For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சர்க்கரைய பத்தி கொஞ்சம் கசப்பான தகவல்கள்!

  |

  இனிப்பு தான் பல்வேறு உடல் உபாதைகளின் ஆரம்பப்புள்ளி என்று சொல்லலாம். இனிப்பு பண்டங்கள் சாப்பிட்டால் தொடர்ந்து அடுத்தடுத்து சாப்பிட வேண்டும் என்று தோன்றிடும்.

  அன்றாடம் நாம் ருசிக்கும் சுவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டிருக்கிறது. தொடர்ந்து தினமும் சர்க்கரை எடுத்துக் கொண்டேயிருக்கிறோம்.

  Did You Know How Sugar Is Addictive

  இதனாலேயே ரத்தத்தில் சர்க்கரையளவு உயர்ந்து சர்க்கரை நோய்,ஒபீசிட்டி,பக்கவாதம்,இதயநோய் என வரிசைகட்டி வந்து நிற்கிறது. இனிப்புகளில் அப்படியென்ன இருக்கிறது உண்மையிலேயே அது அடிக்‌ஷன் தானா? இனிப்பினை சேர்க்க மூலப் பொருளான சர்க்கரையில் என்ன இருக்கிறது முழுதாக தெரிந்து கொள்ளலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  கரும்பு :

  கரும்பு :

  சர்க்கரையின் மூலதனம் கரும்பு. உலக அளவில் அதிக உற்பத்தி செய்யப்படும் பணப்பயிர்களில் கரும்பும் ஒன்று. உலக அளவில் கரும்பு விவசாயத்தில் இந்தியா இரண்டாவதாக உள்ளது. குறிப்பாக உத்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கரும்பு உற்பத்தி அதிகம். உலக நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. 1500 ஆம் ஆண்டுகளிலேயே வெள்ளை தங்கம் என்று அழைக்கப்படுகிறது இந்த சர்க்கரை.

  அறிமுகம் :

  அறிமுகம் :

  சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தெற்காசிய பசிபிக் பகுதிகளில்தான் கரும்பு முதன் முதலாக பயிரிடப்பட்டது.

  கி.மு.500 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர். பப்புவா நியூ கினியா நாட்டிலும் சர்க்கரை உற்பத்தி ஆரம்பமானது. இது கி.மு.100ம் ஆண்டில் சீனாவிற்கும் பரவியது.

  1492-ம் ஆண்டில் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு முன்னர் கானரி தீவுகளில் சில நாட்கள் தங்கியிருக்கும் பொழுது அந்த தீவின் இளவரசர் கரும்பு நாற்றுகளை அவருக்கு கொடுத்தார். அதன் மூலமாகத்தான் அமெரிக்காவிற்கு கரும்பு பரவியது.

  வெள்ளை சர்க்கரை தயாரிப்பு முறையை குப்தர் காலத்திலேயே உருவாக்கி விட்டனர்.பின்னர் மெல்ல மெல்ல உலகம் முழுவதும் வெள்ளைச் சர்க்கரை பரவத் துவங்கிவிட்டது.

  சர்க்கரை தயாரிப்பு :

  சர்க்கரை தயாரிப்பு :

  கரும்பு சர்க்கரையாக உருமாறுவதற்கு முன்னால் பல்வேறு கட்டங்களை கடக்க வேண்டியிருக்கிறது. முதலில் கரும்பு சாறு பிழியப்படும்.பின்னர் அதில் சுண்ணாம்பு சேர்க்கப்பட்டு கொதிக்க வைக்கப்படும்.

  பிறகு நன்றாக ஆறவைக்கப்படும். அப்போது இதன் நிறம் பழுப்பாக இருக்கும். பின்னர் அதனை பாளங்களாக வெட்டுவார்கள். இதனை அடுத்தக் கட்டமாக கார்பனேஷன் என்ற முறையில் மீண்டும் சுத்தப்படுத்தப்படும்.

  கார்பனேஷன் முறையில் கால்சியம் ஹைராக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு கலந்து சேர்க்கப்படும். பின்னர் கால்சியம் ஹைட்ராக்ஸைட் , பாஸ்பரிக் அமிலம் சேர்க்கப்பட்டு கரும்புச் சாற்றிலிருந்து அத்தனையும் நீக்கப்படும்.

  அடுத்த கட்டமாக ஆக்டிவேட்டட் கார்பன் என்கிற எலும்புச் சாமல் செலுத்தப்படுகிறது. இதனை செலுத்தவதால் தான் கரும்பு வெள்ளை வெளேர் என்று இருக்கிறது.வெள்ளை நிறத்தில் மாறிய சாறினை மீண்டும் கொதிக்க வைக்கப்படுகிறது. ஆறியதும் வைரத்தூள் போன்ற சர்க்கரை தயாராகிடும்.

  Image Courtesy

  நீக்கம் :

  நீக்கம் :

  கரும்புச் சாறு மொத்தம் மூன்று முறை கொதிக்க வைக்கப்படும். இதில் ஆவியாகிப் போகும் சத்துக்கள் பல. பிறகு சேர்க்கப்படும் பல்வேறு வேதிப் பொருட்களால் கரும்பில் இயற்கையாக கிடைக்கும் சத்துக்கள் அழிந்து விஷமாக மாறுகிறது.

  கரும்புச் சாற்றில் உடலுக்கு தேவையான விட்டமின்கள், கனிமங்கள்,நுண் ஊட்டப்பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் நீக்கப்பட்டு 260 கலோரிகள் கொடுக்கும் இனிப்பு சுவை ஏற்றப்படுகிறது.

  உடல் ஆரோக்கியத்தை தரக்கூடிய சத்துக்கள் ஏதுமில்லை வெறும் இனிப்பு சுவைக்காக அதுவும் நம் உடலுக்கு பெரும் தீங்கினை ஏற்படுத்தக்கூடிய சர்க்கரையை தொடர்ந்து எடுத்துக் கொண்டேயிருக்கிறோமே ஏன் தெரியுமா?

  எனர்ஜி பூஸ்டிங் :

  எனர்ஜி பூஸ்டிங் :

  நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லும் துரிதமாக செயல்படுவதற்கு எனர்ஜி மிகவும் அவசியமானதாகும். சர்க்கரை இந்த எனர்ஜியை வழங்குகிறது.

  சர்க்கரையை சாப்பிட்டவுடன் உடலுக்கு ஒரு புத்துணர்சி கிடைத்த உணர்வு ஏற்படும். அதனால் ஒரு அடிக்கஷனுக்கு ஆளாகிவிட்டோம். இது எப்படி நடக்கிறது என்றும் தெரிந்து கொள்ளுங்கள். சர்க்கரை சாப்பிட்டவுடன் அதனை குளோக்கோஸ்களாக மாற்றி நம் ரத்தத்தில் கலந்திடும்.

  ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக குளுக்கோஸ் சேரும் போது ரத்தச் சர்க்கரையளவு அதிகரித்திடும். நேரடியாக சர்க்கரை எடுப்பதற்கும் அதே இனிப்பான பழங்கள் அல்லது வேறு பொருட்கள் எடுப்பதற்கும் வித்யாசங்கள் உண்டு, சர்க்கரையில் இனிப்பைத் தவிர கலோரியைத் தவிர வேறொன்றும் இல்லை ஆனால் மத்தப் பொருட்களில் சர்க்கரையைத் தாண்டி பல்வேறு சத்துக்கள் இருக்கும்.

  மூளை :

  மூளை :

  மூளை துரிதமாக செயல்படுவதற்கு அதன் செயல்பாடுகளை தூண்டிவிடுவதற்கு குளோக்கோஸ் தேவையாக இருக்கிறது. குளோக்கோஸ் அதிகமாக கிடைப்பது சர்க்கரையில், அதனை சர்க்கரை எடுத்துக் கொண்டவுடன் மூளை சுறுசுறுப்படையும். இதனால் மீண்டும் மீண்டும் அதன் தேவை அதிகரித்து ஒரு கட்டத்தில் அடிக்‌ஷனுக்கு தள்ளப்படுகிறோம்.

  கொகைன் மற்றும் ஹெராயின் :

  கொகைன் மற்றும் ஹெராயின் :

  கொகைன் மற்றும் ஹிராயின் சாப்பிடுவதால் தூண்டப்படும் ஹார்மோன்கள் அதிகப்படியான சர்க்கரையை சாப்பிட்டாலும் தூண்டிவிடப்படுகிறது,இதனால் எவ்வளவு சர்க்கரை எடுத்தாலும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்ற உணர்வு மேலோங்குகிறது.

  நாக்கு :

  நாக்கு :

  நாக்கில் இரண்டு விதமான சுவையை அறியக்கூடிய சுவை நரம்புகள் மட்டுமே இருக்கிறது. அவற்றில் இனிப்பு சுவையை ஏற்பது எதுவும் இல்லை. தன்னால் கிரகத்துக் கொள்ள முடியாத சுவையுடைய ஒரு பொருளை நீங்கள் சாப்பிடும் போது அது மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டுகிறது.

  ஒவ்வொரு முறை சர்க்கரையை எடுக்கும் போதும் மூளைக்கு உற்சாகமான சிக்னல் கிடைக்கப்பெறுவதால் சர்க்கரை எடுத்துக் கொள்ளக்கூடிய அளவு மறந்துவிடுகிறது. நாளடைவில் அது ஒரு பழக்கமாகவே மாறிடுகிறது.

  எடை :

  எடை :

  சர்க்கரைக்கு அடிமையாவதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாக இருப்பது லெப்டின். கொழுப்பை கரைப்பது, உடல் எடை அதிகரிப்பது தொடர்பாக முக்கியப்பங்காற்றும் ஹார்மோன் லெப்டின்.

  இந்த ஹார்மோனில் ஏதேனும் பாதிப்புகள் உண்டானால் சர்க்கரை அதிகமாக சாப்பிடத்தோன்றிடும்.

  அதிகரித்தால் என்னாகும்? :

  அதிகரித்தால் என்னாகும்? :

  உடலுக்கு தேவையான சர்க்கரையை எனர்ஜியாக எடுத்துக் கொண்டது போக நிறைய குளுக்கோஸ் உடலில் இருந்தால் அது உடலுக்கு தீங்கையே ஏற்படுத்தும். சர்க்கரை சுவையைத் தேடித்தேடி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றிடும்.

  காரணமேயின்றி சோகமாக இருப்பது, எந்த வேலையையும் செய்ய விருப்பமின்றி எதற்கெடுத்தாலும் எமோஷனல் ஆவது போன்ற உணர்வுகள் ஏற்படும். அதோடு சர்க்கரை அளவு அதிகரித்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்திடும் என்பதால் அடிக்கடி உடல்நலக்குறைப்பாடு ஏற்படக்கூடும்.

  இதைத்தவிர சருமம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பது, பல்வலி,வாய் துர்நாற்றம் ஏற்படுவது,தொப்பை ஏற்படுவது போன்றவை உங்கள் உடலில் சர்க்கரை அதிகமாக சேர்ந்திருப்பதற்கு அறிகுறிகள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Did You Know How Sugar Is Addictive

  Did You Know How Sugar Is Addictive
  Story first published: Tuesday, October 17, 2017, 17:32 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more