தினமும் கொஞ்சம் துளசியும், மிளகும் சாப்பிட்டா, புற்றுநோய் வராதுனு தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

பெண்களை தாக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த மார்பக புற்றுநோய்...! இந்த மார்பக புற்றுநோய் என்பது பெண்களுக்கு ஒரு சவாலான பிரச்சனையாகவே இருக்கிறது. இந்த மார்பக புற்றுநோயானது சில விஷயங்களை சார்ந்து இருக்கிறது. இது வயது, குடும்ப வரலாறு, மரபணு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், பாலினம் போன்றவற்றை பொருத்து வருகிறது.

foods to control breast cancer

மேலும் இது நமது வாழ்க்கை முறை சார்ந்தும் வர வாய்ப்புகள் உள்ளது. புகைப்பிடித்தல், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடல் எடை அதிகமாக இருப்பது, டயட்டில் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களாலும் இந்த மார்பக புற்றுநோய் 30 - 40 சதவீதம் அளவிற்கு வர வாய்ப்புகள் உள்ளது.

மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிக்க நாம் தினசரி உடற்பயிற்சி, மற்றும் புகைப்பழக்கங்கள் இல்லாமல் இருப்பதோடு மட்டுமின்றி நீங்கள் ஒரு சில உணவுகளையும் உங்களது டயட்டில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. காய்கறிகள், பழங்கள்

1. காய்கறிகள், பழங்கள்

பல வகையான வண்ண வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களை கண்டிப்பாக உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இது உங்களது உடலுக்கு மிகுந்த நன்மையளிக்கிறது.

2. அத்தியவசிய சத்துக்கள்

2. அத்தியவசிய சத்துக்கள்

நீங்கள் சாப்பிடும் உணவுகளில் நிச்சயமாக நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த நார்ச்சத்துக்கள் உங்களுக்கு முழு தானிய உணவுகள், பீன்ஸ் போன்ற உணவுகளில் இருந்து கிடைக்கிறது.

3. பால் பொருட்கள்

3. பால் பொருட்கள்

நீங்கள் குறைந்த கொழுப்பு உடைய பாலை தினமும் பருகலாம். அதுமட்டுமின்றி பால் பொருட்களையும் உங்களது உணவில் முக்கியமாக சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

4. சோயா பின்ஸ்

4. சோயா பின்ஸ்

சோயா பின்ஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது. நீங்கள் சோயா பின்ஸ் சம்பந்தப்பட்ட உணவு பொருட்களை அடிக்கடி உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பலன் தரும்.

5. விட்டமின் டி

5. விட்டமின் டி

உங்களது டயட்டில் விட்டமின் டி ஊட்டச்சத்து உள்ள உணவுகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டியது அவசியமாகும். இந்த உணவுகளை உண்பதன் மூலமாக உங்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

6. காய்கறிகள்

6. காய்கறிகள்

உங்களது உணவில் அடிக்கடி நீங்கள் முக்கியமாக அடந்த நிறம் உள்ள காய்கறிகள், பச்சை நிறமுள்ள காய்கறிகள் மற்றும் கீரைகளை கட்டாயமாக சேர்த்துக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

7. மிளகு

7. மிளகு

மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

8. தக்காளி

8. தக்காளி

தக்காளியில் மிக மிக அதிக அளவில் உள்ள பொருள் ‘லைகோபீன்' என்ற சத்துதான். உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும், புற்றுநோய் பாதிப்படைந்துள்ள திசுக்களுடன் போராடவும் ‘லைகோபீன்' உடலுக்கு மிக அவசியமாகிறது. எனவேதான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்காளி உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது. எனவே நீங்கள் தக்காளியை உங்களது உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

9. கத்தரிக்காய்

9. கத்தரிக்காய்

கத்தரிக்காய் நமது ஊர் பகுதிகளில் விலை மலிவாக கிடைக்கும் ஒன்று தான். இதில் தக்காளிக்கு நிகரான சத்துக்கள் உள்ளன. இது புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மையையும் கொண்டுள்ளது. எனவே நீங்கள் அடிக்கடி கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

10. சிட்ரஸ் பழங்கள்

10. சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்ச் போன்ற பழங்களை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை ஜூஸாகவும் நீங்கள் பருகலாம். ஆனால் அசுத்தமான ரோட்டு கடைகளில் இந்த ஜூஸை வாங்கி பருகி உங்களது ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

11. பூண்டு

11. பூண்டு

பூண்டு உங்களது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் பூண்டை உணவில் சரியான அளவு சேர்த்துக் கொள்வதால் நீங்கள் குடல் புற்றுநோய், கோலன் கேன்சர், மார்பக புற்றுநோய் போன்ற பல புற்றுநோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

12. க்ரீன் டீ

12. க்ரீன் டீ

க்ரீன் டீயில் அதிகளவு ஆண்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளது. இவை செல்கள் சேதமடைவதை தடுக்கின்றன. க்ரீன் டீ ஆனது கேன்சரில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. மேலும் க்ரீன் டீ ஆனது உங்கள் உடலில் உள்ள கடுமையான நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

13. மஞ்சள் :

13. மஞ்சள் :

மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி அறியாதவர்கள் யாரும் இல்லை. மஞ்சள் உடலிற்கு உள் மற்றும் வெளியில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. மஞ்சள் கேன்சரின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது. கேன்சர் செல்களை விரைவாக வளருவதை மஞ்சள் தடுக்கிறது. மஞ்சளின் நன்மைகளில் மிக முக்கியமான ஒன்று என்னவென்றால், இது கேன்சரை தடுக்க பயன்படுகிறது என்பது தான்.

14. பிரவுன் அரிசி

14. பிரவுன் அரிசி

முழு தானிய உணவுகளில் பிரவுன் அரிசியில் அதிகளவு அளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் உடலுக்கு தேவையான அளவு விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இந்த அரிசியை நீங்கள் எப்படி சாப்பிட்டாலும் இது உங்களது ஆரோக்கியத்திற்கு நன்மையை தரும்.

15. மாதுளை

15. மாதுளை

மாதுளை மருத்துவர்களாலேயே மார்பக புற்றுநோயில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள பரிந்துரைக்கப்படும் ஒரு பழமாகும். மாதுளையில் அதிகளவில் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளது. இது கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடை செய்கிறது. இந்த மாதுளை, நீங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு அத்தியாவசியமான பழமாகும்.

16. துளசி

16. துளசி

துளசி பழங்காலமாக பல மருத்துவ பயன்களை கொண்டது என நிரூபிக்கப்பட்டதாகும். இந்த துளசியை இந்துக்கள் தங்களது வீட்டில் வைத்து தெய்வமாக வணங்குவதும் உண்டு. கடந்த 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியானது துளசி மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

foods to control breast cancer

foods to control breast cancer
Story first published: Wednesday, November 22, 2017, 13:36 [IST]