மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே தவிர்க்க இதைச் செய்தால் போதும்!

Posted By:
Subscribe to Boldsky

நம் உடல் சீராக இயங்க வேண்டுமானால் அதற்கு தேவையான சத்துக்கள் கண்டிப்பாக எடுக்க வேண்டியது அவசியம், சில வகைச் சத்துக்கள் நம் உடல் தானே தயாரித்துக் கொள்ளும் என்றாலும் பல சத்துக்களை நாம் சாப்பிடுகிற உணவிலிருந்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது இருக்கும் விழிப்புணர்வு காரணமாக உடல் எடையை அதிகரிக்ககூடிய

உணவுகள் என்று சொல்லி நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய பல உணவுகளை தவிர்த்து வருகிறோம். இன்னும் சிலவற்றை அளவுக்கு அதிகமாக சேர்த்து வருகிறோம்.

அவற்றில் ஒன்று தான் ப்ரோட்டீன். ப்ரோட்டீன் தேவை தான் ஆனால் அவை அளவுக்கு மீறிச் செல்லும் போது தான் பிரச்சனையே

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன செய்கிறது ப்ரோட்டீன்? :

என்ன செய்கிறது ப்ரோட்டீன்? :

நம் உடலுக்கு ப்ரோட்டீன் மிகவும் அவசியமான ஒன்று. இதில் அமினோ அமிலங்கள்

நிறைந்திருக்கிறது. அதோடு நம் உடலில் பல்வேறு செயல்பாடுகள் ஏற்படுவதற்கு

காரணமாக இருக்கிறது.

அதோடு நம்முடைய வளர்ச்சிதை மாற்றங்களுக்கு தேவையாகஇருக்கிறது.அசைவ உணவுகளில் அதிக ப்ரோட்டீன் இருக்கிறது. சைவ உணவுகளிலும் இருக்கிறது என்றாலும் அசைவ உணகளிலிருந்து கிடைக்கக்கூடிய ப்ரோட்டீன் தான் விரைவாக

கிரகத்துக் கொள்ளப்படுகிறது.

சரியான அளவு :

சரியான அளவு :

எந்த சத்தாக இருந்தாலும் அவை சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம்.உங்களுடைய வயது,எடை,பாலினம், வாழ்வியல் முறை ஆகியவற்றையெல்லாம் கணக்கிட்டு தான் இந்த அளவுகள் நிர்ணயிக்கப்படுகிறது.

சராசரியாக பெண்களுக்கு ஒரு நாளில் 46 கிராம் ப்ரோட்டீன் தேவைப்படும். இதே ஆண்களுக்கு 56 கிராம் வரையிலும் தேவைப்படும்.

அதிகத் தேவை :

அதிகத் தேவை :

உடல் உழைப்பு அதிகம் செய்பவராக இருந்தால் இந்த அளவை விட இன்னும் அதிகமாகஎடுத்துக் கொள்ளலாம். அதோடு கர்பிணிப்பெண்கள்,வயது முதிர்ந்தவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கவனம் :

கவனம் :

ப்ரோட்டீனை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னதும் மூன்று வேளையும் ப்ரோட்டீன் உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடக்கூடாது.

அப்படி நீங்கள் அதிகமாக ப்ரோட்டீன் உணவுகளை எடுத்துக் கொண்டால் அது உங்கள் உடல் எடையைஅதிகரிக்கச் செய்திடும்.

கிட்னி பத்திரம் :

கிட்னி பத்திரம் :

நீங்கள் அளவுக்கு அதிகமான ப்ரோட்டீன் எடுக்கும் போது அவை நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நைட்ரஜனை நீங்கச் செய்திடும்.

அவை கிட்னிக்கு பெரும் பாதிப்பை கொடுத்திடும், அதோடு கிட்னி கற்கள் பாதிப்பு இருப்பவர்களுக்கு இது இரட்டிப்பு வலியை கொடுக்கும் ஏனென்றால் அவை உங்கள் உடலை டீ ஹைட்ரேஷன் ஆக்கிடும்.

இதயம் :

இதயம் :

ப்ரோட்டீன் நம் உடலில் அதிகமாக சேரும் போது அவை நம் இதயத்தினை பாதிக்கும் அபாயமும் இருக்கிறது. ஏன் தெரியுமா? பொதுவாக இது போன்ற ப்ரோட்டீன் டயட் என்று எடுத்துக் கொள்கிறவர்கள் அசைவ உணவுகளைத் தான் நிறைய எடுக்கிறார்கள்.

அசைவ உணவுகளில் அதிகப்படியான சாச்சுரேட்டட் ஃபேட் இருக்கும் அவை நம் ரத்த நாளங்களில் படிந்து இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை கெடுத்திடும்.

புற்றுநோய் :

புற்றுநோய் :

உடலில் ப்ரோட்டீன் அளவு அதிகரித்தால் அவை நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைஅதிகரிக்கச் செய்திடும். அதனால் பாதோஜெனிக் பாக்டீரியா அதிகரிக்கும்.

இவை கேன்சர் செல்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன. அதனால் புற்றுநோய் வருவதற்கு கூட அதிக வாய்ப்புண்டு.

சத்துக் குறைபாடு :

சத்துக் குறைபாடு :

ப்ரோட்டீன் உணவினை மட்டும் தேடித் தேடி எடுப்பவர்களுக்கு பிறச் சத்துக்கள் குறைந்துவிடும் அபாயம் இருக்கிறது. நம் உடலுக்கு எல்லாவிதமான சத்துக்களும் தேவை ஒன்றை அதிகமாகவும் இன்னொன்றினை மிகவும் குறைவாகவும் எடுப்பது நம் உடல் இயக்கத்தினை சீர்குலைத்திடும்.

கேஸ் பிரச்சனை :

கேஸ் பிரச்சனை :

ப்ரோட்டீன் அதிகமாக எடுத்துக் கொள்பவர்கள் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் இதுவும்ஒன்று. ப்ரோட்டீன் எடுத்துக் கொள்ள ஆரம்பித்து அவர்கள் ஃபைபர் உணவுகளை தவிர்த்திடுவார்கள்.

ஃபைபர் உணவினை தவிர்ப்பதால் நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாது. அதனால் செரிமானக்கோளாறுகள், கேஸ் பிரச்சனைகள் ஏற்படும்.

கெட்ட நாற்றம் :

கெட்ட நாற்றம் :

ப்ரோட்டீன் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஏற்படுகிற மிக முக்கிய பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. அது கெட்ட நாற்றத்தினை ஏற்படுத்திடும்.

ப்ரோட்டீன் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவை நம் உடலில் இருக்கும் கொழுப்பினை கரைக்கும். கார்போஹைட்ரேட்டுக்கு பதிலாக கொழுப்பு கரைவதினால் கொஞ்சம் உடல் எடையில் மாற்றங்கள் தெரியும்.

அதோடு உங்கள் வாயிலிருந்து கெட்ட நாற்றம் உருவாகிடும். மவுத் வாஷ், பிரஷ் செய்வதுபோன்று எந்த முயற்சியும் பலனளிக்காது. ப்ரோட்டீன் உணவுகள் எடுத்துக் கொள்வதை குறைத்தல் மட்டுமே பலன் தரும்.

கல்லீரல் :

கல்லீரல் :

அதிகபட்சமான ப்ரோட்டீன் உணவுகள் எடுத்துக் கொள்வதினால் ஏற்படுகிற பாதிப்புகளில் பாதிக்கப்படுகிற நம் உடல் உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று.

அதிக ப்ரோட்டீன் சேர்ந்திடும் போது கல்லீரல் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ப்ரோட்டீனை அமினோ அமிலங்களாக மாற்றிடும். அப்படி மாற்றும் போது நம் உடல் வெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்படும். அதைவிட நம் உடலில் அமிலத் தன்மை அதிகரிக்கும்.

டீ ஹைட்ரேஷன் :

டீ ஹைட்ரேஷன் :

ப்ரோட்டீன் உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்கிறவர்கள் கண்டிப்பாக நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

அதிக ப்ரோட்டீன் எடுத்துக் கொண்டால் கூடுதலாக சேரும் நைட்ரோஜன் குறைக்க அதிக தண்ணீர் தேவைப்படும். அவை கிடைக்காத போது டீ ஹைட்ரேஷன் பிரச்சனை ஏற்படும்.

மூளை சுறுசுறுப்பு :

மூளை சுறுசுறுப்பு :

நம்முடைய மூளை சுறுசுறுப்பாக இயங்கிட குளுக்கோஸ் அவசியமான ஒன்று. ஒரு வேளை நீங்கள் ப்ரோட்டீன் அதிகமாக் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் குளுக்கோஸின் அளவு குறையும்.

இதனால் உங்களது செயல்பாடுகளில் தேக்க நிலை உருவாகும்.எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side Effects Of Too Much Protein

Side Effects Of Too Much Protein
Story first published: Friday, December 22, 2017, 12:59 [IST]