எனர்ஜி ட்ரிங்க் குடிப்பதால் உண்டாகும் மோசமான விளைவுகளை தெரிந்து வைத்துள்ளீர்களா?

Posted By: Suganthi Rajalingam
Subscribe to Boldsky

நீங்கள் அதிகமான வேலை செய்கிறீர்கள் அல்லது ஒரு விளையாட்டு வீரராக இருக்கிறீர்கள் அல்லது கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்கிறீர்கள் என்னவாகும் உங்கள் எனர்ஜி எல்லாம் செலவழிந்து சோர்வடைந்து விடுவீர்கள் அல்லவா.

உடனே ஒரு எனர்ஜி ட்ரிங்கை எடுத்து குடித்து உங்கள் எனர்ஜியை மீண்டும் ஏத்திக் கொள்வீர்கள். இது சரிதானா? கண்டிப்பாக இல்லை தொடர்ந்து இந்த செயற்கை எனர்ஜி ட்ரிங்கை குடிப்பதால் இப்போ இல்லாவிட்டாலும் நாள்பட இதன் விளைவு மிகவும் உங்கள் உடல் நிலையை மோசாக்கி விடும்.

எனர்ஜி ட்ரிங்க்ஸ் மற்றும் பிட்சாவினால் கல்லீரல் புற்றுநோய் - பாடி பில்டர் கவலைக்கிடம்!!!

அதிகமாக இந்த எனர்ஜி ட்ரிங்கை இளைஞர்கள் தான் உபயோகிக்கின்றனர். இதைப் பற்றிய ஆராய்ச்சியானது டாக்டர் அமீலா ஆரியா என்பவர சென்டர் ஆன் யங் அடல்ட் ஹெல்த் ஆன்ட் டெவலப்மென்ட் என்ற அமைப்பு நீண்ட காலமாக எனர்ஜி ட்ரிங் குடிக்கும் இளைஞர்களிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Consuming Caffeinated Energy Drinks Can Be Dangerous; Switch To These Natural Energy Drinks

இதில் காஃபினேட்ட எனர்ஜி ட்ரிங்கை நீண்ட காலமாக குடிக்கும் இளைஞர்கள், கோக்கைன், ஆல்கஹால் மற்றும் நான்மெடிக்கலி யூஸ் ப்ரிஸ்கிரிப்ஷன் ஸ்ட்மிலஸ் (NPS) குடிக்கும் பழக்கமுள்ளவர்கள் பங்கு பெற்றனர்.

இந்த ஆராய்ச்சிக்கு 21-25 வயதுள்ள கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை 5 வருடங்கள் கண்காணித்தனர். தொடர்ந்த இடைவேளைகளில் அவர்களின் உடல்நலம், பழக்க வழக்கங்கள், எனர்ஜி ட்ரிங் உபயோகித்த அளவு மற்றும் போதை அடிமை போன்றவற்றை கண்காணித்தனர்.

இந்த 5 வருட ஆராய்ச்சி லிருந்து தெரிய வந்தது என்னவென்றால் மற்ற பழக்க வழக்கத்தில் இருந்த அடிமைத்தனத்தை விட எனர்ஜி ட்ரிங்கில் அடிமையாக இருந்தவர்களின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது. இதைப் பற்றிய தகவல் ட்ரக் ஆன்ட் ஆல்கஹால் டிப்பன்டன்ஸ் என்ற நாளிதழில் வெளியாகியுள்ளது.

எனவே எப்பொழுதும் இயற்கை பானங்கள் உடலுக்கு மிகவும் சிறந்தது. நிறைய இயற்கை பானங்கள் அதிகமாக கிடைக்கும் நிலையில் இருக்கின்றன. எனவே இதை எடுத்து பயன்பெறுவதே நல்லது.

Consuming Caffeinated Energy Drinks Can Be Dangerous; Switch To These Natural Energy Drinks

இளநீர்

இது ஒரு இயற்கை எலக்ட்ரோலைட் பானமாகும். இதில் நிறைய தாதுக்கள் மற்றும் பொட்டாசியம் உள்ளன. இதில் எந்த வித சுகரும் செயற்கை கலரும் இல்லை. இது உங்களுக்கு உடனடியாக எனர்ஜி தர உதவுகிறது.

லெமன் வாட்டர்

இதில் அதிகமான விட்டமின் சி உள்ளது. இது உங்களுக்கு உடனடியாக எனர்ஜி கொடுக்கும். ஒரு லெமனை எடுத்து தண்ணீரில் பிழிந்து நன்றாக கலக்கி குடித்தால் போதும்.

Consuming Caffeinated Energy Drinks Can Be Dangerous; Switch To These Natural Energy Drinks

வாழைப்பழம் ஜூஸ்

வாழைப்பழத்தில் பொட்டாசியம், விட்டமின்கள், மக்னீசியம், நார்ச்சத்து மற்றும் போலட் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. ஒரு கிளாஸ் வாழைப்பழம் ஜூஸ் குடித்தால் போதும் உடனடி எனர்ஜி பெற்று சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.

English summary

Consuming Caffeinated Energy Drinks Can Be Dangerous; Switch To These Natural Energy Drinks

Consuming Caffeinated Energy Drinks Can Be Dangerous; Switch To These Natural Energy Drinks
Story first published: Friday, August 11, 2017, 15:35 [IST]