மஞ்சள் காமாலையில் இருந்து தப்பிக்க 7 பாட்டி வைத்தியங்கள்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

மஞ்சள் காமாலை அல்லது ஹெபடைடிஸ் பி ஆகியவை கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளாகும். இந்த நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. கண்களில் இருக்கும் வெள்ளை நிறம் மஞ்சள் நிறமாக மாறுகிறது. சிறுநீரும் மஞ்சள் நிறமாக மாறுகிறது.

அலோபதி மருத்துவத்தினால் மஞ்சள் காமாலையை சரி செய்ய முடிவதில்லை. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நிறைய ஓய்வு எடுத்து கொள்ள வேண்டியது அவசியம்.

Seven Home Remedies to Over Come the Symptoms of Jaundice or Hepatitis

எண்ணெய் உணவு பொருட்களை தவிர்க்க வேண்டியது கட்டாயம். தகுந்த மருத்துகளையும், இந்த பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் சில இயற்கை மருத்துவ முறைகளையும் கடைபிடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேப்பிலை

வேப்பிலை

வேப்பிலையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இது வைரஸை எதிர்த்து போராடும் தன்மை கொண்டுள்ளது. மேலும் வேப்பிலை கல்லீரலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

வேப்பிலையை நன்றாக கழுவி சுத்தப்படுத்தி, மிக்ஸியில் போட்டு 30மிலி ஜூஸாக செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் பாதியளவு தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர வேண்டும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகளவில் அடங்கியுள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடண்டுகள் அதிகளவில் உள்ளது. இது கல்லீரல் சேதமடைவதை தடுக்க உதவுகிறது. நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகுவதால் மஞ்சள் காமாலையில் இருந்து தப்பிக்கலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை

உங்களுக்கு நெல்லிக்காய் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் எலுமிச்சையை பயன்படுத்தலாம். இதிலும் விட்டமின் சி அதிகளவில் அடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி கல்லீரலை பாதுகாப்பதில் இது பெரும் பங்கு வகிக்கிறது. எனவே நீங்கள் எலுமிச்சை ஜூஸையும் பருகலாம்.

அர்ஜுனா மரம்

அர்ஜுனா மரம்

அர்ஜுனா மரம் (Arjuna tree) இதயம் மற்றும் சிறுநீர் பிரச்சனையை போக்குவதில் சிறந்தது. இது கல்லீரலில் உள்ள கொழுப்புகளை போக்க உதவுகிறது. மஞ்சள் காமாலையை போக்க இது ஒரு மிகச்சிறந்த மருந்தாகும்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

அரை டீஸ்பூன் அளவு அர்ஜுனா பவுடரை சிறிதளவு நெய்யுடன் கலந்து பேஸ்டாக செய்து தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வர வேண்டும். இந்த அர்ஜுனா பவுடர், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

மஞ்சள்

மஞ்சள்

சில பகுதி மக்கள், மஞ்சள் அதிகம் சேர்த்துக் கொள்வதால்தான் மஞ்சள் காமாலைக்கு காரணமாகிறது என நினைக்கின்றார்கள். இது மிகவும் தவறு. ஆனால் மஞ்சள், மஞ்சள் காமாலைக்கு மருந்தாக இருக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட், ஆன்டி - மைக்ரோபையல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அடங்கியுள்ளது.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

முக்கால் தேக்கரண்டி மஞ்சளை எடுத்து, ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள தண்ணீரில் கலந்து தினமும் மூன்று முறை குடித்து வர சிறந்த பலன் கிடைக்கும்.

தக்காளி

தக்காளி

தக்காளி கல்லீரலில் உண்டாகும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. புதிய தக்காளி ஜூஸை காலையில் ஒரு டம்ளர் அளவு வெறும் வயிற்றில் குடிப்பது மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

முள்ளங்கி

முள்ளங்கி

முள்ளங்கி கல்லீரலில் ஏற்படும் சேதம் மற்றும் அடைப்புகளை நீக்க உதவுகிறது. முள்ளங்கியின் மேல் இருக்கும் இலைகளை சுத்தமாக கழுவி, அதனை ஜூஸ் செய்து தினமும் ஒருமுறை குடித்தால் பத்து நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Home Remedies to Over Come the Symptoms of Jaundice or Hepatitis

Seven Home Remedies to Over Come the Symptoms of Jaundice or Hepatitis
Story first published: Tuesday, July 18, 2017, 14:12 [IST]
Subscribe Newsletter