ஐம்புலன்களைத் தாண்டி மனிதர்களுக்கு இருக்கும் இந்த புலன்களை பற்றித் தெரியுமா!

Posted By:
Subscribe to Boldsky

மனிதர்களுக்கு ஐம்புலன்கள் இருக்கும் என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது, சில ஆராய்ச்சிகளுக்கு பிறகு ஒன்பது புலன்கள் இருக்கிறது என்றார்கள். ஆனால் மனிதர்களுக்கு 21 புலன்கள் இருப்பதாக ஆராய்சியாளர்களர்கள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மூளையில் கிடைக்கப்பெறும் தகவல்களை வைத்து தான் இந்த புலன்கள் எல்லாமே இயங்குகிறது. மனிதர்களுக்கு பார்ப்பது,கேட்பது, நுகர்வது, பேசுவது, உணர்வது தவிர வேறு என்ன புலன்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தெர்மோசெப்ஷன் :

தெர்மோசெப்ஷன் :

மனிதர்களால் சூட்டையும் குளிரையும் பிரித்துணர முடியும். உணர்சியில் வேறுபாடு இருந்தால் அதனை உணர்வார்கள்.

தேவை :

தேவை :

உடலுக்கு தேவைப்படும் போது தண்ணீர் தாகம், பசியுணர்வு உண்டு. இந்நேரத்திற்கு சாப்பிட வேண்டும். சாப்பிட்ட அளவு போதும் என்ற நிறைவான உணர்வு தரும்.

தேவை என்பதும் போதும் என்பதையும் நினைவுப்படுத்தும்.

கீமோரிசிப்டார் :

கீமோரிசிப்டார் :

மூளையில் மெடுலா என்னும் இடத்தில் வருகின்ற ரத்த ஓட்டத்திற்கு ஏற்ப இந்த உணர்வு மேலோங்கும். சில சமயங்களில் ஹார்மோன் மாற்றங்கள், எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் கூட இந்த உணர்வு வரலாம். இந்த உணர்வு மேலோங்கினால் வாந்தி வருவது போலத் தோன்றும்.

ஸ்ட்ரெச் ரெசிப்டார் :

ஸ்ட்ரெச் ரெசிப்டார் :

இது உள்ளே தோன்றிடும் உணர்வு இதன் அறிகுறிகள், விளைவுகள் மட்டுமே நம்மால் உணர முடியும். குடல், வயிறு,சிறுநீர்ப்பை,போன்ற இடங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் அஜீரணம் ஆகாமல் இருந்தால் அதனை உணர்த்த இந்த ஸ்ட்ரெச் ரெசிப்டார் தேவை.

அதன் அறிகுறியாக நமக்கு வயிற்று வலி தெரியும்.

ஈக்வலிப்ரியோசெப்சன் :

ஈக்வலிப்ரியோசெப்சன் :

இந்த நம் உடலை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று உதவிடுகிறது. புவியீர்ப்பு விசைக்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்பவும் நம் உடல் நாம் மூளை இடுகின்ற கட்டளைகளை கேட்டபடி நடக்க இந்த உணர்வு பயன்படுகிறது.

நாசிசெப்ஷன் :

நாசிசெப்ஷன் :

இதனை ஒரு விதத்தில் வலி என்று குறிப்பிடலாம். எளிதாக வலி என்று சொல்வதை விட வலியை நம்மால் இது எத்தகைய வலி என்பதை பிரித்து உணர வைக்கும். சருமத்தில், எலும்பில் உள்ளுறுப்புகளில் என்று நாம் வலியை பிரித்து உணர முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Humans have 21 senses Other than five Senses

Humans have 21 senses Other than five Senses
Story first published: Tuesday, September 12, 2017, 16:40 [IST]
Subscribe Newsletter