கீமோதெரபியால் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்க்க இந்த உணவைச் சாப்பிடுங்க!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களின் சிறுநீர்பைக்கு அருகில் இருக்கும் சுரப்பி ப்ரோஸ்டேட். வயதாக இந்த சுரப்பியின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்ப்பட்டு வலி, சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் போன்றவை ஏற்படும். அந்த சுரப்பியில் செல் வளர்ச்சி அபரிதமாக இருந்தால் புற்றுநோய் வருவதற்கு கூட வாய்ப்புண்டு.

ப்ரோஸ்டேட் கேன்ஸரின் ஆரம்ப நிலை அறிகுறி சிறுநீர் தொற்றாகவே இருக்கும். குறிப்பாக வயதான ஆண்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

Must- eat Foods to avoid side affects of chemotherapy

இந்த ப்ரோஸ்டேட் கேன்ஸரை தகுந்த நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் அது மற்ற உறுப்புகளுக்கும் பரவி விட வாய்ப்புண்டு. இதற்கு ரேடியேசன், கீமோதெரபி,அறுவை சிகிச்சை தான் தீர்வாக இருக்கிறது.

இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும். இதனைத் தவிர்க்க ப்ரோஸ்டேட் பாதிக்கப்படாமல் இருக்கவும் ப்ரோஸ்டேட்டில் ஏற்படும் பாதிக்கப்பட்டால் அதற்கு ஆரம்ப நிலையிலேயே சரியாக்க எளிய வழிமுறைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி :

இஞ்சி :

இஞ்சியில் ஆண்ட்டி மைக்ரோபியல் மற்றும் வீக்கத்தை குறைக்கும் தாத்துக்கள் அதிகம் இருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்து வந்தால் புற்றுநோய்க்கான செல் வளர்ச்சியை தடுத்திடலாம்.

கீமோதெரபி எடுத்துக் கொண்டிருப்பவர்களும் இஞ்சிச்சாறு குடிக்கலாம். இது கீமோதெரபியால் ஏற்படும் பக்கவிளைவுகளை குறைத்திடும்.

தக்காளி :

தக்காளி :

தக்காளியில் இருக்கும் ஐகோபென் என்ற தாது சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்டாக செயல்படுலிறது. இது புற்றுநோய் ஏற்படுவதையும், அது மற்ற உறுப்புகளுக்கு பரவாமல் தடுத்துடுகிறது.

மாதுளம் பழம் :

மாதுளம் பழம் :

ப்ரோஸ்டேட் கேன்சரை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.மாதுளையில் இருக்கும் தாதுக்கள் கேன்சர் செல்களை உருவாகாமல் தடுத்திடும். தினமும் மாதுளம்பழச்சாறு குடிக்கலாம்.

பூசணி விதைகள் :

பூசணி விதைகள் :

சிறுநீர் பை மற்றும் ப்ரோஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் தொற்றுக்களை தவிர்க்க பூசணி விதைகளை பயன்படுத்தலாம்.

பூசணி விதையில் அதிகப்படியான ஜிங்க் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்திடும். அதைவிட ப்ரோஸ்டேட் கேன்சருக்கு எதிராக போராடவும் தயாராகிடும்.

விட்டமின் டி :

விட்டமின் டி :

விட்டமின் டி உள்ள உணவு வகைகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் ப்ரோஸ்டேட் கேன்ஸர் வராமல் தடுக்க முடியும். உணவுப் பொருட்களிலிருந்து கிடைக்க கூடிய விட்டமின் டியை விட சூரிய ஒளியிலிருந்து கிடைக்க கூடிய விட்டமின் டி சிறந்தது.

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

க்ரீன் டீயில் இருக்கும் பாலிஃபினால்ஸ் கேன்சர் செல்கள் பெருகாமல் இருக்க உதவிடும். இது கேன்சர் செல்களை அழிக்கவும் செய்யும்.

ஒமேகா 3 அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Must- eat Foods to avoid side affects of chemotherapy

Must- eat Foods to avoid side affects of chemotherapy
Story first published: Saturday, September 9, 2017, 10:01 [IST]
Subscribe Newsletter