For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு ஏன் அடிக்கடி நகம் கடிக்கத் தோன்றுகிறது ?

உடலுக்கு கேடு தரும் அதே சமயம் அன்றாடம் மேற்கொள்ளும் ஒரு விஷயம் நகம் கடித்தல், அதனைப்பற்றிய விரிவான தகவல்கள்

|

நெருக்கடியான சில நேரங்களில் நம்மையும் அறியாமல் நகத்தை கடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. மனதில் தோன்றும் எண்ணங்களைப் பொருத்து, இது அன்னிச்சையாக நிகழ்வதால் கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருப்போம்.

இது ஏன் வருகிறது? இதனை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதற்கு சில ஆலோசனைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோர்வு :

சோர்வு :

நகம் கடிப்பதற்கு முக்கிய காரணம் சோர்வு. வேலை அதிகமாக இருக்கும் ஆனால் எதையும் செய்ய மனமில்லாமல் வெறுத்துப் போயிருக்கும் போது நகம் கடிக்கத்தோன்றும்.

பிற காரணங்கள் :

பிற காரணங்கள் :

சோர்வைத் தாண்டி, தோல்வி ஏற்படும் போது, பயப்படும் போது, , தனக்கு விருப்பமில்லாமல் அடுத்தவரின் கட்டாயத்துக்காகச் செயல்படும்போது, தன்னம்பிக்கையை இழக்கும்போது, அதீத கோபம் வரும் போது எனப் பலதரப்பட்ட உளவியல் பிரச்சினைகள் நகம் கடிக்கும் பழக்கத்தைத் தூண்டும்.

கண்ணாடி :

கண்ணாடி :

ரத்தசோகை, மஞ்சள் காமாலை, இதயநோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு, உடலில் பிராணவாயு குறைவு போன்ற பல பிரச்சினைகளை நகங்கள் உடனே வெளிக்காட்டும். நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை உடனேயே நகங்கள் காட்டிடும்.

காரணம் :

காரணம் :

மனரீதியான சில மாற்றங்களினால் நகம் கடிக்கும் பழக்கும் பலருக்கும் வருகிறது. இவர்களுக்கான உளவியல் சிகிச்சை கொடுத்தால் மட்டுமே இதற்கான நிரந்தர தீர்வு காண முடியும்.

கெரட்டின் எனும் புரதத்தால் ஆன நகங்கள் உயிரற்றவை. இறந்துபோன செல்களின் தொகுப்பே நகங்கள். அதனால்தான் அவற்றைக் கடிக்கும்போதும், நகவெட்டியால் வெட்டும்போதும் வலிப்பதில்லை. வலி இல்லை என்பதால்தான், நகம் கடிக்கும் பழக்கம் பலருக்கும் நீடிக்கிறது.

மருத்துவப் பெயர் :

மருத்துவப் பெயர் :

நகம் கடிக்கும் பழக்கத்திற்கு மருத்துவ உலகம் வைத்த பெயர் ‘ஆனிகோஃபேஜியா' (Onychophagia). இது மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும் பழக்கமாக இருப்பதால் ஒ.சி.டி என்ற உளவியல் பிரச்சனையோடு தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது.

குடற்புழு :

குடற்புழு :

மற்ற கெட்டப்பழக்கங்களைப் போலவே நகம் கடிப்பதும் ஒரு கெட்டப்பழக்கமாகவே தான் பார்க்கப்படுகிறது. நகம் கடிப்பதால் உடல் நலனுக்கு தீங்கு உண்டாகும். குடலில் புழுக்கள் தோன்றுவதற்கு நகம் கடிக்கும் பழக்கம் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது.

மஞ்சள் காமாலை, டைபாய்டு காய்ச்சல், வாந்தி பேதி, அஜீரணம், குடல் நோய்கள் போன்றவை ஏற்படவும் இந்தப் பழக்கம் காரணமாய் இருக்கிறது.

என்ன செய்யலாம் :

என்ன செய்யலாம் :

உங்கள் கவனத்தை திசை திருப்பும் வகையில் உங்களுக்கு பிடித்தமான செயல்களை செய்யலாம். எப்போதும் நகங்களை ஒட்ட வெட்டி சுத்தமாக பராமரித்திடுங்கள்.

அழகாக நெயில் பாலிஷ் போட்டுக் கொள்ளலாம். தியானம்,மூச்சுப்பயிற்றி செய்யலாம். தொடர்ந்து நகங்களில் பிளவு,வலி ஏற்பட்டிருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips to avoid nail biting

Tips to avoid nail biting
Story first published: Tuesday, August 29, 2017, 12:44 [IST]
Desktop Bottom Promotion