‘பயமுறுத்தும்’ காய்ச்சல் வந்தால் சாப்பிட வேண்டியவை!

Posted By:
Subscribe to Boldsky

பருவக் காலங்கள் காய்ச்சல் வருவது சகஜம். இப்போதெல்லாம் காய்ச்சல் தானே என்று அஜாக்கிரதையாக இருந்தால் அவையே பெரும் வியாதிகளை இழுத்து வந்துவிடுகிறது. மற்ற நேரங்களை விட காய்ச்சலின் போது இன்னும் அதீத கவனத்துடன் இருக்க வேண்டும்.

நமக்கு தேவையான நியூட்ரிஷியன்களை எடுத்துக் கொள்ள வேண்டும். விரைவாக செரிக்க கூடிய அதே சமயம் சத்து நிறைந்த உணவுகள் தேவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீர் :

தண்ணீர் :

அதிகமான தண்ணீர் பருக வேண்டும். ஏனென்றால் உடலில் தண்ணீர் பற்றாகுறையால் டீஹைட்ரேஷன் ஏற்பட்டிருக்கும் இதனால் வைரஸ்,பாக்டீரியா தொற்று எளிதாக நடக்கும். தண்ணீர் அதிகமாக குடித்தால் இவை நேராது.

எப்போதும் உடலை டீ ஹைட்ரேஷன் ஆகிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை :

சர்க்கரை :

காய்ச்சல் இருக்கும் போது செயற்கை குளிர்பானங்கள்,செயற்கையான சுவையூட்டிகள் நிறைந்த உணவுகள், பாக்கெட் உணவுகள்,சோடா போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்.

இதனைச் சாப்பிடுவதால் வெள்ளையணுக்கள் பாதிக்கப்பட்டு நோய்த் தொற்று ஏற்படும்.

காய்கறி :

காய்கறி :

பச்சையான காய்கறிகளை சாப்பிடுவதற்கு பதிலாக வேகவைத்த, சமைத்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். சூப், பழச்சாறு போன்றவை குடிக்கலாம்.

அதிக காய்ச்சல் :

அதிக காய்ச்சல் :

அதிக காய்ச்சல் இருந்தால் எலுமிச்சை,திராட்சை, ஆரஞ்சு இவற்றில் ஏதேனும் ஒன்றின் சாறு எடுத்து பாதிக்குப் பாதி தண்ணீர் கலந்து குடிக்கலாம். சர்க்கரை, ஐஸ் எதுவும் கலக்காமல் குடிப்பதே நன்று.

இதனை குடித்து வந்தால் டெம்ப்பரேச்சர் குறையும்.

காலை உணவு :

காலை உணவு :

காலை உணவாக எதாவது ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சூடான பால் சர்க்கரை சேர்க்காமல் தேன் கலந்து குடிக்கலாம். பாதாம் உட்பட நட்ஸ் இரண்டு சாப்பிடலாம்.

எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவை தவிர்த்திடுங்கள். வயிறு முட்ட சாப்பிடுவதையும் தவிர்த்திடுங்கள்.

மதிய உணவு :

மதிய உணவு :

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவினை மதிய உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். செரிமானக் கோளாறுகளை தவிர்க்க பிரவுன் பிரட் சாப்பிடலாம். காய்ச்சல் இருக்கும் நேரங்களில் உடலுக்கு ப்ரோட்டின் தேவையாய் இருக்கும்.

அதனால் வேக வைத்த முட்டை சாப்பிடலாம். இவை ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகப்படுத்தும்.

இரவு உணவு :

இரவு உணவு :

குறைந்த அளவிலான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். மசாலா அதிகம் சேர்க்காத, சாலட்,பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவை எளிதில் ஜீரணமாகும். உணவு சூடாக சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods must take during fever

Foods must take during fever
Story first published: Tuesday, September 19, 2017, 13:25 [IST]