மூட்டு வலியில் இருந்து தப்பிக்க இந்த விஷயங்களை எல்லாம் செய்யுங்க!

Written By:
Subscribe to Boldsky

இன்றைய சூழ்நிலையில் மூட்டு வலியானது பலரையும் பாதிக்கும் ஒன்றாக உள்ளது. இந்த மூட்டு வலியால், சிறிது தூரம் நடக்கவோ, படிகளில் ஏறவோ அல்லது இறங்கவோ கூட சிரமமாக இருக்கும். இந்த மூட்டு வலியால் தனது அன்றாட வேலைகளை செய்வதற்கு கூட சிரமப்படுவார்கள்.

சிலர் மூட்டுவலி குணமானால் போதும் என்று எங்கு எல்லாமோ சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இந்த மூட்டு வலி மட்டும் குறைந்தபாடு இருக்காது. நீங்கள் மூட்டு வலி வராமல் இருக்கவும், மூட்டுவலியை சரி செய்யவும் என்னென்ன செய்யலாம் என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

பாலில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது. எனவே பால் குடிப்பது எலும்புகளுக்கு நன்மை தரக்கூடியது. இதனால், எலும்புக்குத் தேவையான சக்தி கிடைக்கும். மேலும், பாலில் வைட்டமின்கள், புரதம் மற்றும் பொட்டாசியம் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான எலும்புக்கு உதவிபுரிகின்றன. தயிர், மோர் போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் டி

வைட்டமின் டி

எலும்புகள் வலிமையாக இருக்க கால்சியம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு வைட்டமின் டி-யும் முக்கியமாக உள்ளது. உடல் கால்சியத்தை ஏற்க வைட்டமின் டி மிகவும் முக்கியமாக உள்ளது. வைட்டமின் டி, நம் உடலில் உள்ள தசைகள் வலிமை பெறுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. தினமும் காலை மற்றும் மாலை வேளையில் அரை மணி நேரம் சூரிய ஒளி நம் சருமத்தில் பட்டாலே, வைட்டமின் டி கிடைத்துவிடும்.

மீன்

மீன்

அசைவ உணவுகளில் மிகவும் ஆரோக்கியமானது மீன் ஆகும். மீன் சாப்பிடுவதாலும் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். மீனில் வைட்டமின் பி மற்றும் இ, கால்சியம், இரும்பு, மக்னீசியம் அடங்கியுள்ளன. இதனால் எலும்புகள் ஆரோக்கியமாகிறது.

பேரீச்சை

பேரீச்சை

எலும்பு வலிமையாக இருக்க, பேரீச்சம் பழம் சாப்பிடுங்கள். பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்தும், பாஸ்பரஸும் உள்ளது. எனவே பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் எழும்புகள் வலிமையடைகிறது..

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சுப் பழத்தில், கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. இதுவும், எலும்புக்கு வலிமை தரும். வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுவதாலும், எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும்.

முட்டை

முட்டை

முட்டை உங்களது எலும்புகளுக்கு வலிமையளிக்க கூடியது ஆகும். இந்த முட்டையில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் எலும்பு மற்றும் தசைகளை வலிமையாக்குகின்றன. அசைவ உணவுகள் உட்கொள்வதாலும் எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வது எலும்புகளுக்கு வலிமை தரும். குழந்தைகளை சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்ய பழக்குவதால் அவர்களது எலும்புக்கு நல்ல வலிமை கிடைக்கும். எலும்பின் அடர்த்தி அதிகரிக்க, எலும்புகளுக்கு அவ்வப்போது உடற்பயிற்சி, உடல் உழைப்பு என வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

உடல் எடை

உடல் எடை

உடல் எடை அதிகமாக இருப்பது எப்போதுமே ஆபத்தான ஒன்றாகும். எனவே எலும்புகளின் வலிமையை அதிகரிக்க நீங்கள் உடல் எடையை சரியான முறையில் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். அதிக உடல் எடை எலும்பு மூட்டுக்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி, தேய்மானத்தை விரைவுபடுத்தும். உடல் பருமனானவர்கள் எடையைக் குறைப்பதன் மூலம் முதுகெலும்பு, கால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

பாட்டில் பானங்கள்

பாட்டில் பானங்கள்

கார்பனேட்டட் குளிர் பானங்களில் அளவுக்கு அதிகமான பாஸ்பேட் இருக்கும். இத்தகைய பானங்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

எலும்பு பரிசோதனை

எலும்பு பரிசோதனை

35 வயதைக் கடந்த பெண்களும், 40 வயதைக் கடந்த ஆண்களும் ஆண்டுக்கு ஒரு முறையாவது எலும்பு அடர்த்தி எவ்வளவு உள்ளது என்பது பற்றிய பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். இதனால், பாதிப்பை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து சரிசெய்ய முடியும்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

புகை பிடிக்கும்போது, உருவாகும் ரசாயனங்கள் எலும்பில் உள்ள கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் வெளியேறும் செயலை விரைவுபடுத்துகின்றன. அதேபோல, ஆல்கஹாலும் கால்சியத்தை வெளியேற்றுகிறது. இதைத் தவிர்ப்பது எலும்பு மற்றும் எலும்பு மூட்டுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

எலும்பு தேய்மானமாக காரணம்

எலும்பு தேய்மானமாக காரணம்

கால்சியம், பாஸ்பேட் போதுமான அளவு இல்லை என்றால், எலும்புகள் தேய்மானம் அடையும். சிறுநீரகப் பாதிப்பு இருப்பவர்களுக்கும் எலும்பு விரைவில் தேய்மானம் அடையும். உடல் உழைப்பு குறைவாக இருந்தாலும், எலும்பின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும்.

உணவுகள்

உணவுகள்

அழற்சியை எதிர்க்கும் தன்மை கொண்ட ஆலிவ் ஆயில், முழு தானியங்கள் உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் செரிமான மண்டலத்தில் ஏற்படும் நாள்பட்ட அலர்ஜியினால் எலும்பு மூட்டுகளில் பிரச்சனையை ஏற்படுத்த அதிகம் வாய்ப்புண்டு.

வயது முதிர்ச்சி

வயது முதிர்ச்சி

வயதானால் உடலில் எலும்புகளின் ஆரோக்கியம் குறைய ஆரம்பிக்கும். எனவே அடிக்கடி மருத்துவரை சந்தித்து மருத்துவரால் பரிந்துரை செய்யப்படும் வைட்டமின் மற்றும் கால்சியம் மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.

தண்ணீர் பருக வேண்டும்

தண்ணீர் பருக வேண்டும்

உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். உடலில் உள்ள நீரின் அளவு குறைந்தாலும் மூட்டுகளில் வலி ஏற்படக்கூடும். எனவே தினமும் போதுமான அளவு நீரை அருந்துவது மிக முக்கியம்.

பயிற்சிகள்

பயிற்சிகள்

சைக்கிள் ஒட்டுவது, நீச்சல் அடிப்பது போன்றவை மூட்டுகளுக்கு வலிமை அளிக்கும். இது போன்ற பயிற்சிகளை செய்யலாம். உங்களால் முடிந்த அளவிற்கு எடைகளை தூக்க வேண்டும். வெயிட் லிப்டிங் என்ற பெயரில் தூக்க முடியாத அளவிற்கு அதிக எடையை தூக்க கூடாது.

இது வேண்டாம்

இது வேண்டாம்

மூட்டுகளில் காயங்கள் அல்லது வலி ஏற்கனவே இருந்தால் அது குணமகும் வரை உடற்பயிற்சியில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். இல்லையெனில் உடல்நிலை மோசமாக அதிக வாய்ப்புகள் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do These Things to Get Healthier Bones

Do These Things to Get Healthier Bones
Story first published: Thursday, December 28, 2017, 12:10 [IST]