கொசுக்களால் இவ்வளவு நோய்கள் பரவுகிறதா?

Posted By:
Subscribe to Boldsky

டெங்கு காய்ச்சல் பயம் நாளெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. எல்லாருக்கும் கொசு மீது ஒரு பயம் வந்துவிட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

அதோடு மழைக்காலம் வந்துவிட்டால் இந்த முறை என்ன காய்ச்சல் பரவுமோ என்கிற தவிப்பு தான் எல்லாருக்கும் இருக்கிறது, ஆனால் இந்த முறை கொஞ்சம் அதிக பீதி உருவாகிவிட்டது. காய்ச்சல் வருவது மட்டுமல்லாமல் உயிர்சேதம் ஏற்படுவது தான் இதற்கு காரணம்.

மனிதர்களை அச்சுறுத்தும் நோய்களை பரப்புவதில் முக்கிய இடம் வகிப்பது கொசுக்கள். டெங்குவைத் தவிர வேறென்ன நோய்கள் எல்லாம் பரப்புகிறது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொசு :

கொசு :

உலகளவில், மக்கள் அறிந்திருக்கும் கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும். அதிலும், சில கொசுக்கள், தங்களது வகையைச் சேராத கொசுக்களையே சாப்பிட்டு விடும். கொசுக்களின் பரிணாம வளர்ச்சி, ஓர் அற்புதமான நிகழ்வு. ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம், 5 நாட்கள் மட்டுமே.

மனிதரின் இரத்தத்தில், கொசு முட்டை உருவாவதற்கு தேவையான எண்ணெய், வெண்புரதம் மற்றும் இதர ஊட்டச் சத்துப் பொருட்கள் இடம்பெறுகின்றன. இதர நேரத்தில், ஆண் கொசு போல், அவை மலரின் தேனையும் தாரவங்களின் சாற்றையும் தான் உண்ணுகின்றன.

பெண் கொசுக்கள், விலங்கு மற்றும் மனிதரின் இரத்தத்தை உறிஞ்சுவதோடு, பல நோய்களையும் பரப்பி விடுகிறது. இது, உலகிலேயே கொடுமையான உயிரிகளில் ஒன்றாக உள்ளது

நுகரும் தன்மை :

நுகரும் தன்மை :

மக்கள் உடலிலிருந்து நுகரும் வேதி மணத்தை நாடும் திறமை கொசுவுக்கு மிகவும் வலிமையாக உள்ளது. கொசுவின் உணர்வறி உறுப்புக்களில், மணங்களையும் வேதிப் பொருட்களையும் உணர்வதற்காக 70க்கு அதிகமான பகுதிகள் இடம்பெற்றுள்ளன. மக்கள் வெளிவிடும் மூச்சு காற்றையும் மனித உடலின் மணத்தையும், கொசுக்கள் உணர்ந்துக் கொள்கின்றன.

டெங்கு வைரஸ் :

டெங்கு வைரஸ் :

‘டெங்கு' (Dengue) எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் என்பதால், இதற்கு `டெங்குக் காய்ச்சல்' என்று பெயர். `டெங்கு' என்ற ஸ்பானிய மொழிச் சொல்லுக்கு, `எலும்பு முறிவுக் காய்ச்சல்' என்று பொருள். அதாவது இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான வலி தோன்றும். அதனால்தான் இப்படி அழைக்கப்படுகிறது.

இந்த வைரஸ் கொசுவால் மட்டுமே பரவுகிறது. ‘ஏடிஸ் எஜிப்தி' ( Aedes Aegypti) எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது, டெங்கு உண்டாகிறது. கொசு கடித்த ஒரு வாரத்துக்குள் நோய் ஏற்படும்.

வெஸ்ட் நைல் வைரஸ் :

வெஸ்ட் நைல் வைரஸ் :

க்யூலெக்ஸ் எனப்படும் கொசுக்களால் இந்த வகை வைரஸ் பரவுகிறது. இது விலங்குகளுக்கு மற்றும் பறவைகளுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் சமீபத்தில் மனிதர்களுக்கும் இந்நோய் பரவுகிறதாம். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எச்சில் மூலமாக இது பரவுகிறது.

அதோடு தாய்க்கு வைரஸ் தாக்கியிருந்தால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் அது பரவிடும்.

இது மனிதர்களின் ரத்த ஓட்டத்தை பாதிக்கும் நோயின் தீவிரத்தை பொறுத்து மூளையையும் பாதிக்கும். இது கோமா நிலைக்கு கூட கொண்டு செல்லும் சில நேரங்களில் மரணம் கூட நிகழலாம்.

மலேரியா :

மலேரியா :

கொசுக்கள் மூலமாக பரவிடும் ப்ளாஸ்மோடியும் விவாக்ஸ் என்ற வைரஸ் மூலமாக இது பரவுகிறது. இந்த கிருமிகள் இரத்தத்தின் வழியாக ஈரலில் இருக்கும் செல்களுக்குள் நுழைந்து பல மடங்காக பெருகிடும்.

ஈரலில் இருக்கும் செல் வெடிக்கும்போது இந்த கிருமிகள் வெளியேறி சிவப்பு அணுக்களைத் தாக்குகின்றன. இதனால் சிவப்பணுக்கள் வெடிக்கும்.

ஒவ்வொரு தடவை சிவப்பு அணுக்கள் வெடிக்கும்போதும் மலேரியாவுக்கான அறிகுறிகள் தெரியவரும்.

யெல்லோ ஃபீவர் :

யெல்லோ ஃபீவர் :

இது மஞ்சள் காமலை நோய் அல்ல. ஆப்ரிக்கா மற்றும் வர அமெரிக்காவில் அதிகமாக ஏற்படும் காய்ச்சல் இது. ஏடிஎஸ் கொசுக்கள் மூலமாக இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. வைரஸ் பரவிய ஏழு நாட்களுக்கு பின்னர் தான் அதன் அறிகுறிகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும்.

காய்ச்சல், அதீத தலைவலி, வாந்தி போன்றவை ஏற்ப்படும். இதுவரை இந்த காய்ச்சலை குணப்படுத்த, தடுக்க எந்த மருந்துகளும் இல்லை. வைரஸ் பெருகுவதை கட்டுப்படுத்தலாம்.

இதனை தடுக்க அந்த வைரஸ் நம்மை தற்காத்துக் கொள்வது மட்டுமே ஒரே வழி. நம்மையும் நம்முடைய சுற்றுப் புறத்தையும் சுத்தமாக பராமரிப்பது இதில் முக்கிய இடம் வகிக்கிறது.

ரிஃப்ட் வேலி ஃபீவர் :

ரிஃப்ட் வேலி ஃபீவர் :

கால்நடைகள் அதிகம் வைத்திருப்பவர்களுக்கு இந்த காய்ச்சல் பரவுகிறது. விலங்குகளை கடிக்கும் கொசுக்கள், மனிதர்களையும் கடிக்கும் போது இந்த வைரஸ் பரவுகிறது. வெளிநாடுகளில் இதன் பாதிப்புகள் தீவிரமாக இருக்கிறது.

விலங்குகள் இருக்கும் இடங்களையும் நாம் சுத்தமாக பராமரிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருக்கும் வைரஸ் தானே இங்கெல்லாம் வராது என்று கூட நம்மால் அசட்டையாக இருந்து விட முடியாது என்பதால் இதில் கொஞ்சம் கவனமாக இருப்பது அவசியம்.

முர்ரே வேலி :

முர்ரே வேலி :

கொசுக்கள் மூலம் பரவிடும் கொடூரமான நோய்களில் ஒன்று முர்ரே வேலி என்சிப்ஹால்ட்டீஸ் . இந்த வைரஸ் தாக்கியதும் மூளை நரம்புகள் முதற்கொண்டு பாதிக்கப்படும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகமுள்ள நபர்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்கள்.

இந்த வைரஸ் தாக்கினால் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று இதன் அறிகுறிகள் வெளிப்படையாக நமக்கு அடையாளப்படுத்தும் வகையில் அவ்வளவாக தெரியாதது தான். வழக்கமாக ஏற்படுவது போல டயர்டாக இருப்பது, லேசான தலைவலி போன்றே இருக்கும்.

சிக்குன்குனியா :

சிக்குன்குனியா :

ஏடிஎஸ் கொசுக்கள் மூலமாக பரவிடும் இன்னொரு நோய் சிக்குன் குனியா. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நோய் தமிழகத்தில் மிக வேகமாக பரவி ஓர் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது.

கொசுக்கள் மூலமாக பரவிடும் இந்த வைரஸ் தாக்கினால் கை கால் மூட்டு வலி, தலைவலி,வாந்தி, போன்றவை ஏற்படும். சாதரண காய்ச்சல் தானே என்று நாம் எதுவும் அஜாக்கிரதையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நோயின் ஆரம்ப நாட்களில் சிகிச்சை பெறுவது மிகவும் அவசியமாகும்.

ஜப்பானிஸ் என்செப்ஹால்ட்டிஸ் :

ஜப்பானிஸ் என்செப்ஹால்ட்டிஸ் :

கொசுக்கள் மூலமாக பரவிடும் இந்நோய் மூளையை அதிகமாக பாதிக்கிறது. ஆசியாவின் பல நாடுகளில் இந்த நோய் பாதிப்பு இருக்கிறது. இந்த நோய் வராமல் தடுக்க தடுப்பூசி கொடுக்கப்படுகிறது.

ஓரளவுக்கு இது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

வெஸ்ட்டர்ன் இக்வைன் என்செப்ஹல்ட்டீஸ் :

வெஸ்ட்டர்ன் இக்வைன் என்செப்ஹல்ட்டீஸ் :

இந்த வைரஸ் கிருமி முதன் முதலாக 1930 ஆம் ஆண்டு கனடா நாட்டில் கண்டுபிடிப்பட்டது. ஆரம்ப காலங்களில் இந்த வைரஸ் பாதிப்பினால் கொத்து கொத்தாக் இறந்தார்கள். தற்போது இக்கிருமி பரவாமல் தடுக்க தடுப்பூசி வழங்கப்படுகிறது.

இந்த வைரஸ் மனிதர்களையும்,குதிரைகளையும் அதிகம் தாக்குகிறது.

ரோஸ் ரிவர் ஃபீவர் :

ரோஸ் ரிவர் ஃபீவர் :

கொசுக்கள் மூலமாக பரவிடும் இந்நோய் பாதிப்பினால் 55 சதவீதம் முதல் 75 சதவீத மக்கள் அரை பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் எந்த அறிகுறியும் வெளியில் தெரியாது.

ஆரம்ப நாட்களில் தெரியாது வைரஸ் உடல் முழுவதும் பரவிய பின்னரே கொஞ்ச கொஞ்சமாக அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். காய்ச்சல், தசை வலி, சருமம் தடித்துப் போகுதல்,களைப்பு, ஆகியவை இருக்கும். வைரஸ் பரவுவது குறைக்கப்பட்டாலும் இதன் பல மாதங்கள் வரை நீடிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

List of diseases that spreaded by mosquitoes

List of diseases that spreaded by mosquitoes
Story first published: Friday, October 13, 2017, 16:54 [IST]