இந்தியாவை ஏமாற்றி வந்த பெப்ஸி, கோலாவின் பித்தலாட்டம் அம்பலம்!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்திய ஆய்வில் இந்திய தரக்கட்டுப்பாடு ஆணையம் குறிப்பிட்ட அளவை விட, 24 மடங்கு அதிக பூச்சிக்கொல்லி சேர்ப்பு சாஃப்ட் ட்ரிங்க்ஸ்-ல் உள்ளதென கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய தரக்கட்டுப்பாடு ஆணையம் (BIS) தர மதிப்பை மீறி 140 மடங்கு அளவில் லிண்டேன் எனும் புற்றுநோய் உண்டாக்கும் பூச்சிக்கொல்லி சேர்க்கப்பட்டு வருகிறது என்பதும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

ஹெப்ட்ச்சலார் எனும் பூச்சிக்கொல்லி வகை இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று. இதுவும் 71% அளவில் சோதனைக்குட்படுத்தப்பட்ட மாதிரிகளில் ஆய்வாளர்கள் கண்டப்படித்துள்ளனர். இதுவும் இந்திய தரக்கட்டுப்பாடு தர மதிப்புக்கு எதிராக சேர்க்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சி.எஸ்.ஈ!

சி.எஸ்.ஈ!

மத்திய அறிவியல் சுகாதார அமைப்பு கடந்த வாரம் வெளியிட்ட புதிய ரிப்போர்ட்ட்டில் இப்போது சந்தையில் விற்கப்படும் பல சாஃப்ட் ட்ரிங்க்ஸ்-ல் அதிகளவில் பூச்சிக்கொல்லி கலப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11 பிராண்டுகளின் 25 வகை பொருட்கள்!

11 பிராண்டுகளின் 25 வகை பொருட்கள்!

இப்போது சந்தையில் பானம் விற்றுக் கொண்டிருக்கும் 11 பிராண்டுகளின் 25 சாஃப்ட் ட்ரிங்க்ஸ் பொருட்களில் பூச்சிக்கொல்லி அளவிற்கு அதிகமாக சேர்க்கப்படுகிறது. முக்கியமாக 12 மாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் கோகோ கோலா, பெப்ஸி நிறுவனங்களின் தொழிற்சாலைகளில்.

கோகோ கோலா, கோல்கட்டா!

கோகோ கோலா, கோல்கட்டா!

கோல்கட்டாவில் இயங்கி வரும் கோகோ கோலா தொழிற்சாலையில் லிண்டேன் எனும் பூச்சிக்கொல்லி 140 மடங்கு அதிகமாக சேர்க்கப்படுகிறது என்றும், இது புற்றுநோய் செல்களை உண்டாக்கும் தன்மை கொண்டது என்பதும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

கோகோ கோலா, தானே!

கோகோ கோலா, தானே!

தானேவில் இருக்கும் கோகோ கோலா தொழிற்சாலையில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இந்திய தரக்கட்டுப்பாடு ஆணையத்தின் தர மதிப்பை மீறி 200 மடங்கு அதிகமாக neurotoxin, Chlorpyrifos சேர்க்கப்படுகிறது.

பாதுகாப்பற்றது, ஆரோக்கியற்றது!

பாதுகாப்பற்றது, ஆரோக்கியற்றது!

இந்த பூச்சிக் கொல்லிகளின் கலப்பு முழுக்க, முழுக்க பாதிகாப்பற்றது, ஆரோக்கியமற்றது என மத்திய அறிவியல், சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

விளம்பரம்!

விளம்பரம்!

சமீபத்தில் தனது விளம்பரத்திலேயே கோகோ கோலா நிறுவனம் இது குழந்தைகளுக்கு உகந்த பானம் அல்ல என குறிப்பிடிருந்தது கவனிக்கத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pesticide Levels in Soft Drinks Too High

Pesticide Levels in Soft Drinks Too High
Please Wait while comments are loading...
Subscribe Newsletter