Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
சிறுநீர் எந்த காரணங்களுக்கு எல்லாம் ரொம்ப கப்பு அடிக்கும்-ன்னு தெரியுமா?
இங்கு ஒருவருக்கு சிறுநீர் எந்த காரணங்களுக்கு எல்லாம் துர்நாற்றத்தை உண்டாக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது.
சில நேரங்களில் சிறுநீர் கடுமையான துர்நாற்றத்துடன் இருக்கும். பலருக்கும் சிறுநீர் எந்த காரணங்களுக்கு எல்லாம் துர்நாற்றம் வீசும் என்று தெரியாது. சொல்லப்போனால், சிறுநீரில் அதிகளவு கழிவுப் பொருட்கள் மற்றும் டாக்ஸின்கள் இருந்தால் துர்நாற்றம் வீசும்.

அதேப் போல் டயட், குடிப்பழக்கம், தொற்றுகள் போன்றவையும் சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும். ஒருவருக்கு 2-3 நாட்களுக்கு மேல் சிறுநீர் கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
இக்கட்டுரையில் ஒருவருக்கு சிறுநீர் எந்த காரணங்களுக்கு எல்லாம் துர்நாற்றத்தை உண்டாக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உடல் வறட்சி
சில சமயங்களில், உடல் வறட்சியும் சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும். போதிய அளவு நீரைப் பருகினால், இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். எப்போது கழிவுப் பொருட்கள் நீர்க்கப்படுகிறதோடு, அப்போது சிறுநீர் துர்நாற்றமும் நீங்கும்.
சிறுநீரில் முக்கியமாக தண்ணீர் உள்ளது. அதோடு, உப்பு மற்றும் குறிப்பிட்ட கெமிக்கல்களும் இதில் உள்ளது. எப்போது அந்த கெமிக்கல்கள் சிறுநீரில் அதிகமாகிறதோ, அப்போது சிறுநீர் கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கும்.

சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் இருந்தாலும், சிறுநீர் துர்நாற்றம் வீசும். சர்க்கரை நோய் இருந்தால், கல்லீரலில் கீட்டோன்களின் அளவு அதிகரித்து, அதன் காரணமாக சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும்.

சிறுநீரக கற்கள்
சிறுநீரக கற்களும் சிறுநீர் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். யார் ஒருவர் சிறுநீரக கற்களால் அடிக்கடி அவஸ்தைப்படுகிறார்களோ, அவர்களது சிறுநீரும் துர்நாற்றத்துடன் இருக்கும்.

கல்லீரல் நோய்கள்
கல்லீரலில் தொற்றுகள் இருந்தாலும், அது துர்நாற்றத்தை உண்டாக்கும். எப்போது கல்லீரல் டாக்ஸின்களை வெளியேற்ற முடியாத அளவில் செயலிழக்கிறதோ, அப்போது சிறுநீரில் அம்மோனியாவின் அளவு அதிகரித்து, சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும்.

டயட்
சில உணவுகள் மற்றும் குறிப்பிட்ட மருந்துகளும் சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும். அதிலும் அஸ்பாரகஸை தொடர்ச்சியாக 2 நாட்கள் சாப்பிட்டால், சிறுநீர் துர்நாற்றம் வீசும். அதோடு, டயட்டில் வைட்டமின் பி6 அதிகளவில் இருந்தாலும், சிறுநீர் துர்நாற்றம் வீசும். புரோட்டீன் அதிகம் நிறைந்த டயட்டுகளும் சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும்.

சிறுநீரக நோய்கள்
சிறுநீரகங்கள் சிறுநீரில் உள்ள அம்மோனியாவின் அளவைக் கட்டுப்படுத்த கடுமையாக வேலை செய்யும். எப்போது சிறுநீரகங்கள் பலவீனமாகிறதோ, சிறுநீரில் அசிட்டிக் அளவு அதிகரித்து சிறுநீர் துர்நாற்றத்துடன் இருக்கும்.



Click it and Unblock the Notifications
