Latest Updates
-
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம்
உங்க மணிக்கட்டு இதுமாதிரி இருக்கா? நேரம் தாமதிக்காம உடனே டாக்டர பாருங்க!!!
உங்களுடைய மணிக்கட்டு எலும்பு வீங்கியது போல தெரிகிறதா? அதற்கான காரணம் என்ன என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
உடலில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் ஏதேனும் நேர்மறை, எதிர்மறை தாக்கத்தை தான் உண்டாகின்றனர். ஆனால், அதை நாம் சரியாக புரிந்துக் கொள்கிறோமா என்பது தான் நமது ஆரோக்கியம் அடங்கி இருக்கிறது.
அந்த வகையில் மணிக்கட்டில் ஏற்படும் வீக்கம் எதனால்? இது வெளிப்படுத்தும் விஷயம் என்ன? என்பது பற்றி இங்கு காணலாம்...

மணிக்கட்டு வீக்கம்!
சிலருக்கு மணிக்கட்டின் மேற்பகுதி அல்லது கீழ் பகுதியில் வீக்கம் இருக்கும். இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், இது சில சமயங்களில் அபாயகரமான பிரச்சனையாக மாறலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Image Courtesy

மேற்பகுதி வீக்கம்!
மணிக்கட்டின் மேற்பகுதியில் முண்டு போன்று வீக்கம் ஏற்படுவதை நரம்பணுத்திரள் வீக்கம் அல்லது நரம்பு முடிச்சு வீக்கம் என்கின்றனர். இது போன்ற வீக்கம் மணிக்கட்டின் மேல், கீழ் புறங்களில் அல்லது விரல் நடுவே கூட ஏற்படுகிறது. சிலர்க்கு பாதங்களில் கூட ஏற்படும்.
Image Courtesy

ஏன்?
ஆங்கில மருத்துவத்தில் இது ஏன் ஏற்படுகிறது என் குறிப்பட்ட தெளிவான காரணம் ஏதும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது.

பெரியளவில் காணப்பட்டால்...
ஒருவேளை மணிக்கட்டில் ஏற்படும் இந்த வீக்கம் பெரியளவில் காணப்பட்டால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
இது, சிலருக்கு சிறியளவில் தான் வலியை ஏற்படுத்தும். சிலருக்கு இந்த வலி மணிக்கட்டுப் பகுதியில் மட்டும் இருக்கும், சிலருக்கு விரல்கள் வழியே வலி ஊடுருவவது போன்ற உணர்வை அளிக்கும்.

மருத்துவ முறை!
ஆங்கில மருத்துவத்தில் இந்த வீக்கத்தில் இருக்கும் திரவ சுரப்பியை நீக்க, வீக்கத்தை குறைக்க அறுவை சிகிச்சையை தான் கையாள்கின்றனர். இதை Gangilonectomy என்கின்றனர். ஆனால், இந்த சிகிச்சைக்கு பிறகும் வீக்கம் மீண்டும் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஹோமியோபதி!
ஹோமியோபதி மருத்துவத்தில் அறுவை சிகிச்சைக்கு பதிலாக குறிப்பிட்ட சில பிரத்தியோக மருந்துகள் மூலம் நிரந்தர தீர்வுக் காண முடியும் என கூறுகின்றனர். இதனால், வீக்கத்தை முழுமையாக குறைக்கலாம் என்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருந்துகள்!
இதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை நீங்களாக மற்றவர் சொல்லி பின்பற்ற வேண்டாம். தகுந்த மருத்துவரிடம் பரிசோதனை செய்து. கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications
