம் சிலஇடங்களுக்கு அலுவல் நிமித்தமாகவோ அல்லது வேறு காரணமாகவோ செல்லும்போது, திடீரென அந்தச்சூழல் நமக்கு பரிச்சயமானதுபோல தோன்றும், அந்த இடங்களில் காற்றில் கலந்திருக்கும் நறுமணம், நம் மனதை அமைதியாக்கும்.

இயற்கையான மணமூட்டிகளான பச்சைக்கற்பூரம், இறைவனுக்கு அணிவிக்கும் நறுமணம்கொண்ட மலர்கள், சாம்பிராணி மற்றும் ஊதுவத்திகளின் மணங்கள் இணைந்த கோவில்களின் தெய்வீக சூழல்கள், மனதுக்கு அமைதியை அளித்து, நம்மை அந்த சூழ்நிலையில் ஒன்ற வைக்கின்றன.

மனதையும் உடலையும் ஒருங்கிணைக்க, இந்த நறுமணங்களையே வகைப்படுத்தி, மனதின், உடலின் பல்வேறு நிலையிலான வியாதிகளை தீர்க்கலாம், மனம், முகம் மற்றும் உடல் அழகை பொலிவாக்கலாம் என்கிறது, அரோமா தெரபி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Types of Aroma therapy to rejuvenate your body and mind

Types of Aroma therapy to rejuvenate your body and mind
Desktop Bottom Promotion