For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறுக்கெழுத்துப் போட்டி விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

குறுக்கெழுத்து புதிர் விளையாட்டை விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகளை இக்கட்டுரையில் நாம் காணலாம்.

By Suganthi Ramachandran
|

நீங்கள் குறுக்கெழுத்து புதிர் போட்டி விளையாட விரும்புவீர்களா? அப்படியானால் உங்கள் மூளையின் செயல்திறன் மேம்பட்டு பத்து வருடங்களுக்கு உங்கள் மூளை இளமையாகவே இருக்குமாம் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆய்வின் ரிசல்ட் என்ன சொல்கிறது என்றால் வார்த்தை புதிர்களில் (word puzzles) விளையாடுபவர்கள் அறிவாற்றல் சார்ந்த செயல்களை மேற்கொள்வதிலும் அவர்களின் கவனம், காரணமாய்வு மற்றும் நினைவாற்றல் போன்றவை மேம்படுகிறது. இதனால் டிமென்ஷியா வருவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுகின்றன.

Playing Crosswords Daily May Keep Your Brain Younger

இந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் அவர்களது வயதை காட்டிலும் பத்து வருஷம் இளைமையான மூளையின் செயல்திறனை கொண்டு இருப்பதோடு கிராமிட்டிகல் ரீசனிங் மற்றும் நினைவாற்றல் போன்றவை அவர்களுக்கு அதிகரிக்கிறது என்று சொல்கிறார்கள்.

தொடர்ச்சியான வார்த்தை விளையாட்டு விளையாடுபவர்களுக்கு ஒன்பது அறிவாற்றல் சார்ந்த செயல்களை கொடுத்து அதைச் செய்வதற்கான வேகம் மற்றும் துல்லியத்தையும் கணக்கிட்டு இரண்டு செயல்களையும் ஒப்பிட்டு பார்த்தோம்.

இதில் அவர்களின் கவனம், காரணங்களை ஆய்தல் மற்றும் நினைவாற்றல் போன்றவைகளும் கண்காணிக்கப்பட்டது என்று யுனிவர்சிட்டி ஆஃப் எக்ஸ்டரின் புரபொசர் ஹெயித் வெஸ்நஸ் பிரிட்டனிலிருந்து இதை பற்றிய கருத்துகளை சொல்கிறார்.

இதில் வார்த்தை விளையாட்டில் ஈடுபடுபவர்களின் செயல்திறன் அதிகமாகவே காணப்பட்டது . தொடர்ச்சியான வார்த்தை புதிர்களை தீர்வு காண்பதால் அவர்களால் அறிவாற்றல் சார்ந்த டாஸ்க்கும் நிறையவே எளிதாக செய்ய முடிகிறது என்று வெஸ்நஸ் கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சியை 2017 ல் லண்டனில் உள்ள அல்சீமர் அஸோஷியேசன் இன்டர்நேஷனல் கான்பரன்ஸ் (AAIC) நடத்தியது. இந்த ஆராய்ச்சியில் 17,000 க்கும் அதிகமான 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்கள் கலந்து கொண்டு ஆன்லைனில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.

அணு சக்தி பேரழிவால் மக்களுக்கு ஏற்படும் அதிர்ச்சிகரமான பாதிப்புகள் - ஆய்வு தகவல்கள்!!!

இதனுடன் சேர்த்து நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள மூளைக்கு பயிற்சி அளித்தல், புகைப் பழக்கம் தவிர்த்தல் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல் போன்றவையும் டிமென்ஷியா வருவதற்கான வாய்ப்பை குறைக்கின்றன என்று ஆராய்ச்சியின் முடிவு தெரிவிக்கிறது.

English summary

Playing Crosswords Daily May Keep Your Brain Younger

Playing Crosswords Daily May Keep Your Brain Younger
Story first published: Thursday, July 20, 2017, 16:14 [IST]
Desktop Bottom Promotion