For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவதால் இந்த நோய் வருமா? அதிர்ச்சியான எச்சரிக்கை!!

பால் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்வதால் பார்கின்ஸன் நோய் ஏற்படுவதாக சமீப ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது. அதனைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்.

By Divyalakshmi Soundarrajan
|

உறைந்த யோகர்ட் அல்லது கொழுப்பு குறைவான பால் பொருட்களை அதிகமாக சாப்பிடும் போது பார்கின்சன் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஹாட்வார்ட் பல்கலைகழகத்தின் சான் ஸ்கூல் ஆப் ஹெல்த் வெளியிட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் உறைந்த யோகர்ட் சாப்பிடாதவர்களை விட, ஒரு நாளைக்கு மூன்று முறை உறைந்த தயிர் சாப்பிடுபவர்களுக்கு தான் பார்கின்சன் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

Eating froyo could raise the risk of developing Parkinson’s: study

இதுக்குறித்து 25 வருடங்களாக, 807,36 பெண்கள் மற்றும் 48610 ஆண்களை வைத்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் 2 வருடங்களுக்கு ஒரு முறை ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட கேள்விகளும், 4 வருடங்களுக்கு ஒரு முறை உணவு பழக்கம் சம்மந்தப்பட்ட கேள்விகளும் கேட்கப்பட்டது. ஆய்வின் முடிவில், 1036 பேருக்கு பார்கின்சன் நோய் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

கொழுப்பு குறைந்த பால் பொருட்களை சாப்பிடாதவர்களை விட, ஒரு நாளைக்கு 3 முறை கொழுப்பு குறைந்த பால் பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு 34 சதவிகிதம் பார்கின்சன் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், கொழுப்பு குறைந்த பால் பொருட்கள் நோய்களை ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்றும், கொழுப்பு நிறைந்த பால் பொருட்களை சாப்பிடுவதற்கும் பார்கின்சன் நோய்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதாகும்.

ஆனால் இதுவரை நடத்தப்பட்ட பார்கின்சன் நோய் மற்றும் பால் பொருட்கள் சம்பந்தப்பட்ட ஆய்வுகளில் இந்த ஆய்வு தான் மிகப் பெரியது என்று, ஆய்வின் ஆசிரியர் கேத்ரின் ஹியூஸ் கூறுகிறார். இந்த ஆய்வின் முடிவில் கொழுப்பு குறைந்த பால் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதால் பார்கின்சன் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாவதற்கு இந்த ஆய்வு ஒரு சான்றாக உள்ளது. மேலும், இந்த கொழுப்பு குறைந்த பால் பொருட்களால் ஏற்படக்கூடிய நோயானது மாறுதலுக்கு உட்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த குறிப்பிடும் மற்றொரு தகவல் என்னவென்றால், உறைந்த தயிர் மற்றும் கொழுப்பு குறைந்த பால் பொருட்கள் நோய் வாய்ப்புகளை அதிகரித்தாலும், அந்த வாய்ப்புகளும் குறைவு தான் என்று ஹியூஸ் சொல்கிறார். தினமும் 3 முறை கொழுப்பு குறைந்த பால் பொருட்களை சாப்பிட்ட 5830 பேரில் 1 சதவிகித பேருக்கு மட்டுமே பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இந்த ஆய்வில் தெரிகிறது.

பார்கின்சன் நோயால் உலகில் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பார்கின்சன் டிசீஸ் ஃபவுன்டேசன் தெரிவித்துள்ளது. இந்த நோய்க்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பன்றியின் மூளை செல்கள் பயன்படுத்தி அல்லது வேறு ஏதாவது வகையில் இந்த நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளி விதையும்... அதன் ஆழமான ஆரோக்கிய பலன்களும்...

English summary

Eating froyo could raise the risk of developing Parkinson’s: study

Eating froyo could raise the risk of developing Parkinson’s: study
Story first published: Friday, June 16, 2017, 17:33 [IST]
Desktop Bottom Promotion